இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் சமீபத்திய வருடாந்திர கூட்டத்தில் உயர்மட்ட நிர்வாக குழுவில் முக்கியமான மாற்றங்கள் நடந்தது யாராலும் மறக்க முடியாது.
ஏற்கனவே முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு ஆகாஷ் அம்பானி தலைவராகவும், ரிலையன்ஸ் ரீடைல் பிரிவுக்கு ஈஷா அம்பானி தலைவராகவும், ரிலையன்ஸ் நியூ எனர்ஜிக்கு அனந்த் அம்பானியை நியமித்துள்ளார். இது அனைத்தும் தனித்தனி நிறுவன பதவியாக இருந்தாலும் உயர் மட்டநிர்வாக குழுவில் இவர்களுக்கு அதிகாரம் இல்லை.

இப்படியிருக்கும் சூழ்நிலையில் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் சாம்ராஜியத்தின் அதிகாரத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் முக்கிய பாதையை உருவாக்கும் முயற்சியில் உயர்மட்ட நிர்வாகத்தில் முக்கிய மாற்றம் கொண்டு வந்தார்.
இதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக குழுவில் நீதா அம்பானி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதை தொடர்ந்து நிர்வாக குழுவில் ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி, அனந்த் அம்பானி ஆகியோர் non-executive directors ஆக நியமிக்கப்பட உள்ளதாக அறிவித்தார்.
இதன் மூலம் நிர்வாகம் வெற்றிகரமான அடுத்த தலைமுறையினர் கையில் சென்றாலும் வர்த்தகம், நிதி பரிமாற்றங்கள், மதிப்பீடு, குடும்ப கவுன்சில் ஆகியவற்றில் பல விஷயங்கள் ஒளிந்துக்கொண்டு இருக்கிறது. இப்படியிருக்கையில் அம்பானி குடும்பத்தின் 4வது தலைமுறை குறித்து இணையவாசிகள் பேச துவங்கியுள்ளனர்.

ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தில் அதிக மதிப்புடைய பிரிவாக இருக்கும் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் தலைவரான ஈஷா அம்பானி - ஆனந்த் பிராமல் அகியோருக்கு 2022 இல் பிறந்த இரட்டைக் குழந்தைகளான ஆதியா மற்றும் கிருஷ்ணா பிறந்தனர். நவம்பர் 19, 2022 அன்று, இஷா அம்பானிக்கு கிருஷ்ணா என்ற ஆண் குழந்தையும், அவரது மகள் ஆதியாவும் பிறந்தனர்.
இருவரும் பெரிய வீட்டு பிள்ளைகள் என்பதால் பரிசுகளுக்கு குறையே இல்லை. தாத்தா பாட்டிகளான முகேஷ் அம்பானி - நீதா அம்பானி, அஜய் பிராமல் - ஸ்வாதி பிராமல் ஆகியோர் பல ஆடம்பர கிப்ட்களை கொடுத்தனர்.
இதேபோல் முகேஷ் அம்பானியின் மூத்த மகனான ஆகாஷ் அம்பானி மற்றும் அவருடைய மனைவி ஸ்லோகா மேத்தா-வுக்கு டிசம்பர் 2020ல்
பிரித்வி அம்பானி என்ற மகனும், மே 31, 2023 ல் வேதா அம்பானி என்ற பெண் குழந்தையும் பிறந்தது.

இந்த நிலையில் முகேஷ் அம்பானியின் இளைய மகனான அனந்த் அம்பானி - ராதிகா மெர்சன்ட் ஆகியோருக்கு ஏற்கனவே நிச்சியதார்த்தமான நிலையில் விரைவில் இருவருக்கும் திருமணமாக உள்ளது.
இதனால் முகேஷ் அம்பானி சாம்ராஜ்ஜியத்தை நிர்வாகம் செய்ய 3 பிள்ளைகளுக்கு கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது அடுத்த தலைமுறையினர் தங்களுடைய வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை நிர்வாகம் செய்ய இளம் பருவத்திலேயே அவர்களை மேம்படுத்தப்படுவார்கள் என தெரிகிறது. இதற்கு ஏற்றார் போல் தற்போது உலகம் முழுவதும் இளம் தொழிலதிபர்கள் உருவாகி வருகிறார்கள்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications