மத்திய அரசு வர்த்தக வளர்ச்சிக்காகவும், முதலீட்டை ஈர்க்க வேண்டும் என்பதற்காக அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்து தனியார்மயமாக்கும் திட்டத்தில் இறங்கியது அனைவருக்கும் தெரியும்.
இத்திட்டத்தின் கீழ் 300க்கும் அதிகமான அரசு நிறுவனங்கள் பரிசீலனையில் இருந்த நிலையில் தற்போது இதன் எண்ணிக்கை வெறும் 12 நிறுவனமாகக் குறைக்கப்பட உள்ளது.

பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையில் அரசு நிறுவனங்களைத் தனியார்மயமாக்கும் திட்டத்தை அறிவித்த நிலையில், பல நிறுவனங்கள் அரசு கண்காணிப்பில் இருந்தது.
இந்நிலையில் இத்திட்டத்தின் கீழ் 300க்கும் அதிகமாக நிறுவனங்கள் முதல் கட்டமாகக் கண்காணிப்புக்குக் கொண்டு வர நிலையில், தற்போது வெறும் 12 நிறுவனங்களை மட்டுமே வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதைத் தாண்டி பட்ஜெட் அறிக்கையில் கொரோனா காலத்தில் ஏற்பட்ட வர்த்தகப் பாதிப்பின் காரணமாக இந்திய வங்கிகளில் வாராக் கடன் அதிகமாக இருந்த நிலையில், முதலீட்டாளர்களுக்கும் பெரும் சுமையாக மாறியது.
இதனால் வராக் கடன் வசூலிக்கத் தனி வங்கியை உருவாக்கும் திட்டத்தை மத்திய அரசு தனது பட்ஜெட் அறிக்கையில் அறிவித்தது. இதுமட்டும் அல்லாமல் பொதுத்துறை வங்கியில் இருக்கும் கடன் இப்புதிய வங்கிகளுக்கு மாற்றப்படும் காரணத்தால் பொதுத்துறை வங்கிகளின் நிதி நிலை பெரிய அளவில் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளையில் 2022ஆம் நிதியாண்டில் இரண்டு பொதுத்துறை வங்கிகளையும், ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தையும் தனியார்மயமாக்கும் திட்டத்தையும் அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த 12 நிறுவனங்களில் எந்த நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட வேண்டும், தேர்வு செய்யப்பட்ட நிறுவனத்தில் எவ்வளவு சதவீத பங்குகளை விற்பனை செய்ய வேண்டும் என்ற திட்டத்தை மத்திய அரசின் திங் டேங்க் அமைப்பான நித்தி அயோக் அமைப்பு முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications