இந்தியர்களின் பிரதான அடையாள ஆவணமாக ஆதார் அட்டை பயன்படுத்தப்படுகிறது. இதற்காக மத்திய அரசு தனித்துவ அடையாள ஆணையம் என்பதை உருவாக்கி நாடு முழுவதும் மக்களின் தரவுகளை பெற்று அவர்களுக்கு என ஆதார் எண் கூடிய அட்டையை வழங்கியது. இதனை நாம் பல இடங்களிலும் புகைப்பட மற்றும் அடையாள சான்றாக பயன்படுத்தி வருகிறோம்.
இந்நிலையில் ஆதாருக்காக அரசு 1.3 பில்லியன் டாலர்களை செலவு செய்திருக்க வேண்டிய தேவையில்லை என ஹாட்மெயில் நிறுவனர் சபீர் பாட்டியா தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஆதார் எனப்படும் தனித்துவ அடையாள ஆணையம் மூலமாக இந்திய குடிமகன்கள் அனைவருக்கும் தனித்துவ அடையாள எண் கொண்ட அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பாட்காஸ்ட் ஒன்றில் பதில் அளித்துள்ள ஹாட் மெயில் நிறுவனத்தின் துணை நிறுவனர் சபீர் பாட்டியா ஆதார் கட்டமைப்பை உருவாக்குவதற்காக அரசு 1.3 பில்லியன் டாலர்களை தேவையில்லாமல் செலவு செய்திருக்கிறது எனக் கூறியுள்ளார்.

மேலும் இதற்காக மக்களிடம் இருந்து பெறப்பட்ட பயோமெட்ரிக் தரவுகளை அரசு எதற்குமே பயன்படுத்துவது கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார். இந்த மொத்த ப்ராஜெக்ட் 20 மில்லியன் டாலர்களுக்கு உள்ளாகவே செய்து முடித்திருக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். சபீர் பாட்டியா அரசு எளிதாக மக்களின் வீடியோ மற்றும் வாய்ஸ் பிரிண்ட்டை தரவாக எடுத்து கொண்டு அதை அவர்களின் அடையாளமாக மாற்றி இருக்கலாம். இதற்கு பெரிதாக செலவாகி இருக்காது என கூறியுள்ளார்.
ஆதார் கார்டு அமைப்புக்காக அரசு 1.3 பில்லியன் டாலர்களை செலவு செய்து மக்களின் அனைத்து பயோமெட்ரிக் தரவுகளையும் பெற்றது ஆனால் அந்த பயோமெட்ரிக் தரவுகளை அரசு எங்குமே பயன்படுத்தியது கிடையாது என கூறியுள்ளார். ஆதார் அமைப்பினை உருவாக்கியவர்களில் யாருமே தொழில்நுட்ப ரீதியிலான நிபுணத்துவம் பெற்றவர்கள் கிடையாது அவர்களுக்கு தொழில்நுட்பம் தெரியாது , கோடிங் பற்றிய புரிதலும் அவர்களிடம் கிடையாது, எனவே தான் இதற்காக தேவையில்லாமல் செலவுகளை செய்துள்ளனர் என கூறியுள்ளார் .
மக்களின் குரல்களை சேகரித்து அதை அவர்களின் தனித்துவ அடையாள தரவாக பயன்படுத்தி இருக்கலாம் என்றும் அவர் யோசனை கூறியுள்ளார். ஆதார் கட்டமைப்பை உருவாக்கியவர்கள் என்னுடைய இந்த கருத்தை கொண்டு கோபப்பட வேண்டும் என நான் இவ்வாறு தெரிவிக்கவில்லை, ஆனால் அவர்கள் கொஞ்சம் யோசித்துப் பார்த்திருக்கலாம் என்றும் விளக்கியுள்ளார்.
இந்தியாவில் எனப்படும் தனித்துவ அடையாள அமைப்பு எனப்படும் ஆதார் கடந்த 2009 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இந்திய குடிமகன்களுக்கு அவர்களின் பயோமெட்ரிக் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு 12 இலக்க தனித்துவ அடையாள எண் வழங்கப்படுகிறது. உலகிலேயே மிகப்பெரிய பயோமெட்ரிக் ஐடி சிஸ்டமாக இது கருதப்படுகிறது. பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு ஆதார் விவரங்களை அரசு பயன்படுத்துகிறது.
Written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications