பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 2.1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதி திரட்டும் திட்டத்தில் BPCL பங்குகளை விற்பனை செய்து 45,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை ஈட்டும் முயற்சியில் பல முன்னணி நிறுவனங்கள் விருப்பம் தெரிவிக்காத விலையில் வேதாந்தா உட்பட 4 நிறுவனங்கள் விருப்ப விண்ணப்பம் கொடுத்துள்ளது.
இந்நிலையில் மத்திய அரசு சிறப்பு உலோகத்தைத் தயாரிக்கும் மிஷ்ரா தாட்டு நிகாம் (MIDHANI) நிறுவனத்தில் சுமார் 10 சதவீத பங்குகளை விற்பனை செய்யத் திட்டமிட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.மத்திய அரசு பாதுகாப்புத் துறையில் 74 சதவீதம் வரையிலான அன்னிய முதலீட்டுக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் சிறப்பு உலோகத்தைத் தயாரிக்கும் மிஷ்ரா தாட்டூ நிகாம் (MIDHANI) நிறுவனத்தின் பங்குகளை வாங்க
அன்னிய முதலீட்டாளர்கள் அதிகளவில் விரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு பாதுகாப்புத் துறையில் 74 சதவீதம் வரையிலான அன்னிய முதலீட்டுக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் சிறப்பு உலோகத்தைத் தயாரிக்கும் மிஷ்ரா தாட்டூ நிகாம் (MIDHANI) நிறுவனத்தின் பங்குகளை வாங்க அன்னிய முதலீட்டாளர்கள் அதிகளவில் விரும்புவார்கள் என எதிர்பார்க்கிறது.

பங்குச்சந்தை
மிதானி நிறுவனத்தின் 10% பங்குகளை மத்திய அரசு ஆஃபர் பார் சேல் பிரிவு மூலம் விற்பனை செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், மிதானி நிறுவனம் இதுகுறித்து எவ்விதமான பதிலையும், விளக்கத்தையும் இதுவரை அறிவிக்கவில்லை.

ஐபிஓ
பாதுகாப்பு துறையைச் சார்ந்த பொதுத்துறை நிறுவனமான இந்த மிஷ்ரா தாட்டூ நிகாம் ஏப்ரல் 2018ஆம் ஆண்டுப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுச் சுமார் 26 சதவீத பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் 438 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைப் பெற்றது.
இந்நிலையில் இந்த நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை விற்பனை செய்ய உள்ளது.

மிஷ்ரா தாட்டூ நிகாம்
இந்நிறுவனம் ஹைதராபாத் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு ஸ்பெஷல் ஸ்டீல், சூப்பர் அலாய், இந்தியாவில் டைட்டானியம் உற்பத்தி செய்யும் ஒரே நிறுவனமாக உள்ளது.
இந்நிறுவனத்தின் தயாரிப்புகளான ஸ்பெஷல் ஸ்டீல், சூப்பர் அலாய் பெரும்பாலும் பாதுகாப்பு, அணுசக்தி மற்றும் விண்வெளி ஆராய்ச்சி துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.

2.1 லட்சம் கோடி ரூபாய்
மத்திய அரசின் 2.1 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டும் திட்டத்தில் 1.20 கோடி ரூபாய் அளவிலான நிதியை பொதுத்துறை நிறுவனங்களில் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் பங்குகளை விற்பனை செய்து திரட்டவும், மீதமுள்ள 90,000 கோடி ரூபாயை நிதித்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் திரட்ட திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத்தின் ஒரு பகுதி தான் தற்போது மிஷ்ரா தாட்டூ நிகாம் நிறுவனத்தின் 10 சதவீத பங்குகள்.