Fastag: டிசம்பர் 15 முதல் டோல்கேட்டில் பாஸ்டேக் கட்டாயம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று முதல் இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் பாஸ்டேக் சிஸ்டம் கட்டாயம் என்று கூறப்பட்டது. அதிலும் இன்று முதல் வாகனங்களில் பாஸ்டேக் இல்லாவிட்டால், இரு மடங்கு கட்டணம் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் இது டிசம்பர் 15 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

இதன் மூலம் வாகனங்கள் வரிசையில் காத்துக் கிடப்பது பிரச்சினையாக இருக்காது என்றும் கருதப்பட்டது.

சுங்கக் கட்டணம் செலுத்துவதில் தாமதம், சில்லறை வழங்குவதில் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் வாகனங்கள் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்துக்கிடக்க வேண்டியுள்ளது. இந்த நிலையிலேயே இப்படி திட்டத்தினை அரசு அறிமுகப்படுத்தியது.

கால அவகாசம் நீடிப்பு

கால அவகாசம் நீடிப்பு

இதன் மூலம் இன்றிலிருந்து இந்த திட்டமானது அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னும் பலர் இந்த பாஸ்டேக்-ஐ வாங்காத நிலையில், மேலும் 15 நாட்கள் கால அவகாசம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சுங்கச் சாவடிகளில் காத்துக்கிடக்கும் இப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் ஃபாஸ்டேக் கட்டண முறை அமலுக்கு வந்தது.

டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் செலுத்தலாம்

டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் செலுத்தலாம்

இதன் மூலம் சுங்கக் கட்டணத்தை டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாகச் செலுத்தலாம் என்பதால் சுங்கச் சாவடிகளில் நெரிசல் குறையும். இது கடந்த 2014ஆம் ஆண்டிலேயே இந்த பாஸ்டேக் முறை பயன்பாட்டுக்கு வந்துவிட்ட நிலையில், அதிலும் கடந்த 2016ம் ஆண்டில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகு பாஸ்டேக் முறை அதிகமாக ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.

சிறிய அளவிலான ஸ்டிக்கர்
 

சிறிய அளவிலான ஸ்டிக்கர்

பாஸ்டேக் என்பது சிறிய காந்தத்துடன் கூடிய ஸ்டிக்கர் போன்ற அமைப்பாகும். இது ஆர்.எஃப்.ஐ.டி. தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. சுங்கச் சாவடியைக் கடக்கும் போது, வாகனங்களின் முன்பக்கக் கண்ணாடியில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கர்கள் தானாக ஸ்கேன் செய்யப்பட்டு, அந்த வாகனத்துக்கான சுங்கக் கட்டணம் அதன் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாகப் பிடித்தம் செய்யப்படும். இதன் மூலம் வாகனங்கள் பல நிமிடங்கள் காத்துக் கிடக்க வேண்டிய அவசியம் இல்லை.

பிரச்சனை குறையும்

பிரச்சனை குறையும்

இதன் மூலம் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கும் பிரச்சினை குறைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையிலேயே சுங்கச் சாவடிகளில் டிஜிட்டல் வழிக் கட்டணங்களை மட்டுமே ஏற்கும் விதிமுறையை மத்திய அரசு கட்டாயமாக்கியது. இது டிசம்பர் 1ம் தேதி முதல் நாட்டிலுள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் பாஸ்டேக் கட்டண முறை கட்டாயமாக்கப்படுவதாக மத்திய அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்பே அறிவித்தது.

பாஸ்டேக் பெறுவதில் தாமதம்

பாஸ்டேக் பெறுவதில் தாமதம்

பாஸ்டேக் பெறுவதில் கால தாமதம் ஏற்படுவதைக் கருத்தில்கொண்டு தற்போது அதற்கான கால வரம்பை டிசம்பர் 15ஆம் தேதி வரையில் நீட்டித்துள்ளது மத்திய அரசு. மேலும் பாஸ்டேக் அட்டைகளை வழங்க வங்கிகள் எவ்விதக் கட்டணமும் வசூலிக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும் இம்முறை கால அவகாசம் வழங்கப்பட்டாலும், மீண்டும் ஒரு முறை இப்படி அவகாசம் கிடைக்குமா? என்பது சந்தேகம் தான். இதனால் இன்னும் பாஸ்டேக் வாங்காதவர்கள் விரைவில் வாங்கி வைத்துக் கொள்வது மிக நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: fastag
English summary

Govt postpones fastag implementation to December 15

Govt postpones fastag implementation to December 15, instead of December 1.
Story first published: Sunday, December 1, 2019, 12:14 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X