யாருக்கு என்ன சலுகை.. இரண்டாவது பொருளாதார ஊக்குவிப்பு பேக்கேஜ்.. அடுத்தவாரம் அறிவிக்கப்படலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவிலும் தற்போது கொரோனாவின் வேகம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது எனலாம். லாக்டவுனினால் முடங்கியுள்ள தொழில் சாலைகள் தற்போது சற்று இயங்க ஆரம்பித்து இருந்தாலும், பல இடங்களில் இன்னும் அனிமதிக்கப்படாமல் தான் உள்ளது.

 

அதிலும் சிவப்பு மண்டல பகுதிகளில் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதே பச்சை மண்டகம் மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், வர்த்தகம் முழுமையாக செயல்பட முடியாத அளவிலேயே உள்ளது.

இதனால் இந்தியாவில் தொழில்துறை மற்றும் பொருளாதாரம் பின்னோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இதனை மீட்டெடுக்க அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும், வரும் வாரத்தில் சில ஊக்குவிப்புகள் வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஊக்குவிப்பு நடவடிக்கைகள் இருக்குமா?

ஊக்குவிப்பு நடவடிக்கைகள் இருக்குமா?

அதிலும் முக்கிய தொழில்சாலைகள் அமைந்துள்ள மகாராஷ்டிரா மற்றும் குஜராத், டெல்லி என பல மாநிலங்களிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அவைகள் இன்னும் சிவப்பு மண்டலங்களாகவே உள்ளன. இந்த நிலையில் முடங்கிபோயுள்ள தொழிற்துறைக்கு சாதகமாக ஏதாவது பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகள் இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

மக்கள் தவிப்பு

மக்கள் தவிப்பு

கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள லாக்டவுன் இதோடு முடிவதாகவும் தெரியவில்லை. சிவப்பு மண்டல பகுதிகளில் இன்னும் நீட்டிக்கப்படவே வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிகிறது. இதற்கிடையில் ஏற்கனவே மக்கள் தங்களது வேலைகளை இழந்து, அத்தியாவசிய தேவைக்கு கூட தள்ளாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பல கட்ட ஆலோசனை
 

பல கட்ட ஆலோசனை


இதற்கிடையில் தான் இரண்டாவது கட்ட ஊக்குவிப்பு நடவடிக்கை குறித்த, பல கட்ட ஆலோசனையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பல அமைச்சர்கள், பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்து ஆலோசித்து கொண்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் வரும் வாரத்தில் இந்த அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பப்படுகிறது.

விரைவில் வெளியாகலாம்

விரைவில் வெளியாகலாம்

மேலும் சரிந்து வரும் பொருளாதாரத்தினை ஊக்குவிக்கவும், பொருளாதாரத்தினை மீட்டெடுக்கவும் ஏதேனும் நடவடிக்கைகள் இருக்குமா? என்ற தீவிர எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. ஆக விரைவில் பொருளாதார ஊக்குவிப்பு குறித்த 2-வது கட்ட நடவடிக்கையில் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முதல் முறை 1.76 லட்சம் கோடிக்கு உண்டான சலுகைகளை நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்த நிலையில் இரண்டாவது முறை என்ன சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

தொழில்துறைக்கு சலுகை இருக்குமா?

தொழில்துறைக்கு சலுகை இருக்குமா?

இந்த இரண்டாவது கட்ட ஊக்குவிப்பு நடவடிக்கை ,குறித்தான ஆலோசனையை கடந்த பல நாட்களாகவே நடந்து வரும் நிலையில், லாக்டவுனால் முடங்கிபோயுள்ள தொழில்துறைக்கு ஏதேனும் அறிவிப்புகள் இந்த முறை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஏற்கனவே வங்கி மற்றும் தொடர்புடைய சிக்கல்களைக் கையாளும் நிதிச், சேவைத் துறை போன்ற பல்வேறு சம்பந்தபட்ட துறைகள் தங்கள் துறைகளில் உள்ள பிரச்சனைகளை கண்டறிந்தும் அதற்கு எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்றும் ஒர் அறிக்கையினை சமர்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பல்வேறு அறிக்கைகள் சமர்பிப்பு

பல்வேறு அறிக்கைகள் சமர்பிப்பு

அதே நேரம் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தொழிலாளர்கள் மற்றும் பிற அமைப்புகளும் தங்களின் அறிக்கைகளை சமர்பித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்வாறு பல துறைகளில் இருந்தும் நிவாரணம் அளிக்க கோரி ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன்.

MSME-க்கு என்ன நிவாரணம்

MSME-க்கு என்ன நிவாரணம்

சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறைக்கு ஒரு விரிவான திட்டத்தினை தீட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அவை இத்துறையில் உள்ள மன அழுத்ததினை போக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் அது இத்துறையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும் சற்று தளர்வு அளிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் பெரும்பாலானவர்களின் கோரிக்கையே ஊதிய ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

சப்ளை & டிமாண்ட்

சப்ளை & டிமாண்ட்

மேலும் இந்த நெருக்கடியான நிலையில் சப்ளை மற்றும் டிமாண்ட் இரண்டையும் நிவர்த்தி செய்வதற்காகவும் அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. மொத்தத்தில் ஏழைகளுக்கும் உதவும் வகையில் பல திட்டங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக தினசரி கூலித் தொழிலாளர்கள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அடங்கிய பொருளாதார அடுக்குகளில் 30 -40% கவனம் செலுத்த வேண்டும் என்றும் நிபுணர்கள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

அரசு ஒதுக்கீடு

அரசு ஒதுக்கீடு

முன்னாள் நிதிச் செயலாளர் சுபாஷ் சந்திரா கார்க் சமீபத்தில் ஒரு கட்டுரையில், கிட்டதட்ட 10 கோடி தொழிலாளர்களுக்கு மூன்று மாதங்களுக்கு குறைந்தபட்சம் மாதம் 2,000 ரூபாயாவாது வழங்கப்பட வேண்டும் என்றும், இதற்காக அரசு 60,000 கோடி ரூபாய் செலவிட வேண்டியிருக்கும் என்றும் கூறியிருந்தார்.

கார்ப்பரேட்டுகளுக்கு பரிசீலனை

கார்ப்பரேட்டுகளுக்கு பரிசீலனை

பெரிய பெரிய கார்ப்பரேட்டுகளுக்கு ஒரு உதவியை வழங்க பல வரி மற்றும் பிற சலுகைகள் ஓரு மாதத்திற்கும் மேலாக பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அரசு துறை வட்டாரங்கள் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பெரிய கார்பரேட் நிறுவனங்கள் மற்றும் உற்பத்தி சேவைகள் 42% வேலைவாய்ப்பினை வழங்கி வரும் நிலையில், அவர்களில் பங்கு உள்நாட்டு உற்பத்தியில் 70% அதிகமாக உள்ளது.

பிரதமர் மோடி ஆலோசனை

பிரதமர் மோடி ஆலோசனை

ஆக அரசின் இந்த தீவிர நடவடிக்கையானது நிச்சயம் வீழ்ச்சி கண்டு வரும் பொருளாதாரத்தினை மீட்டெடுக்க உதவியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆக இப்படி ஒரு பொருளாதார ஊக்குவிப்பு சலுகை குறித்து தான் கடந்த சில நாட்களாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சில அமைச்சர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Govt will announce the next round of financial relief packages

PM Narendra modi and some other Ministers are discussion for intervention in the financial sector and structural reforms. It’s may be announced coming week.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X