அமெரிக்காவை சேர்ந்த பிரபலமான GQG Partners நிறுவனம் தற்போது அதானி குழுமத்தின் பிரதான முதலீட்டாளராக உள்ளது. ஆனாலும் பல முன்னணி நிறுவனங்களிலும் முகலீடு செய்து வருகிறது. அப்படி GQG Partners நிறுவனம் IDFC First Bank பங்குகளை பல்க் டீல் மூலம் வெள்ளிக்கிழமையன்று பெரும் தொகைக்கு வாங்கியது. இதன் மூலம் இன்று IDFC First Bank பங்கு விலையில் பெரும் மாற்றம் உருவாகும்.
பங்குச்சந்தை தகவல்படி ஜிக்யூஜி பார்ட்னர்ஸ் 17.1 கோடி பங்குகளை அதாவது 2.58 சதவீதப் பங்குகளை ரூ.1527 கோடிக்கு வாங்கியுள்ளது. ஒரு பங்கின் விலை ரூ.89 என்ற அடிப்படையில் வாங்கப்பட்டுள்ளது.

ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கியின் 4.2 சதவீத பங்குகளை Warburg Pincus கிளை நிறுவனமான Cloverdell Investment விற்றுள்ளது. ஜூன் காலாண்டில் க்ளோவர்டெல் ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கியின் 7.12 சதவீத பங்கை வைத்திருந்தது. இந்த பங்குகளை தான் தற்போது ஜிக்யூஜி பார்ட்னர்ஸ் வாங்கியுள்ளது.
ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கியின் 60.07 சதவீதப் பங்கை பப்ளிக் ஷேர்ஹோல்டர்கள் வாங்கி வைத்துள்ளனர். மீதமுள்ள 39.93 சதவீத பங்குகளை புரொமோட்டர்கள் வைத்துள்ளனர். பப்ளிக் ஷேர்ஹோல்டர்களில் மியூச்சுவல் பண்டுகள் 2.78 சதவீதத்தையும் ஃபாரீன் போர்ட்போலியோ இன்வெஸ்டர்ஸ் 4.51 சதவீதப் பங்குகளையும் வைத்துள்ளனர்.
மத்திய அரசும் 3.94 சதவீதப் பங்கை வைத்துள்ளது.ஸஎன்ஆர்ஐ முதலீட்டாளரான ராஜிவ் ஜெயினின் ஜிக்யூஜி பார்ட்னர்ஸ் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிரபலமானது. கார்ப்பரேட் நிர்வாகம் தொடர்பான குற்றச்சாட்டுகள் அதானி குழுமத்தின் மீது சுமத்தப்பட்டு பங்குகள் சரிந்தபோது ஜிக்யூஜி முரண்பட்ட பந்தயத்தில் இறங்கியது.
அதன் பிறகு அதானி பங்குகளில் ஜிக்யூஜி இரட்டிப்பு முதலீடுகளை செய்யத் தொடங்கியது. தற்போது அதானி எண்டர்பிரைசஸில் 2.67 சதவீதம், அதானி போர்ட்ஸில் 5.03 சதவீதம், அதானி பவரில் 7.73 சதவீதம், அதானி கிரீனில் 3.5 சதவீதம் பங்குகளை வைத்துள்ளது. அதானி குரூப் பங்குகள் தவிர இந்த அமெரிக்க நிறுவனம் ITC, Patanjali Foods, JSW Energy, Max Healthcare மற்றும் பல நிறுவனங்களின் பங்குகளை வைத்துள்ளது.
ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கி இந்த ஆண்டில் 50 சதவீதத்துக்கு மேல் விலை உயர்ந்தது. கடந்த ஒரு ஆண்டில் 92 சதவீத வருவாயை அளித்தது.
அண்மைக்கால காலாண்டில் ஜிக்யூஜி 61 சதவீதம் அதிகமான நிகர லாபமாக ரூ.765 கோடியை தந்துள்ளது. நிகர வட்டி வருவாய் 36 சதவீதம் YoY உயர்ந்து ரூ.3,745 கோடியானது.
அந்த காலாண்டின் ஆபரேட்டிங் பிராபிட் 59 சதவீதம் YoY உயர்ந்து ரூ.1500 கோடியானது. ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கியின் கடன்கள் மற்றும் முன்பணங்கள் 24 சதவீதம் YoY உயர்ந்து ரூ.1.71 ஆக அதே காலகட்டத்தில் இருந்தது.
காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு ICICI Securities புரோக்கரேஜ் உயர்ந்து அதன் விலை இலக்கு ரூ.95 ஆக இருந்தது.
வெள்ளிக்கிழமையன்று பங்கானது 0.16 சதவீதம் குறைந்து ரூ.93.20க்கு பிஎஸ்இயில் வர்த்தகமானது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications