சமையல் எண்ணெய் விலை உயரப் போகுது.. இறக்குமதி வரியை உயர்த்திய மத்திய அரசு..!

டெல்லி: மத்திய அரசு சுத்திகரிக்கப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்படாத சமையல் எண்ணெய்களுக்கான இறக்குமதியை வரியை உயர்த்தியுள்ளது. இதனால் பாமாயில், சோயா ஆயில், சன் ஃபிளவர் ஆயில் ஆகியவற்றின் விலை உயர உள்ளது.
மத்திய அரசின் நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி , சுத்திகரிக்கப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்படாத சமையல் எண்ணெய்களுக்கான அடிப்படை இறக்குமதி வரியை 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

இது செப்டம்பர் 14ஆம் தேதி முதலே அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளது. எனவே இனி வரும் நாட்களில் சமையல் எண்ணெய்களின் விலை உயரப் போகிறது. ஆனால் உள்ளூர் எண்ணெய் வித்து விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கத்திலேயே இறக்குமதி வரியை உயர்த்தி இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

 சமையல் எண்ணெய் விலை உயரப் போகுது.. இறக்குமதி வரியை உயர்த்திய மத்திய அரசு..!


இதன் மூலம் பாமாயில், சோயா ஆயில் மற்றும் சன் ஃபிளவர் ஆயில் ஆகியவற்றின் விலை உயரும் என்றும் இறக்குமதி குறையும் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் உள்ளூரில் இருந்து எண்ணெய் வித்துகள் வாங்கி எண்ணெய் உருவாக்குவது அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சுத்திகரிக்கப்படாத பாமாயில், சோயா ஆயில் மற்றும் சன் ஃபிளவர் ஆயில் ஆகியவற்றின் மீதான இறக்குமதி வரி என்பது 5.5 சதவீதத்தில் இருந்து 27.5 சதவீதம் இன அதிகரித்துள்ளது. ஏனெனில் இறக்குமதி வரியோடு மத்திய அரசு இதற்க்கு வேளாண் உள் கட்டமைப்பு மற்றும் மேலாண் செஸ் வரியையும் விதிக்கிறது.

அதே போல சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மற்றும் சோயா ஆயில் மற்றும் சன் ஃபிளவர் ஆயிலுக்கு இறக்குமதி வரி 13.75 சதவீதமாக இருந்து தற்போது 35.75 சதவீதம் என உயர்ந்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை தேவையான சமையல் எண்ணெயில் 70% வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. குறிப்பாக இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து பாமாயில் பெருமளவில் இறக்குமதி செய்யப்படுகிறது.

சோயா மற்றும் சன் ஃபிளவர் ஆயில் அர்ஜென்டினா, பிரேசில், ரஷ்யா மற்றும் யுக்ரைனில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுகிறது. முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதமே ராய்ட்டர்ஸ் நிறுவனம் மத்திய அரசு சமையல் எண்ணெய்கள் மீதான இறக்குமதி வரியை அதிகரிக்க திட்டமிட்டு இருப்பதாக செய்தி வெளியிட்டது. சமையல் எண்ணெய் இறக்குமதியை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் தரப்பில் மத்திய அரசிடம் தொடர்ச்சியாக கோரிக்கை முன் வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சோயா விவசாயிகள் அண்மையில் கூட அரசிடம் இது தொடர்பாக கோரிக்கை விடுத்தனர்.

தற்போது சமையல் எண்ணெய்களின் இறக்குமதி வரி 20 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதால் அவற்றின் சில்லறை விற்பனை விலையும் உயர இருக்கிறது. இதனால் சாமானிய மக்கள் சமையல் எண்ணெய்க்கு தங்கள் பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.

Written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+