இந்தியாவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு மற்றும் எரிபொருள் சில்லரை விற்பனையாளர்களில் ஒருவரான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம், தனக்கு சொந்தமான நுமலிகர் நிறுவனத்தின் 61.65% பங்குகளை சமீபத்தில் விற்றது.
இதன் மதிப்பு 9,876 கோடி ரூபாயாகும். இந்த நிறுவனத்தின் இந்த பங்கினை கன்சோர்டியம் ஆஃப் ஆயில் மற்றும் இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனங்கள் 49% பங்கினையும், 13.65% பங்கினை அசாம் அரசும் வாங்கின.
பிபிசிஎல் நிறுவனம் விற்ற பங்குகள்
இந்த நிறுவனத்தினை அசாம் அரசு பொதுத்துறை நிறுவனமாக வைக்க முடிவு முடிவு செய்திருந்த நிலையில் தான், பிபிசிஎல் நிறுவனம் தன்னிடம் இருந்த 61.65% விற்பனை செய்ய முடிவு செய்தது. இதனையடுத்து தான் இரு அரசு நிறுவனங்களுக்கும் தனிடம் இருந்த பங்கினை பிபிசிஎல் விற்பனை செய்தது.
சிறப்பு டிவிடெண்ட்
இவ்வாறு தனியார்மயமாக்கலுக்கு உட்பட்ட நிலையில், தற்போது பிபிசிஎல் நிறுவனத்திடம் இருந்து அரசுக்கு டிவிடெண்டாக 6,665 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக தீபமின் செயலாளர் தெரிவித்துள்ளார். இது 2020 - 21ம் ஆண்டிற்கான கடைசி டிவிடெண்டினை அரசு பெற்றுள்ளது. இது நுமலிகர் நிறுவனத்தின் பங்கினை பிபிசிஎல் விற்றுள்ள நிலையில், அதன் மூலம் கிடைத்த சிறப்பு டிவிடெண்டும் அடங்கும் என தெரிவித்துள்ளது.
பிபிசிஎல் பங்கு விற்பனை
இந்த நிலையில் தற்போது அரசு தன்னிடம் உள்ள பிபிசிஎல் நிறுவனத்தின் 52.98% பங்கினை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. பிபிசிஎல்லின் பங்கினை வாங்க வேதாந்தா குழுமம் மற்றும் தனியார் பங்கு நிறுவனமான அப்பல்லோ குளோபல் மற்றும் ஐ ஸ்கொயர் கேபிட்டல் உள்ளிட்ட நிறுவனங்களும் ஆர்வம் தெரிவித்துள்ளன.
பிபிசிஎல் முக்கிய பங்கு
நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் பிபிசிஎல் நிறுவனத்தின் பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் நிர்ணயம் செய்யப்பட்ட 1.75 லட்சம் கோடி ரூபாய் இலக்கில் பிபிசிஎல் பங்கு விற்பனை முக்கிய பங்கு வகிக்கும் எனலாம்.
இப்படி தனியார்வசம் விற்றுவிட்டால், அதன்பிறகு மத்திய அரசுக்கு இதுபோன்ற டிவிடெண்ட் வருவாய் என்பதும் வெகுவாக குறைந்து விடும் என்பதும் மறுக்க முடியா உண்மையே.


Click it and Unblock the Notifications