தமிழ்நாட்டின் அடையாளமாகவும் உலகமே வியந்து பார்க்கும் ஒரு நபராகவும் ஒவ்வொரு ஆண்டும் புது புது சாதனைகளை படைத்து செஸ் உலகின் ஜாம்பவனாக மாறி வருகிறார் பிரக்ஞானந்தா. நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்த இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா உலகையே வியக்க வைத்துள்ளார்.
நார்வே செஸ் தொடரில், உலகின் முன்னணி வீரர்களை பின்னுக்குத் தள்ளி பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன் மூலம் நார்வே செஸ் தொடரை வென்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் நிகழ்த்தினார். 20 வயதான பிரக்ஞானந்தா, இறுதிச் சுற்றில் ஜெர்மனியின் வின்சென்ட் கீமரை வீழ்த்தி பட்டத்தை உறுதி செய்தார். சாம்பியன் பட்டத்துடன் இன்று சென்னை திரும்பிய பிரக்ஞானந்தாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, தமிழக முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்த பிரக்ஞானந்தா, அவரது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் பெற்றார். அப்போது விஜய் உடன் பிரக்ஞானந்தா செஸ் விளையாடினார். இதன் பின்னர் முதலமைச்சர் விஜய் 50 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கிய பாராட்டினார். அப்போது பிரக்ஞானந்தாவின் பெற்றோரும் உடனிருந்தனர்.
முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த பிரக்ஞானந்தா "முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றேன். அவருடன் செஸ் விளையாடும் வாய்ப்பும் கிடைத்தது. அதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மிகவும் ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. தொடர் முடிந்த உடனேயே என்னை அழைத்து பாராட்டியது மிகவும் சந்தோஷமாக உள்ளது. விஜய் சார் நன்றாகவே செஸ் விளையாடினார். நான் வெற்றி பெற்றாலும், அவர் இவ்வளவு நன்றாக விளையாடுவார் என்று எனக்கு தெரியாது" என்றார்.

பிரக்ஞானந்தா உலகில் யாராலும் வீழ்த்தப்பட முடியாத ஒரு சதுரங்க வீரராக வளர்ந்து வருபவர். இவர் 8.26 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கு சொந்தக்காரராக இருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இளம் வயதிலேயே செஸ் உலகின் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமையாக வளர்ந்து வருகிறார். சதுரங்க விளையாட்டு திறன் தான் அவருக்கு பெருமையையும் பெருமளவிலான சொத்தையும் சேர்த்து தருகிறது. சதுரங்க போட்டிகளில் பங்கேற்பதின் மூலமும் அதில் வெற்றி பெறுவதன் மூலமும் அவருக்கு வருமானம் வருகிறது.
எளிமையான குடும்பத்தில் இருந்து வளர்ந்து திறமையால் உயர்ந்து நிற்பவர். பல்வேறு போட்டிகளில் கிடைக்க கூடிய பரிசுத்தொகை இவருக்கு பிரதானமான வருவாயாக இருக்கிறது. அதானி குழுமமே முன்வந்து இவரை ஸ்பான்சர் செய்துள்ளது. நார்வே செஸ் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இவருக்கு பரிசு தொகையாக மட்டும் 70 லட்சம் ரூபாய் கிடைத்திருக்கிறது. அது மட்டும் இல்லாமல் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாகவும் அவருக்கு பல்வேறு உதவிகள் செய்யப்படுகின்றன.
தமிழ்நாடு அரசு தற்போது 50 லட்சம் ரூபாயும் இதற்க்கு முன்னர் 30 லட்சம் ரூபாயும் அவருக்கு பரிசாக வழங்கியிருக்கிறது. 2023 ஆம் ஆண்டு எஃப்ஐடிஇ உலக கோப்பை போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் அவருக்கு 80 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் பரிசாக கிடைத்தன அதன் பிறகு அவர் நார்வே செஸ் போட்டியில் அதிகபட்சமாக 70 லட்சம் ரூபாயை பரிசாக பெற்று இருக்கிறார்.


Click it and Unblock the Notifications


