மேற்காசிய நாடுகளில் நிலவிவரும் போர் காரணமாக இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் வரத்து நின்று போயிருக்கிறது. இதன் காரணமாக இந்தியா தற்போது ரஷ்யா போன்ற மற்ற நாடுகளிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி பயன்படுத்தி வருகிறது.
ஈரான் போர் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு கச்சா எண்ணெய் விலை பல மடங்கும் உயர்ந்திருக்கிறது. இந்தியா தனக்கு தேவையான பெரும் அளவிலான கச்சா எண்ணெயை வெளிநாடுகளில் இருந்து தான் வாங்குகிறது. இதனால் தான் ஈரான் போர் இந்திய கச்சா எண்ணெய் வரத்துக்கு பெரிய தடையாக வந்து நிற்கிறது. ஹார்முஸ் ஜலசந்தியில் வழக்கம் போல கப்பல்கள் போக்குவரத்து நடந்தால் தான் நிலைமை சீராகும்.

ஏற்கனவே இந்தியாவில் எல்பிஜி தட்டுப்பாடு ஏற்பட்டு வணிக பயன்பாட்டு சிலிண்டர் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அடுத்ததாக பெட்ரோல் டீசலும் தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் இந்திய மக்கள் மத்தியில் நிலவுகிறது. இந்த சூழலில் மத்திய அரசு இந்தியாவிடம் போதுமான அளவு பெட்ரோல், டீசல் கையிருப்பு இருக்கிறது மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் , அடுத்த 60 நாட்களுக்கு தேவையான அளவு இருப்பு நம்மிடம் இருக்கிறது என கூறியுள்ளது.
பதற்றம் அடைந்து வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிலையங்களில் சென்று குவிய வேண்டாம் என தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டு வருகிறது. இதற்கிடையே எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் கச்சா எண்ணெய் விலை பல மடங்கு உயர்ந்திருப்பதால் பெட்ரோல், டீசல் விற்பனையில் தங்களுக்கு பெரிய அளவு நஷ்டம் ஏற்படுவதாக கூறியிருந்தன. எனவே மத்திய அரசு இன்றைய தினம் பெட்ரோல் மீதான கலால் வரியை 13 ரூபாயிலிருந்து 3 ரூபாய் என்றும் டீசல் மீதான கலால் வரியை 10 ரூபாயிலிருந்து பூஜ்ஜியமாகவும் குறைத்திருக்கிறது.
இதனால் அரசுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டிருக்கிறது. இருந்தாலும் பொதுமக்களுக்கு தற்போதுள்ள விலையிலேயே தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறது. இதற்கிடையே பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறையும் மதிப்பாய்வு செய்யப்படும் என மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் தலைவரான விவேக் சதுர்வேதி தெரிவித்திருக்கிறார்.
மேற்காசியாவில் நடைபெற்று வரும் மோதலால் உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் அதற்கேற்ற வகையில் நிலைமையை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் விதமாக மத்திய அரசு ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறையும் பெட்ரோல், டீசல் விலைகளை மதிப்பாய்வு செய்யும் என அவர் கூறியிருக்கிறார். அமைச்சர்களுக்கு இடையிலான கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சதுர்வேதி, ஈரான் போர் காரணமாக சர்வதேச கச்சா எண்ணெய் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ள நிலையில் அரசின் பதில் நடவடிக்கை மிகவும் திட்டமிடப்பட்டதாக இருந்து வருகிறது என விளக்கம் தந்துள்ளார்.
தற்போது மிக சவாலான சூழல் இருக்கிறது ஒவ்வொரு நாளும் நிலைமை மாறிக்கொண்டே இருக்கிறது வழக்கம் போல எதையும் நாம் கணிக்க முடியாது நாம் கடினமான காலங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறையும் அரசு கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் உள்நாட்டு நுகர்வு போக்குகள் உட்பட மாறி வரும் சூழ்நிலையை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல் விலையை மதிப்பாய்வு செய்யும் எனக் கூறியுள்ளார்.
மதிப்பாய்வு என்றால் ஒவ்வொரு 15 நாட்களுக்கும் விலை மாறும் என அர்த்தம் இல்லை. பெட்ரோல், டீசலுக்கான வரியை குறைப்பது போன்ற கொள்கை முடிவுகளை எடுப்பதற்கான மதிப்பாய்வாகவே இது இருக்கும். அரசு கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள சுமையை மக்கள் மீது திணிக்க கூடாது என்பதில் கவனமாக இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications