கொரோனாவின் எதிரொலியாக இந்தியாவில் பல கோடி மக்கள் தங்களது வேலைவாய்ப்பை இழந்து தவித்து வந்த நிஸையில மத்திய அரசு மக்களின் கடன் சுமையை குறைக்க வேண்டும் என்பதற்காக 6 மாத கடனுக்கான தவணை அதாவது ஈஎம்ஐ செலுத்த சலுகை கொடுத்திருந்தது.
இந்த சலுகை தனிமனிதர்களுக்கு மட்டுமல்லாமல் நிறுவனங்களுக்கும் கிடைக்கும் என்பதால் பல கோடி மக்கள் இந்த கடன் சலுகையை பெற்றனர்.
ஆகஸ்ட் 31 முதல் இந்த கடன் சலுகை முடிந்துவிட்ட நிலையில் கொரோனாவால் வேலை மற்றும் வருமானத்தை இழந்த தனிநபர்கள் மற்றும் வர்த்தகத்தை இழந்த வர்த்தகர்கள் என பல ஆயிரம் பேர் தற்போது கடன் திருப்பி செலுத்த முடியாமல் நிற்கின்றனர்.
மறுசீரமைப்பு
வங்கியில் பெற்ற கடனை செலுத்த முடியாத கணக்குகளின் கடனை மறுசீரமைப்பு செய்ய மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்த நிலையில், தனியார் வங்கிகள் மறு கடன் கொடுக்கவும், அதிகளவிலான கடனை கொடுத்து வராக்கடன் அளவை கடுப்படுத்த பங்குகள் மற்றும் பத்திர விற்பனை மூலம் அதிகளவிலான நிதிதிரட்டியிருக்கும் நிலையில், பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசு சுமார் 20,000 கோடி ரூபாய் அளவிலான நிதியை இந்திய பொதுத்துறை வங்கி அமைப்பிற்குள் உட்செலுத்த முடிவு செய்துள்ளது.
20,000 கோடி ரூபாய்
இந்திய பொதுத்துறை வங்கிகளில் வாரக்கடன் அளவ குறைத்த மத்திய அரசு சுமார் 20,000 கோடி ரூபாய் அதாவது 2.72 பில்லியன் டாலர் அளவிலான தொகையை உட்செலுத்த முடிவு செய்துள்ளது. இதற்கான இறுதி ஒப்புதல் பெற நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு
கொரோனாவால் ஏற்படும் வராக்கடனை சமாளிக்க மத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதமே பொதுத்துறை வங்கிகளுக்கு நிதியுதவி அளிப்பதாக அறிவித்த நிலையில், தற்போது அதற்கான பணிகளை செய்து வருகிறது.
வராக்கடன் நாட்டின் பொருளாதாரத்தையும், வங்கியின் நிதிநிலையை மிகப்பெரிய அளவில் பாதிக்கும் என்பதல் தனியார் வங்கிகள் இதனை சமாளிக்க அதிகளவிலான நிதியை திரட்டியுள்ளது. இதேபோல் பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசு உதவி செய்கிறது.
வராக்கடன்
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் மார்ச் 2020ல் இந்திய வங்கித்துறையில் இருக்கும் 8.5 சதவீத வராக்கடன் கொரோனாவால் ஏற்பட்ட வர்த்தகம் மற்றும் பொருளாதார பாதிப்பால் வராக்கடன் அளவு 12.5 சதவீதமாக உயரும் என கணிப்புகளை வெளியிட்டுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications