இந்தியா முழுவதும் கிளீன்டெக், கிளீன் எனர்ஜி பிரிவில் அதிகப்படியான முதலீடுகளையும், விரிவாக்கமும் மத்திய மாநில அரசு செய்து வரும் நிலையில் தனியார் நிறுவனங்களும் இப்பிரிவில் அதிக முதலீடுகளைச் செய்து வருகிறது.
இந்நிலையில் க்ரீவிஸ் காட்டன் இந்தியாவில் தற்போது வேகமாக வளர்ந்து வரும் எலக்ட்ரிக் மொமிலிட்டி பிரிவில் செப்டம்பர் காலாண்டில் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல மிக முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
க்ரீவிஸ் காட்டன்
க்ரீவிஸ் காட்டன் தனது எலக்ட்ரிக் வாகன பிரிவை வலிமைப்படுத்தவும், புதிய எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்யவும் சுமார் 700 கோடி ரூபாய் முதலீடு உடன் தமிழ்நாட்டில் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி தளத்தை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
நாகேஷ் பசவனஹள்ளி
இதுகுறித்து க்ரீவிஸ் காட்டன் நிறுவனத்தின் குரூப் சிஇஓ மற்றும் நிர்வாகத் தலைவர் நாகேஷ் பசவனஹள்ளி கூறுகையில் இன்னும் நாங்கள் சப்ளை செயின் பிரிவில் அதிகப்படியான சவால்களை எதிர்கொண்டு வருகிறோம், அதை விரைவில் சரி செய்யப் பணியாற்றி வருகிறோம்.
எலக்ட்ரிக் பவர்டிரைன்
க்ரீவிஸ் காட்டன் நிறுவனம் இரு சக்கரம் மற்றும் 3 சக்கர வாகனங்களுக்கான எலக்ட்ரிக் பவர்டிரைன் உற்பத்தி செய்து வருகிறது. இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மவுசு அதிகரித்துள்ள வேளையில் செப்டம்பர் காலாண்டில் க்ரீவிஸ் காட்டன் சிறப்பான வளர்ச்சி அளவீட்டைப் பதிவு செய்துள்ளது.
எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பு
இந்தியாவில் தற்போது அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பில் இறங்கியுள்ள வேளையில் க்ரீவிஸ் காட்டன் நிறுவனம் அக்டோபர் மாதத்தில் மட்டும் 7000க்கும் அதிகமான எலக்ட்ரிக் பவர்டிரைன்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் வருமானத்தின் அளவு 2 மடங்கு அதிகரித்துள்ளது.
120 கிலோமீட்டர் எலக்ட்ரிக் பவர்டிரைன்
இந்த நிலையில் சந்தையில் டிமாண்ட் பொருத்து புதிய அறிமுகம் செய்துள்ள 120 கிலோமீட்டர் செல்லும் எலக்ட்ரிக் பவர்டிரைன் சந்தையில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதாக நாகேஷ் பசவனஹள்ளி கூறுகிறார். மேலும் இந்த எலக்ட்ரிக் பவர்டிரைன் பிற முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யவும் வாய்ப்பு உள்ளது.
700 கோடி ரூபாய் முதலீடு
இந்நிலையில் இப்பிரிவு வர்த்தகத்தை மேம்படுத்தவே 700 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழ்நாட்டில் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி தளத்தை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த உற்பத்தி தளம் மூலம் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பவர்டிரைன் உற்பத்தியை பெரிய அளவில் அதிகரிக்க முடியும் என க்ரீவிஸ் காட்டன் நம்புகிறது.
தமிழ்நாடு
மேலும் க்ரீவிஸ் காட்டன் கூட்டணி நிறுவனங்களையும், முதலீட்டாளர்கள் உடன் சேர உள்ளதாக அறிவித்துள்ளது. தற்போது தமிழ்நாட்டில் அமைக்கப்பட உள்ள தொழிற்சாலை மூலம் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைப்பது மட்டும் அல்லாமல் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் முன்னோடியாகவும் தமிழ்நாடு இருக்க முடியும்.


Click it and Unblock the Notifications