அதானி குழுமத்தில் ஏன் ரூ.15,000 கோடி முதலீடு.. ராஜீவ் ஜெயின் சொல்லும் காரணத்தை பாருங்க!

அமெரிக்காவின் பிரபல முதலீட்டு நிறுவனமான GQG பார்ட்னர்ஸ் அதானி குழுமத்தில் கடந்த வாரம், 15,446 கோடி ரூபாய் முதலீட்டினை செய்துள்ளது.

இது அதானி குழுமத்தில் உள்ள அதானி போர்ட்ஸ் மற்றும் செஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளை வாங்கியுள்ளது.

அமெரிக்க நிறுவனத்தின் இந்த முதலீடானது, அதானி குழுமத்தின் மீதான ஹிண்டர்ன்பர்க் அறிக்கையானது வெளியான நிலையில், அதானி குழும பங்குகள் கடும் சரிவினைக் கண்டு வந்த நிலையில் முதலீடானது செய்யப்பட்டுள்ளது.

அதானி - இன்ஃபோசிஸ்

அதானி - இன்ஃபோசிஸ்

அதானி குழுமத்தின் சந்தை மதிப்பானது பாதிக்கும் மேலாக சரிவினைக் கண்டுள்ள நிலையில், அதானி குழுமத்தில் மட்டும் அல்ல, இன்ஃபோசிஸ் நிறுவனமும் விசில்ப்ளோயர் குற்றச்சாட்டுகளால் தத்தளித்துக் கொண்டிருந்தபோதும் வாங்கியதாக ஜெயின் தெரிவித்துள்ளார்.

2வது ஆப்சன் சிறப்பு

2வது ஆப்சன் சிறப்பு

இது குறித்து எக்னாமிக் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில் முதன்மை சலுகையை விட, இரண்டாவது சலுகையே சிறந்தது என கூறியுள்ளார்.

எது எப்படியோ GQG பார்ட்னர்ஸின் இந்த முடிவானது முதலீட்டாளர்கள் மத்தியில் ஓரு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது எனலாம். ஹிண்டர்ன்பர்க் அறிக்கையால் 1 மாதத்திற்கு மேலாக கடும் சரிவினைக் கண்டு வரும் நிலையில், இத்தகைய அறிவிப்பானது சரிவினைத் தடுத்துள்ளது எனலாம். இதன் காரணமாக அதானி முதலீட்டாளர்கள் மத்தியிலும் இது பெரும் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

நேரடியாக வாங்குவது நல்லது

நேரடியாக வாங்குவது நல்லது

மேலும் ஜெயின் வெளிப்படையாக கூறவேண்டுமானால் இது எங்களுடைய முடிவு அல்ல, இது அவர்களின் முடிவு. இதனை நாங்கள் தேர்வு செய்யவில்லை. எனினும் கட்டமைக்கும் கண்ணோட்டத்தில் புரோமோட்டர் குடும்பத்திடம் இருந்து வாங்குவது நல்லது என நாங்கள் நினைத்தோம் என கூறியுள்ளார்.

விரைவில் முடிவுக்கு வரும்

விரைவில் முடிவுக்கு வரும்

பங்குகள் ஏற்ற இறக்கத்தில் இருக்கும் நிலையில் ஒரு பங்கு எவ்வளவு விரைவில் சரிகிறதோ, அவ்வளவு விரைவில் அது முடிவுக்கு வரும். அது ஆறு மாதங்களுக்கு கவர்ச்சிகரமான ஒரு விலையில் இருக்காது.

இதுபோன்ற பங்குகள் சரிவு என்பது அதானி குழுமத்தில் மட்டும் அல்ல, இன்னும் பல பங்குகள் உள்ளன. 2004 தேர்தலுக்கு பிறகு மொத்த சந்தையும் 25% சரிவினைக் கண்டது. ஆனால் அது வாங்குவதற்கான நால்ல வாய்ப்பாக பார்க்கப்பட்டன.

ஐடிசி பிரச்சனை

ஐடிசி பிரச்சனை

1996ம் ஆண்டில் ஐடிசி வரி பிரச்சனையை காரணம் காட்டி ஒரு பிரச்சனையை எதிர்கொண்டது. ஆனால் அப்பங்குகளை 20 வருடங்களாக வைத்திருந்ததாகவும் ஜெயின் தெரிவித்துள்ளார். ஆக நெருக்கடி என்பது எப்போதும் இருப்பது தான். எனினும் அது பொதுவான பல வாய்ப்புகளை உருவாக்குகிறது. எனினும் சில பிரச்சனைகள் தவறாகவும் தனது மாறியுள்ளதாக கூறியுள்ளார்.

இன்போசிஸ் பிரச்சனை

இன்போசிஸ் பிரச்சனை

2019ல் இன்ஃபோசிஸ் விசில்ப்ளோயர் பிரச்சனையை வந்தது. அந்த் சமயத்தில் அப்பங்குகள் 30 - 45% சரிவினைக் கண்டது. ஆனால் அதனையும் மக்கள் மறந்து விடுகின்றனர். ஆனால் Petrobras பங்கினை 2 ஆண்டுகள் மிகவும் அதிகமாக வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

எபிட்டா - கடன்

எபிட்டா - கடன்

பெரும்பாலான அதானி குழும நிறுவனங்களின் எபிட்டா விகிதத்தில் சராசரியாக மூன்று மடங்கு கடன் உள்ளது. ஏனெனில் இந்த நிறுவனங்களில் ஒரு ஸ்திரத்தன்மை மற்றும் நீண்டகால வளர்ச்சி என்பது உள்ளது. பயன்பாட்டு நிறுவனங்கள் என்பது அதிக கடனை கொண்டிருக்கலாம். இதே நீங்கள் ஒரு சுழற்சி வணிகமாக இருந்தால் கடன் அதிகரிக்க கூடாது. இந்தியாவுக்கு அதன் உள்கட்டமைப்பு தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய ஒருவர் தேவை. அந்த வகையில் அதானி மும்பை விமான நிலையை நடத்தி வருகின்றார்.

ரிலையன்ஸ் பற்றி கருத்து

ரிலையன்ஸ் பற்றி கருத்து

அதானி குழுமம் எவ்வாறு செயல்படுகின்றது என்பதை நாங்கள் முன் கூட்டியே அறிந்துள்ளோம். எனினும் கெளதம் அதானியையோ அல்லது அவரது சகோதரர் வினோத் அதானியை எங்களுக்கு முன்னதாக தெரியாது. அதானிகளுக்கு எதுவும் கொடுக்கப்படவில்லை. எப்படியிருப்பினும் அரசியல் தொடர்புகள் பற்றிய குற்ற்சாட்டுகளை நான் மறுக்கவில்லை.

இதேபோன்று தான் 24 ரிலையன்ஸ் பற்றி 25 வருடங்களாக நான் கதை கேட்டு வருகின்றேன். ஆனால் அவை அரசியலை அடிப்படையாக கொண்டது அல்ல என்று ஜெயின் தெரிவித்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+