சர்வதேச அளவில் செமிகண்டக்டர்களுக்கு பெரிய தேவை உருவாகியுள்ளது. இவை பெரும்பாலும் தைவான் நாட்டில் தான் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்நிலையில் செமிகண்டக்டர் உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு ஒரு புறம் தீவிரம் காட்டி வரும் நிலையில் தனியார் நிறுவனங்களும் கூட செமிகண்டக்டர் ஆலைகளை நிறுவ ,முயற்சிகளை எடுத்துள்ளன. இந்த நிலையில் விரைவில் பாரத் செமிகண்டக்டர் ஆராய்ச்சி மையம் நிறுவப்படும் என அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

ஐஐடி மாநாட்டில் உரை: தேசிய ஆராய்ச்சியாளர்கள் உச்சி மாநாடு சென்னை ஐஐடியில் நடைபெற்றது. இதன் தொடக்க விழாவுக்கு சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி தலைமை வகித்தார். மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் காணொலி காட்சி மூலம் மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
அப்போது செமிகண்டக்டர் துறையை விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. விரைவில் பாரத் செமிகண்டக்டர் ஆராய்ச்சி மையம் நிறுவப்பட உள்ளது. இது வருங்காலத்தில் அனைத்து துறைகளுக்கும் பயன்படும் செமிகண்டக்டர் கண்டுபிடிப்புகளுக்கான மையமாக செயல்படும் என அறிவித்தார்.
விரைவில் செமிகண்டக்டர் ஆராய்ச்சி மையம்: துறை சார்ந்த வல்லுனர்கள் மற்றும் தனியார் பங்களிப்புடன் இணைந்து செமிகண்டக்டர் ஆராய்ச்சி மையம் நிறுவப்பட உள்ளது. இது உலக தரத்திலான ஆய்வு மையமாக இருக்கும் என அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் உறுதி அளித்துள்ளார்.
இந்த ஆராய்ச்சி மையம், பின்னர் ஐஎம்இசி, எம்ஐடி மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ், அமெரிக்கா, ஐடிஆர்ஐ, தைவான் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படும் சுதந்திரமான மையமாக செயல்படும் என்றார். இந்தியாவில் சிறந்த பல்கலைகழகங்களில் உள்ள துடிப்பான ஒரு சூழல் இங்கே காணப்படும் என உறுதி அளித்தார்.
இந்தியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு செமிகண்டக்டர் பற்றிய விவாதம் எழுந்தது, இனி வேகமாக வளரும் துறையாக இது இருக்கும் என தெரிவித்தார். செமிகண்டக்டர்கள் செயல்முறை, உற்பத்தி திறன் மற்றும் தொழில்நுட்பங்கள் இந்தியாவுக்கு வர தொடங்கியுள்ளதாக கூறிய அவர், தைவானை சேர்ந்த டவர் செமிகண்டக்டர், பவர் சிப் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி ஆலைகளை அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவது நம்பிக்கை அளிப்பதாக தெரிவித்தார்.
செமிகண்டக்டர்கள் , தற்போது பயன்படுத்தப்படும் பெரும்பாலான ஸ்மார்ட் கருவிகளான செல்போன்கள் , லேப்டாப்கள் உள்ளிட்டவற்றுக்கு மிகவும் தேவைப்படும் ஒன்று. செயற்கை நுண்ணறிவு வளர்ந்து வரும் சூழலில் அதற்கேற்றாற் போல சிப்களுக்கான தேவையும் உயர்ந்து வருகிறது. எனவே அந்த துறையில் உற்பத்தி மையமாக இந்தியா மாறுவது சிறந்த எதிர்காலத்தை அளிக்கும்.
Story Written by: Devika
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications