சென்னை மக்கள் கதறல்.. 2 வருசம் தான் ஆச்சு, மீண்டும் சொத்து வரி உயர்வா..?! வரி உயர்த்த என்ன காரணம்..?

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதும், நகரின் உள்கட்டமைப்பு தொடர்ந்து மேம்பட்டு வரும் வேளையில் சென்னை மாநகராட்சி நிர்வாகத்திற்கு முக்கியமான பிரச்சனை வந்துள்ளது. இதை சரி செய்ய சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்துக்கள் மீதான வரியை உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இது சென்னை மக்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது, ஏனென்றால் 2 வருடத்திற்கு முன்பு தான் சென்னை மாநகராட்சி நிர்வாகம் (GCC) சொத்து வரியைத் தடாலடியாக உயர்த்தியது.

சென்னை மாநகராட்சி நிர்வாகம் (GCC) சொத்து வரி விகிதத்தை தற்போது இருக்கும் அளவீட்டைக் காட்டிலும் 6% அதிகரிக்க வெள்ளிக்கிழமை நடைபெற்ற சபைக் கூட்டத்தில் தீர்மானமாகச் சமர்ப்பிக்கப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. இது தொடர்பான முடிவுகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

சென்னை மக்கள் கதறல்.. 2 வருசம் தான் ஆச்சு, மீண்டும் சொத்து வரி உயர்வா..?! வரி உயர்த்த என்ன காரணம்..?

சொத்து வரி உயர்வு: தமிழ்நாட்டில் கடைசியாக பொது சொத்து வரி மாற்றம் என்பது ஏப்ரல் 1, 2022 அன்று நடைபெற்றது, இந்த மாற்றத்தில் குடியிருப்பு மற்றும் வணிக சொத்துக்களுக்கான வரி விகிதம் 25 முதல் 100 சதவீதம் வரையில் அதிகரித்தது.

சென்னை நிலவரம்: சென்னையில் மாநகராட்சி நிர்வாகம் 2022 ஆம் ஆண்டில் குடியிருப்பு சொத்துக்கள் மீதான வரியை 50-150% உயர்த்தியது, அதேசமயத்தில் குடியிருப்பு அல்லாத சொத்துக்கள் மீதான வரியை 100-200% உயர்த்தியது. கூடுதலாக, காலியான நிலத்திற்கான ஒரு சதுர அடிக்கான வரி 2022 இல் 0.50 ரூபாயில் இலிருந்து 1 ரூபாயாக உயர்த்தப்பட்டது.

சென்னை மக்களுக்கு என்ன பாதிப்பு: இந்த நிலையில் வெறும் 2 வருட இடைவெளியில் மீண்டும் சொத்து வரியை உயர்த்த தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாக வந்த செய்தி சென்னை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காரணம் சொத்து வரி உயர்வு என்பது வீட்டு உரிமையாளர்களையும், புதிதாக வீடு வாங்குபவர்களையும் நேரடியாகப் பாதிக்கும் என்பது ஒருபக்கம் இருந்தாலும், மறைமுகமாக வாடகை வீட்டில் இருப்பவர்களையும் இது பாதிக்கிறது.

சட்டம் என்ன சொல்கிறது?: தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள், 2023 இன் விதி 264 (2) இன் படி, நிலம், கட்டிடங்கள், சேமிப்பு கட்டமைப்புகள் அல்லது தொலைத்தொடர்பு கோபுரங்களின் ஆண்டு மதிப்பின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் வரி உயர்வு செய்யலாம். இந்த வரி உயர்வை முடிவு செய்ய அடிப்படை விதிமுறை என்னவென்றால் முந்தைய ஐந்து ஆண்டுகளுக்கான மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியின் (GSDP) சராசரி வளர்ச்சி விகிதம் அல்லது 6%, இதில் எது அதிகமாக உள்ளதோ அதன் படி வரி திருத்தம் ஆண்டுதோறும் செய்யலாம்.

என்ன காரணம்..?: சென்னை மாநகராட்சி-யின் வருவாய்த் துறையில் உள்ள அதிகாரிகள் வரி உயர்வுக்கான காரணங்கள் குறித்துக் கூறுகையில், சில திட்டங்களுக்குத் தமிழ்நாடு அரசு இன்னும் நிதியை வெளியிடாததால் மாநகராட்சி நிர்வாகம் நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிதி பற்றாக்குறையைச் சமாளிக்க, மாநகராட்சி சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த மூலதன நிதியைப் பயன்படுத்தி வருகிறது. இதனைச் சமாளிக்கவே வரி உயர்வு செய்யப்படுவதாக ஹிந்து பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+