ராணிப்பேட்டை குட்டி ஓசூர் ஆக மாறிய வரும் வேளையில் டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவர், தைவான் நாட்டின் Hong Fu போன்ற நிறுவனங்கள் பெரும் தொழிற்சாலைகள் உடன் இம்மாவட்டத்தின் பொருளாதாரத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் வேளையில், அடுத்ததாக ஒரு நிறுவனம் வர உள்ளது.
இந்திய எலக்ட்ரிக் வாகன சந்தையில் முக்கியமான நிறுவனமான கிரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டி, IPO வெளியிடுவதற்கான திட்ட வரைவு அறிக்கையை செபியில தாக்கல் செய்துள்ளது. இது கிரீவ்ஸ் காட்டன் லிமிடெட்டின் துணை நிறுவனமாகும்.

தமிழ்நாட்டில் பேட்டரி தொழிற்சாலை: கிரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டி தனது DRHP அறிக்கையில் தனது வளர்ச்சி திட்டங்களின் ஒரு பகுதியாக, 2027 நிதியாண்டுக்குள் தமிழ்நாட்டின் ராணிப்பேட்டையில் உள்ள தனது உற்பத்தி தொழிற்சாலையில் இன்-ஹவுஸ் பேட்டரி பேக் அசெம்பிளி லைனை நிறுவ திட்டமிட்டுள்ளது.
பேட்டரி பேக்: தற்போது, கிரீவ்ஸ் எலக்ட்ரிக் நிறுவனம் வெளி சப்ளையர்களிடமிருந்து அசெம்பிள் செய்யப்பட்ட பேட்டரி பேக்குகளை வாங்குகிறது. எலக்ட்ரிக் வாகனங்களின் ஒட்டுமொத்த உற்பத்தி செலவில் பேட்டரிகள் அதிகப்படியான செலவைக் ஈர்க்கும் காரணத்தால் இந்த செலவுகளை சொந்தமாக தயாரிக்கும் முடிவை கையில் எடுத்துள்ளது.
அம்ப்யூர் வாகனங்களில் பேட்டரி செலவு: கிரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் Ampere பிராண்ட் கீழ் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களையும், Ele, Greaves மற்றும் Electra பிராண்டுகள் கீழ் 3 சக்கர எலக்ட்ரிக் மற்றம் ICE வாகனங்களை விற்பனை செய்கிறது.
இந்த பேட்டரி பேக்குகள் மொத்த வாகன தயாரிப்பு செலவுகளில் சுமார் 33% ஆகும், அதேசமயம் எலக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்களுக்கு, இந்த எண்ணிக்கை 54% ஆக உயர்கிறது. லித்தியம்-அயன் பேட்டரி கொள்முதல் தற்போது நிறுவனத்தின் மொத்த செலவுகளில் 25% க்கும் அதிகமாக உள்ளது.
இன்-ஹவுஸ் பேட்டரி தயாரிப்பு: ராணிப்பேட்டையில் உருவாக்கப்படும் இன்-ஹவுஸ் அசெம்பிளி லைனை நிறுவுவதன் மூலம், பேட்டரி உற்பத்தி மீதான கட்டுப்பாட்டை அதிகரிக்கவும், தரக் கட்டுப்பாட்டை மேம்படுத்தவும், விநியோகச் சங்கிலி நம்பகத்தன்மையை அதிகரிக்கவும் கிரீவ்ஸ் எலக்ட்ரிக் இலக்கு வைத்துள்ளது.
ராணிப்பேட்டை தொழிற்சாலையில் முன்மொழியப்பட்ட அசெம்பிளி லைனில் ஆண்டுதோறும் 400,000 யூனிட் பேட்டரி தயாரிப்பு திறன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026 மே மாதத்தில் அசெம்பிளி லைன் இயக்கத்திற்கு வந்த பின்னர், 2026 ஜூலை மாதத்திலிருந்து வணிக உற்பத்தியைத் தொடங்க நிறுவனம் எதிர்பார்க்கிறது. இதை அனைத்தையும் தனது ஐபிஓ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ரூ.1,000 கோடி IPO திட்டம்: கிரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டி தனது IPO மூலம் ரூ.1,000 கோடி நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்த நிதியில் ஒரு பகுதி, குறிப்பாக ரூ.82.9 கோடி தொகை ராணிப்பேட்டையில் அமைக்கப்படும் இந்த இன்-ஹவுஸ் பேட்டரி அசெம்பிளி தளத்தை நிறுவுவதற்காக ஒதுக்கப்படும்.


Click it and Unblock the Notifications