இந்தியாவில் செயல்பட்டு வரக்கூடிய நிறுவனங்கள் தங்கள் நிறுவன லாபத்தில் ஒரு கணிசமான தொகையை டிவிடெண்ட் என்ற பெயரில் ஈவு தொகையாக முதலீட்டாளர்களுக்கும் பங்குதாரர்களுக்கும் வழங்கி வருகின்றன. அந்த வகையில் அண்மையில் இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் நிறுவன முதலீட்டாளர்களுக்கும் பங்குதாரர்களுக்கும் டிவிடெண்ட் அறிவிப்பை வெளியிட்டது.
இதன்படி ஒவ்வொரு பங்கிற்கும் 43 ரூபாய் ஈவு தொகையாக வழங்கப்படும் என இன்போசிஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிற.து இன்போசிஸ் நிறுவனம் வழங்கக்கூடிய இந்த டிவிடெண்ட் தொகை மூலம் நிறுவன பங்குதாரர்களுக்கு கோடிக்கணக்கிலான பணம் வர இருக்கிறது. குறிப்பாக இன்போசிஸ் நிறுவனர்களின் பேரன் பேத்திகள் பல கோடி ரூபாயை ஈவுத்தொகையாக மட்டுமே பெற இருக்கின்றனர்.

டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் வெளியாகியுள்ள செய்தியின் படி பார்க்கும்போது இன்போசிஸ் நிறுவனம் ஒரு பங்கிற்கு 43 ரூபாய் ஈவு தொகை வழங்குகிறது. இதன் மூலம் இந்த நிறுவனத்தின் பிரமோட்டர்களாக இருப்பவர்களுக்கு ஈவு தொகையாக மட்டும் 2330 கோடி ரூபாய் கிடைக்க இருக்கிறது. இன்போசிஸ் இணை நிறுவனங்களுல் ஒருவரான நாராயண மூர்த்தியின் மகன் ரோகன் மூர்த்தி இந்த நிறுவனத்தில் 6 கோடி பங்குகளை சொந்தமாக வைத்திருக்கிறார். அவருக்கு 261.5 கோடி ரூபாய் ஈவு தொகையாக கிடைக்க இருக்கிறது.
அதேபோல இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் மகளும், பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவியுமான அக்ஷிதா மூர்த்தி இந்த நிறுவனத்தில் 3.8 கோடி பங்குகளை சொந்தமானதாக வைத்திருக்கிறார். இதன் மூலம் அவருக்கு ஈவுத்தொகையாக 167 கோடி ரூபாய் கிடைக்க இருக்கிறது. இன்போசிஸ் நிறுவனர்களின் பேரன் பேத்திகளும் இந்த முறை கோடிக்கணக்கான தொகையை டிவிடெண்டாக பெற இருக்கின்றனர்.
குறிப்பாக இன்போசிஸ் இணை நிறுவனர்களுள் ஒருவரான எஸ்டி சிபுலாலின் பேரன் பேத்திகள் 200 கோடிக்கும் அதிகமான தொகையை டிவிடெண்டாக பெறுகின்றனர். நிகிதா மற்றும் மிலன் சிபுலால் ஆகிய இருவரும் 26.3 கோடி ரூபாயை டிவிடெண்ட் ஆக பெறுகின்றனர். அதேபோல நந்தன் நீலகேனியின் பேரனான தனுஷ் நீலகேனி சந்திரா 16 கோடி ரூபாய் டிவிடெண்ட் ஆக பெற இருக்கிறார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு நாராயணமூர்த்தி தன்னுடைய மகன் வழி பேரன் எகாகிரா ரோகன் மூர்த்திக்கு 15 லட்சம் இன்போசிஸ் நிறுவன பங்குகளை பரிசாக வழங்கினார். இதன் மூலம் நிறுவனத்தின் 0.04 சதவீத பங்குகள் நாராயண மூர்த்தியின் பேரனுக்கு சென்றன. அப்போதே இதன் மதிப்பு 240 கோடி ரூபாய் . இதன் மூலம் பிறந்த சில மாதங்களிலேயே கோடீஸ்வரனான பெருமை இந்த குழந்தைக்கு கிடைத்தது. இந்த குழந்தை தற்போது டிவிடெண்ட் மூலம் 6.5 கோடி ரூபாயை பெற இருக்கிறது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications