இந்திய சந்தையில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் முதல் பெரு நிறுவனங்கள் வரையில் பல நிறுவனங்கள் முதலீடு செய்திருந்தாலும் GQG பார்ட்னர்ஸ் மிகவும் ஸ்பெஷலான நிறுவனம். ஏன் தெரியுமா..?
அதானி - ஹின்டன்பர்க் விவகாரத்திற்கு பின் அதானி குழுமத்தில் யாரும் முதலீடு செய்ய தயாராக இல்லாமல் இருந்த நிலையில் ஆஸ்திரேலிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு, அமெரிக்காவில் தலைமையகத்தை வைத்துக்கொண்டு உலக நாடுகளில் முதலீடு செய்து வந்த GQG பார்ட்னர்ஸ் அதானி குழுமத்தில் முதலீடு செய்து தனி கவனத்தையும், முக்கியத்துவத்தையும் பெற்றது.

GQG பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருப்பது ராஜிவ் ஜெயின் என்ற ஒரு இந்தியர் என்பதாலும் இந்திய கார்பரேட் உலகில் தனி கவனத்தை பெற்றார். இதன் மூலம் 2023 ஆம் ஆண்டில் ஆதானி குழுமத்தின் மிகப்பெரிய பங்குதாரராக மாறியது மட்டும் அல்லாமல் அதானி குழுமத்தை தாண்டி 6 இந்திய நிறுவனத்திலும் முதலீடு செய்துள்ளது.
ராஜீவ் ஜெயின் தலைமையிலான GQG பார்ட்னர்ஸ் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் மட்டுமே சுமார் 3,382 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை செய்துள்ளது. இந்த முதலீட்டில் பெரும் பகுதி அதானி போர்ட்ஸ், அதானி பவர் ஆகிய இரு நிறுவனத்தில் செய்யப்பட்டாலும் JSW STEEL, பதஞ்சலி புட்ஸ் ஆகியவற்றிலும் கூடுதல் முதலீடு செய்யப்பட்டு உள்ளது.
GQG பார்ட்ன்ஸ் இதுவரையில் இந்தியாவில் எந்தெந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது என்பதை தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம்.
GQG பார்ட்னர்ஸ் ஐடிசி நிறுவனத்தில் சுமார் 1.48 சதவீத பங்குகளை முதலீடு செய்து தனத கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த ஐடிசி பங்குகள் 2023 ஆம் நிதியாண்டில் 32 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
இதேபோல் மேக்ஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தில் 2.36 சதவீத பங்குகளை, பதஞ்சலி புடஸ் நிறுவனத்தில் 2.73 சதவீத பங்குகள், JSW ஸ்டீல் நிறுவனத்தில் 1.01 சதவீத பங்குகள், ஹெச்டிஎப்சி 1.08 சதவீத பங்குகள், சிப்லா 1 சதவீதத்திற்கும் குறைவான பங்குகளை முதலீடு செய்து கைப்பற்றியுள்ளது.
GQG பார்ட்னஸ் முன்பு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, நெஸ்லே, யூனிலீவர் ஆகியவற்றில் முதலீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுவே அதானி குழுத்தில் பார்த்தால் அதானி பவர் நிறுவனத்தில் 7.73 சதவீத பங்குகள், அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தில் 6.54 சதவீத பங்குகள், அதானி போர்ட்ஸ் 5.03 சதவீத பங்குகள், அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தில் 3.5 சதவீத பங்குகள், அதானி எண்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தில் 2.67 சதவீத பங்குகள், அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 1.36 சதவீத பங்குகளை முதலீடு செய்து கைப்பற்றியுள்ளது.


Click it and Unblock the Notifications