அதானி குழுமம் குறித்து ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட அறிக்கைக்கு பின்பு புதிய கடன்களையோ, புதிய முதலீடுகளையோ, கூட்டணி முயற்சிகளோ செய்யாமல் இருந்த அதானி குழுமத்திற்கு சுமார் 1.87 பில்லியன் டாலர் முதலீடு வியாழக்கிழமை கிடைத்துள்ளது.
அதானி குழுமத்தின் ப்ரோமோட்டர் குழுவின் ஒரு பகுதியாக இருக்கும் எஸ்.பி. அதானி குடும்ப அறக்கட்டளை வியாழக்கிழமை பிளாக் டீல் வாயிலாக அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் & SEZ, அதானி கிரீன் எனர்ஜி மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் ஆகிய 4 நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்துள்ளது.
அதானி குழுமத்தின் 4 நிறுவனங்களில் 21 கோடி பங்குகளை அமெரிக்காவில் முதலீடு ஆலோசனை வழங்கும் GQG Partners Inc நிறுவனம் சுமார் 15,446 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நாளே ஆஸ்திரேலிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள GQG Partners பங்குகள் 3.5 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
அதானி குரூப் - GQG Partners
அமெரிக்க ஷாட் செல்லர் நிறுவனம் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் அதானி குழுமம் குறித்த அறிக்கை வெளியீட்டுக்கு பின்பு பெற்ற மிகப்பெரிய முதலீடாக உள்ளது. GQG Partners Inc அதானி குழுமத்தின் 4 நிறுவனத்தில் சுமார் 1.87 பில்லியன் டாலர் ரூபாய் மதிப்பில் 15,446 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.
GQG Partners முதலீடு
இந்த முதலீடு மூலம் GQG Partners Inc அதானி எண்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தில் 3.4 சதவீத பங்குகளும், அதானி போர்ட்ஸ் & SEZ 4.1 சதவீத பங்குகளும், அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தில் 2.5 சதவீத பங்குகளும், அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தில் 3.5 சதவீத பங்குகளையும் கைப்பற்றியுள்ளது.
GQG Partners பங்குகள் சரிவு
GQG Partners-ன் அதானி குழும முதலீடுக்கு பின்பு வெள்ளிக்கிழமை வர்த்தக துவக்கத்தில் ஆஸ்திரேலிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள GQG Partners பங்குகள் 3 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. மார்ச் 2 ஆதேதி வர்த்தகத்தில் 1.55 ஆஸ்திரேலிய டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்ட GQG Partners பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் 1.43 டாலர் வரையில் சரிந்துள்ளது.
ஹிண்டன்பர்க் அறிக்கை
அதானி குழுமம் குறித்து ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான பின்பு இக்குழும பங்குகள் 60 முதல் 70 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் நேற்று செபி அமைப்பை முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்து 2 மாதத்தில் அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்டது மட்டும் அல்லாமல் இதை சரிபார்க்க 5 பேர் கொண்ட நிபுணர் குழுவையும் அமைத்துள்ளது.
3 பில்லியன் டாலர் வதந்தி
மேலும் அதானி குழுமம் வெளிநாட்களில் புதிய முதலீட்டுகளை திரட்டுவதற்காக எடுத்த பல்வேறு முயற்சிகள் மூலம் 3 பில்லியன் டாலர் பெற்றதாக தகவல் வெளியானது. ஆனால் அதை மறுத்துள்ளது அதானி குழுமம், இது வெறும் வதந்தி என அறிவித்துள்ளது. இதனால் அதானி குழுமத்திற்கு 1.87 பில்லியன் டாலர் மட்டுமே புதிய முதலீடாக வந்துள்ளது.
ராஜீவ் ஜெயின்
அதானி குழுமத்தில் முதலீடு செய்தது குறித்து GQG Partners சேர்மன் மற்றும் தலைமை முதலீட்டு அதிகாரி ராஜீவ் ஜெயின் பேசுகையில், எங்களுடைய நிறுவனம் அதானி குழுமத்தின் நிதி தரவுகளை முழுமையாக ஆய்வு செய்து, ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை குற்றச்சாட்டுகளுக்கு தொடர்பு இல்லாமல் இருந்தது உறுதி செய்த பின்பு தான் முதலீடு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
அதானி குழும பங்குகள்
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் அதானி குழும பங்குகளின் நிலவரம்
அதானி எண்டர்பிரைசஸ் - 12.67 சதவீதம் உயர்வு
அதானி போர்ட்ஸ் - 8.36 சதவீதம் உயர்வு
அதானி பவர் - 4.99 சதவீதம் உயர்வு
அதானி டிரான்ஸ்மிஷன் - 5.00 சதவீதம் உயர்வு
அதானி கிரீன் எனர்ஜி - 5.00 சதவீதம் உயர்வு
அதானி டோட்டல் கேஸ் - 3.77 சதவீதம் உயர்வு
அதானி வில்மார் - 4.99 சதவீதம் உயர்வு
ஏசிசி லிமிடெட் - 4.20 சதவீதம் உயர்வு
அம்புஜா சிமெண்ட்ஸ் - 5.34 சதவீத உயர்வு
NDTV - 4.98 சதவீதம் உயர்வு


Click it and Unblock the Notifications