மாற்றுத்திறனாளிகள் ஹேப்பி!! பதவி உயர்வில் 4% இட ஒதுக்கீடு அளித்து தமிழக அரசு உத்தரவு..

சென்னை: தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அரசு பணிகளில் இருக்கக்கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான ஒரு உத்தரவை அரசு வெளியிட்டுள்ளது.

அரசு பணிகளில் இருக்கக்கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என நீண்ட காலமாக மாற்றுத்திறனாளிகள் தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், அரசு பணிகளில் பதவி உயர்வுகளில் மொத்தமுள்ள பணியிடங்களில் 4 சதவீதத்தை மாற்றுத்திறனாளிகளுக்கு என ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தெரிவித்திருக்கிறது. உயர்மட்ட குழுவின் பரிந்துரையை ஏற்று அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 40% வரை மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு அரசு பணிகளில் வாய்ப்பு தரப்படுகிறது. இனி இவர்கள் பதவி உயர்வையும் பெற இருக்கின்றனர்.

மாற்றுத்திறனாளிகள் ஹேப்பி!! பதவி உயர்வில் 4% இட ஒதுக்கீடு அளித்து தமிழக அரசு உத்தரவு..

மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்துறை செயலர் மதுமதி இது தொடர்பாக வெளியிட்டுள்ள உத்தரவில், இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட திருத்தங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமை சட்டம் 2016ல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இதன்படி பார்வையற்ற மற்றும் குறைந்த பார்வை திறன் உடையவர்களுக்கு பதவி உயர்வில் 1 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

செவித்திறன் அற்றவர்கள் மற்றும் குறைந்த அளவு ஒலியை உணரும் திறன் பெற்றவர்கள் 1 சதவீத இட ஒதுக்கீடு பெறுகின்றனர். அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள் , சற்கர நாற்காலி உதவியுடன் தினசரி வாழ்வை நடத்துவர்கள் , மஸ்குலர் டிஸ்டிரோபியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட உள்ளது. அதே போல ஆட்டிசம், கற்றல் குறைபாடு மற்றும் மனநல பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகளை கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 1 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்துறை சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஆலோசித்து எந்தெந்த பதவிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு பொருத்தமானதாக இருக்கும் என்பதை தெரிவிக்கும் என அரசின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி ஊழியர் ஒருவர் ஏற்கனவே பதவி உயர்வுக்கான தகுதிகளை பெற்று அதற்கான பட்டியலில் இடம்பெற்றிருக்கார், ஆனால் குறிப்பிட்ட அந்த வேலை மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்டது இல்லை என்றால் கூட அவருக்கு பதவி உயர்வு வழங்கிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பதவி உயர்வு வழங்கும் போது மாற்றுத்திறனாளி ஊழியரின் மாற்றுத்திறன் அளவு மருத்துவ சான்றிதழ் ஆகியவை ஆய்வு செய்யப்படும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவின் மூலம் மாற்றுத்திறன் கொண்டவர் என்பதற்காக வழங்கப்படாமல் இருந்த பதவி உயர்வுகள் அவர்களுக்கு இனி கிடைக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+