ஐபோன் பிரியர்களுக்கு அட்டகாசமான ஆஃபரை பிளிப்கார்ட் நிறுவனம் வழங்குகிறது! ஐபோன் 16 மாடல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து பிற ஐபோன் பதிப்புகளுக்கு அதிக அளவிலான தள்ளுபடிகளை பிரபல இ-காமர்ஸ் நிறுவனங்கள் வழங்கி வருகிறது. இதை பயன்படுத்துபவர்கள் ஒரிஜினல் விலையை விட விலை குறைவாக இந்த உயர் ரக ஸ்மார்ட்போன்களை வாங்கிக் கொள்ளலாம்.
பலருக்கும் ஐபோன் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் விலை அதிகமாக இருப்பது போல சிலருக்கு தோன்றலாம். ஆனால் இந்த தீபாவளிக்கு பிளிப்கார்ட் நிறுவனம் சிறந்த சலுகையை வழங்குகிறது. இதைப் பயன்படுத்தி ஐபோன் பிரியர்கள் பலனடையலாம். ஏனெனில் இன்று இரவு முதல் பிளிப்கார்ட் நிறுவனம் தீபாவளி விற்பனையை தொடங்குகிறது. ரூ. 66,900 என்ற விலையில் விற்பனையாகும் ஐபோன் 15-ஐ சில வங்கி கிரெடிட் கார்டுகள் மூலம் ரூ.50,000-த்திற்குள் வாங்க முடியும்.

பிளிப்கார்ட் குறிப்பிட்ட வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு தள்ளுபடியை வழங்குகிறது. இதன் மூலம் ஐபோன் வாங்கும் போது சில ஆயிரம் ரூபாயை சேமிக்க முடியும். மேலும், உங்களிடம் பழைய ஸ்மார்ட்போன் இருந்தால், அதை எக்ஸ்சேஞ்ச் போனஸுக்கு விற்பனை செய்யலாம். இந்த சலுகைகளை இணைத்துப் ரூ.50,000-க்கு கீழ் ஐபோன் 15-ஐ பெற முடியும்.
ஐபோன் 15 A16 பயோனிக் சிப் மூலம் இயக்கப்படுகிறது. எனவே நீங்கள் ஐபோன் 15ஐ பயன்படுத்தி கேமிங், பல்வேறு பணிகள் என எதை செய்தாலும் விரைவான செயல் திறனை பெறலாம். இந்த போன் 6.1-இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது உங்களுக்கு சிறந்த வண்ணங்கள் மற்றும் காட்சிகளை வழங்குகிறது. இது வீடியோக்களை அதிகம் விரும்பும் பயனர்களுக்கு ஏற்றது.
கேமராவைப் பொறுத்தவரை, ஐபோன் 15 ஆனது 48MP முதன்மை கேமரா மற்றும் 12MP அல்ட்ரா-வைட் கேமராவைக் கொண்டுள்ளது. குறைந்த வெளிச்சத்தில் கூட நீங்கள் நல்ல புகைப்படங்களைப் பிடிக்க முடியும். 12-எம்பி முன்பக்க கேமராவும் செல்ஃபி எடுக்க விரும்புவோர் அல்லது வீடியோ அழைப்புகளை விரும்புவோருக்கு ஒரு சிறந்த தேர்வாக இது இருக்கும்.
இது ஒரு 5ஜி போன். எனவே வேகமான நெட்வொர்க்குடன் நீங்கள் பயன்படுத்த முடியும். கூடுதலாக ஒருமுறை பேட்டரி செய்தால் நாள் முழுவதும் பேட்டரி ஆயுள் நீடிக்கும். ஐபோன் 15 மாடலை வாங்க திட்டமிடுபவர்கள், இந்த சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதுவும் உங்களிடம் ஏற்கனவே ஆப்பிள் மாடல் போன்கள் இருந்தால் அவற்றை எக்ஸ்சேஞ்ச் செய்து இன்னும் விலை குறைவாக வாங்கலாம். அதற்கு உங்களுடைய பழைய மொபைல் நல்ல கண்டிஷனில் இருக்க வேண்டும். ஐபோன் பிரியர்களுக்கு இது ஒரு அற்புதமான வாய்ப்பு.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications