இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஏற்கனவே சில சீன ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வந்து குறிப்பிடத்தக்க அளவிலான வர்த்தகத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாகப் பிரிட்டன் கார் நிறுவனமான எம்ஜி மோட்டார்ஸ் தற்போது சீனாவின் SAIC மோட்டார்ஸ் கார்பரேஷன் கட்டுப்பாட்டில் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்திய சந்தை சீன ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்குச் சாதகமாக மாறிய நிலையில், சீனாவின் மற்றொரு முன்னணி கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான கிரேட் வால் மோட்டார்ஸ் இந்தியாவில் தனது வர்த்தகத்தைத் துவங்க நீண்ட காலமாகக் காத்திருக்கிறது.
இந்தியாவில் கார் உற்பத்தியைத் துவங்கி உள்நாட்டு வர்த்தகத்திற்காக மட்டும் அல்லாமல் வெளிநாட்டு வர்த்தகத்திற்கும் தேவையான கார்களைத் தயாரிக்கத் திட்டமிட்டது.
தொழிற்சாலை
இந்தியாவில் தனது வர்த்தகத்தை விரைவாகத் துவங்க வேண்டும் என்பதற்காகப் புதிய தொழிற்சாலையைக் கட்டாமல் ஏற்கனவே இந்தியாவில் செயல்பாட்டில் இருக்கும் தொழிற்சாலையை வாங்க முடிவு செய்தது.
ஜெனரல் மோட்டார்ஸ்
இதற்காக இந்தியாவில் வர்த்தகம் செய்ய முடியாமல் தடுமாறி வரும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவன தொழிற்சாலையைக் கைப்பற்றவும், அதன் மூலம் வர்த்தகத்தைத் துவங்கவும், முதற்கட்ட ஒப்பந்தம் செய்யப்பட்டது.
6 மாத நீட்டிப்பு
இத்திட்டத்திற்கு அனுமதி வாங்க கிட்டதட்ட 2 வருடமாகக் காத்திருக்கும் நிலையில், இந்த ஒப்பந்த காலத்தை 6 மாத காலம் நீட்டிப்பு செய்துள்ளது. இந்த 6 மாதத்திலாவது கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவன திட்டத்திற்கு ஒப்புதல் கிடைக்குமா என எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறது.
கிரேட் வால் மோட்டார்ஸ் முதலீடு
இத்திட்டத்திற்காகக் கிரேட் வால் மோட்டார்ஸ் 3 முதல் 5 பில்லியன் டாலர் வரையிலான முதலீடு செய்யத் தயாராக உள்ளது. ஆனால் இந்தியா - சீனா எல்லை பிரச்சனையின் காரணமாக இந்த ஒப்பந்தத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காமல் உள்ளது.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த ஆண்டு இந்தியாவுடன் எல்லையைப் பகிரும் நாடுகளில் இருக்கும் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யவும், அரசுத் திட்டத்தில் பங்கு பெறவும் அதிகளவிலான கட்டுப்பாடுகளையும், தடைகளையும் விதித்தது.
சீனா
இந்தக் கட்டுப்பாடுகள் முக்கியமாகச் சீன நிறுவனங்களை இந்தியச் சந்தையில் இருந்து வெளியேற்றவே போடப்பட்டது. குறிப்பிடத்தக்கது. இந்தக் கட்டுப்பாட்டில் தான் தற்போது சீனாவின் கிரேட் வால் மோட்டார்ஸ் மாட்டிக்கொண்டு உள்ளது.
அனுமதி மறுப்பு
ஜூன் 8ஆம் தேதி மத்திய செலவின அமைச்சகம் (Department of Expenditure) அரசுத் திட்டங்களைக் கைப்பற்றும் ஏல திட்டத்தில், இந்திய எல்லையைப் பகிரும் நாடுகளில் இருக்கும் நிறுவனங்களிடம் டிராஸ்பர் ஆப் டெக்னாலஜி ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ள இந்திய நிறுவனங்கள் பங்கு பெறலாம் எனத் தெரிவித்த நிலையில், இந்த அனுமதியைத் திரும்பப் பெற மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications