கேரளாவின் வயநாடு மலைப்பகுதிகளில் மிக அதிகமான மழைப்பொழிவு காரணமாக ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு அனைத்து விதமான உதவிகளையும் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து பல உத்தரவுகளைப் பிறப்பிக்கிறது. அந்த வகையில் பாதிக்கப்பட்டவர்களின் காப்பீட்டுத் தொகை விரைவாக வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (LIC), நேஷனல் இன்சூரன்ஸ், நியூ இந்தியா அஷுரன்ஸ், ஒரியண்டல் இன்சூரன்ஸ் மற்றும் யுனைட்டட் இந்தியா இன்சூரன்ஸ் உள்ளிட்ட பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
வயநாடு, பாலக்காடு, கோழிக்கோடு, மலப்புரம் மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் அதிக அளவில் காப்பீட்டு திட்டங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் உள்ள தங்கள் காப்பீடுதாரர்களுக்கு உதவி செய்யும் வகையில், உள்ளூர் செய்தித்தாள்கள், சமூக வலைதளங்கள், நிறுவன வலைத்தளங்கள், SMS போன்ற பல்வேறு வழிகளில் காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் தொடர்பு விவரங்களை வழங்க முயற்சி செய்து வருகின்றன என்று நிதி அமைச்சகம் சனிக்கிழமை அன்று தனது அதிகாரப்பூர்வ X தலத்தில் தெரிவித்துள்ளது.

பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனாவின் கீழ் பாலிசிதாரர்களுக்கு க்ளைம் தொகையை விரைவாக வழங்குமாறு LIC நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல இன்ஷூரன்ஸ் கிளைம் செயல்முறையை எளிதாக்கும் நோக்கில் இன்சூரன்ஸ் பெறுவதற்கு தேவைப்படும் ஆவணங்கள் தளர்த்தப்பட்டுள்ளன. அதாவது தேவையான ஆவணங்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைக்கப்பட்டு, ஒரு சில ஆவணங்கள் மட்டுமே இன்சூரன்ஸ் தொகை பெறுவதற்கு கோரப்படுகிறது.
காப்பீட்டுத் தொகைகள் விரைவாகவும் சரியாகவும் வழங்கப்படுவதை உறுதி செய்ய காப்பீட்டு நிறுவனங்களுடன் பொது காப்பீட்டு கவுன்சில் ஒருங்கிணைத்து செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் க்ளைம் கோரிக்கையை விரைவாகச் செயல்படுத்தப்படுவதையும், விரைவாக தொகை செலுத்தப்படுவதையும் உறுதிசெய்து, அனைத்துக் காப்பீட்டாளர்களுக்கும் க்ளெய்ம் நிலையை தெரிவிக்க ஒரு போர்ட்டலும் உருவாக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் பாலிசி பெற்றவர் க்ளைம் தொகை குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள முடியும் என்றது நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் தாமதமின்றி கிடைக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.
ஜூலை 30-ஆம் தேதி அதிகாலையில் ஏற்பட்ட இந்த பெரிய நிலச்சரிவில் 215 பேர் இறந்துள்ளனர் மற்றும் 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போனதாக சந்தேகிக்கப்படுகிறது. இடிந்த வீடுகள் மற்றும் கட்டிடங்களில் தேடுதல் வேலைகள் நடந்து வருகின்றன.
வயநாட்டில் பேரிடர் பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், 206 பேர் காணாமல் உள்ளதாகவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் சனிக்கிழமை தெரிவித்தார்.
கேரளாவில் ஏற்பட்ட பேரழிவு நிலச்சரிவின் தாக்கத்தை எதிர்கொள்ளும் மக்களுக்கு அரசும், காப்பீட்டு நிறுவனங்களும் இனைந்து தீவிர நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. மக்களின் இழப்புகளை ஈடுசெய்யும் வகையில் காப்பீட்டுத் தொகை விரைவாகவும் எளிமையாகவும் வழங்கப்படுவதை உறுதி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications