பொது வருங்கால வைப்பு நிதி (GPF) மற்றும் அதைப் போன்ற பிற திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டிற்கு மத்திய நிதியமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 முதல் 2025ஆம் ஆண்டிற்கான ஜூலை 1, 2024 முதல் செப்டம்பர் 30, 2024 வரையிலான காலாண்டில், பொது வருங்கால வைப்பு நிதிக்கு 7.1% வட்டி வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
GPF என்றால் என்ன?: GPF என்பது அரசு ஊழியர்களுக்கான சேமிப்பு திட்டமாகும். இத்திட்டத்தில், ஊழியர்களின் மாத சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை கட்டாயமாக பிடித்தம் செய்யப்பட்டு, அதற்கு வட்டி சேர்க்கப்படுகிறது. ஓய்வு பெறும் போது இந்த தொகையை ஊழியர் பெற்றுக் கொள்ளலாம்.

பொது வருங்கால வைப்பு நிதி (GPF) வட்டி விகிதம்: 2024-ஆம் ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பர் காலாண்டிற்கான பொது வருங்கால வைப்பு நிதி (GPF) மீதான வட்டி விகிதம் 7.1% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. துறை சார்ந்த அரசாங்க ஊழியர்களுக்கான GPF திட்டத்தின் வட்டி விகிதங்களை பின்வருமாறு பார்ப்போம்.
1. சென்ட்ரல் சர்வீசஸ் பொது வருங்கால வைப்பு நிதி (Central Services GPF) - 7.1 %
2. கான்ட்ரிபியூட்டரி பொது வருங்கால வைப்பு நிதி (Contributory Provident Fund (India)) - 7.1 %
3. ஆல் இந்தியா சர்வீசஸ் பொது வருங்கால வைப்பு நிதி (All India Services Provident Fund) - 7.1 %
4. ஸ்டேட் ரயில்வே பொது வருங்கால வைப்பு நிதி (The State Railway Provident Fund) - 7.1 %
5. டிபன்ஸ் சர்விசஸ் பொது வருங்கால வைப்பு நிதி (The General Provident Fund - Defence Services)) - 7.1 %
6. இந்திய ஆயுதத் துறை பொது வருங்கால வைப்பு நிதி (The Indian Ordnance Department Provident Fund) - 7.1 %
அதேபோல சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் மத்திய அரசு எந்தவித மாற்றமும் செய்யவில்லை. மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கு (SCSS) ஜூலை மாதம் முதல செப்டம்பர் மாதம் வரையிலான காலாண்டிற்கு 8.2% வட்டி வழங்கப்படுகிறது. தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC) ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலாண்டிற்கு 7.7% வட்டியும், மாதாந்திர வருமான திட்டத்திற்கு (MIS) 7.4% வட்டியும் வழங்கப்படுகிறது. 5 ஆண்டு தொடர் வைப்புத்தொகை திட்டத்திற்கு (RD) 7.5% வட்டி வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications