ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் பேரன் சதுரங்க விளையாட்டில் புதிய சாதனை படைத்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார். ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷின் 9 வயது மகன் தான் தேவான்ஸ் நரா.
இந்த சிறுவன் சர்வதேச அளவில் சதுரங்க விளையாட்டில் குறைந்த நேரத்தில் 175 செக்மேட் புதிர்களை வேகமாக தீர்த்து (Fastest Checkmate Solver- 175 Puzzles)வைத்து உலக சாதனை படைத்திருக்கிறார். இதனை லண்டன் வேர்ல்டு புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் (World Book of Records, London)உலக சாதனை என அங்கீகரித்துள்ளது. மேலும் தேவான்ஸுக்கு செக்மேட் மாரத்தான் (Checkmate Marathon) பட்டத்தையும் வழங்கியுள்ளது.

சந்திரபாபு நாயுடுவின் பேரனும் நர லோகேஷ் பிராமினி தம்பதியின் மகனுமான தேவான்ஸுக்கு சிறு வயது முதலே சதுரங்க விளையாட்டில் ஆர்வம் அதிகம். எனவே குடும்பத்தினரும் சதுரங்க விளையாட்டிற்கு தேவையான பயிற்சிகளை வழங்கியுள்ளனர். தற்போது தேவான்ஸ் சதுரங்க விளையாட்டில் 175 செக்மேட் புதிர்களை குறைந்த நேரத்தில் தீர்த்து வைத்து செக்மேட் மாரத்தான் என்ற பட்டத்தை பெற்றுள்ளார்.
தேவான்ஸின் இந்த சாதனைக்கு அவரது தந்தை லோகேஷ் மற்றும் தாயார் பிராமினி மற்றும் பயிற்சியாளர் ராஜசேகர் ரெட்டி ஆகியோரின் ஊக்கமே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னுடைய மகனின் சாதனை குறித்து பேசியி எப்பொழுதுமே சிறுவயதிலிருந்தே சதுரங்க விளையாட்டில் மிக தீவிரமாக இருப்பார் என தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் சதுரங்க போட்டிகள் நடைபெறும் போதெல்லாம் தேவான்ஸ் அவற்றை உற்று கவனிப்பார் என்றும் தன்னுடைய மகனின் இந்த சாதனைக்கு உதவிய ராய் செஸ் அகாடமிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தன்னுடைய பேரனை பாராட்டி எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். நர தேவான்ஸுக்கு வாழ்த்துக்கள், ஒரு விஷயத்தில் ஆர்வத்துடனும் தொடர்ச்சியாகவும் கடின உழைப்பை கொடுத்தால் நிச்சயம் அது நமக்கு கைகூடும் என்பதற்கு இது ஒரு உதாரணம் என சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டுள்ளார். இந்த சாதனையை படைப்பதற்கு தேவான்ஸ் பல மாதங்களாக தன்னை தயார்படுத்திக் கொண்டதாகவும் தன்னுடைய லிட்டில் கிராண்ட் மாஸ்டர் குறித்து தான் மிகவும் பெருமைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த சாதனையைத் தவிர தேவான்ஸ் ஏற்கனவே இரண்டு சாதனைகளையும் படைத்துள்ளார். குறிப்பாக 7-disc Tower of Hanoi puzzleக்கு 1 நிமிடம் 43 நொடிகளில் தீர்வு கண்டிருக்கிறார். 9 செஸ் போர்டுகளில் 32 காய்களையும் ஐந்து நிமிடங்களில் சரியான இடத்தில் வைத்தும் சாதனை படைத்துள்ளார். Story written by: Devika


Click it and Unblock the Notifications