இந்தியாவில் நிறுவனங்களில் வேலை செய்யக்கூடிய ஊழியர்களின் ஓய்வு கால நிதி பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய வகையில் ஈபிஎப்ஓ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி பிஎப் கணக்கு தொடங்கப்பட்டு அந்த ஊழியரின் கணக்கில் மாதம்தோறும் பணம் வரவு வைக்கப்படும். இதில் ஒரு கணிசமான தொகை ஓய்வூதியதற்காக ஒதுக்கீடு செய்யப்படும்.
குறிப்பிட்ட அந்த ஊழியர் பணி ஓய்வு பெறும்போது பிஎப் கணக்கில் இருக்கக்கூடிய பணம் மொத்த தொகையாகவும் ஓய்வூதி கணக்கில் இருக்கக்கூடிய பணம் மாதாந்திர ஓய்வூதிய தொகையாகவும் கைகளுக்கு கிடைக்கும். இந்த நிலையில் தற்போது பிஎப் திட்டத்தின் கீழ் வழங்கப்படக்கூடிய ஈபிஎஸ் குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகை 1000 ரூபாயாக இருக்கிறது. அதாவது இந்த திட்டத்தின் கீழ் பங்களிப்பு செய்த ஊழியர்களுக்கு மாதந்தோறும் குறைந்தபட்சம் 1000 ரூபாய் ஓய்வூதிய தொகையாக கிடைக்கிறது.

இது கடந்த 2014 ஆம் ஆண்டு உயர்த்தப்பட்ட தொகை அதன் பிறகு இந்த 10 ஆண்டுகளில் பணவீக்கம் உயர்ந்து விட்டது , விலைவாசி உயர்ந்துவிட்டது , வாழ்க்கை செலவினங்கள் அதிகரித்துவிட்டன ஆனால் இந்த குறைந்தபட்ச ஓய்வூதிய தொகை என்பது உயர்த்தப்படவே இல்லை. இதனை 10,000 ரூபாயாகவோ அல்லது 7500 ரூபாயாகவோ உயர்த்த வேண்டும் என ஓய்வூதியதாரர்கள் தரப்பிலும் பல்வேறு அமைப்புகள் தரப்பிலும் மத்திய அரசுக்கு தொடர்ச்சியாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட வண்ணம் இருக்கின்றன.
இந்த நிலையில் மாநிலங்களவையில் இந்த பிரச்சனையை முன்வைத்து கேள்வி எழுப்பப்பட்டது. மகாராஷ்ட்ரா மாநில எம்பி விஷ்ராம் குல்கர்னி தற்போது வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகை எதற்குமே பத்தாது என தெரிவித்திருக்கிறார். இந்த ஓய்வூதிய தொகை உயர்த்தும் திட்டம் அரசிடம் இருக்கிறதா அப்படி இருந்தால் எவ்வளவு தொகையாக உயர்த்தப் போகிறீர்கள் என கேள்வி எழுப்பி இருக்கிறார்.
அதற்கு பதில் அளித்து இருக்கும் தொழிலாளர் துறை அமைச்சகம் ஈபிஎஸ் 1995 ஓய்வூதியம் என்பது 1995 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தொழிலாளர் ஓய்வூதிய திட்டம் , இது வரையறுக்கப்பட்ட பங்களிப்பு - வரையறுக்கப்பட்ட சமூக பாதுகாப்பு திட்டம் எனக் கூறியிருக்கிறார். அதாவது ஓய்வூதிய நிதி தொகுப்பு என்பது மத்திய அரசின் 1.16 சதவீத பங்களிப்பு, நிறுவனத்தின் 8.33 சதவீத பங்களிப்பு என்ற அடிப்படையில் தான் வரையறுக்கப்பட்டுள்ளது எனக் கூறியிருக்கிறார்.
அரசாங்கம் தற்போது ஈபிஎஸ் ஓய்வூதியதாரர்களுக்கு மாதத்திற்கு குறைந்தபட்ச 1000 ரூபாய் ஓய்வூதியத்தை பட்ஜெட் ஆதரவு மூலம் தான் வழங்குகிறது என தெளிவுபடுத்திருக்கிறார். இந்த ஆதரவும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மூலம் ஓய்வூதிய திட்டத்திற்கு மத்திய அரசு செய்யும் 1.16 சதவீத பங்களிப்பிற்கும் மேலாகும் எனக் கூறியிருக்கிறார். எனவே கூடுதலாக ஓய்வூதியம் வழங்குவது என்பதை அரசு வருங்கால நிதி தேவைகளை எல்லாம் கணக்கில் கொண்டு தான் முடிவெடுக்க முடியும் என கூறியுள்ளார்.
ஓய்வூதிய தொகையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை இருந்தாலும் உடனே உயர்த்தப்படுமா என்ற உறுதிமொழியை வழங்கவில்லை, இது எதிர்கால நிதி பொறுப்புகளையும் பட்ஜெட் ஒதுக்கீடுகளையும் கொண்டே முடிவெடுக்கப்படும் என பதில் தந்துள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications