பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் கிரீஸ் தங்களது நாட்டில் இனி 6 நாட்கள் அலுவல் நாட்கள் என்ற நடைமுறை பின்பற்றப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளும் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக இருக்க வேண்டும் என்ற ஒரு கருத்தாக்கத்திற்கு மாறி வருகின்றன.
இதன் மூலம் பணியாளர்கள் தங்களது வேலையையும் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையும் சமன் செய்ய முடியும் என கூறப்படும் நிலையில் கிரீஸ் இவ்வாறு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கிரீஸ் நாட்டில் ஜூலை 1ஆம் தேதி முதல் ஆறு நாட்கள் அலுவலக வேலை நாட்களாக இருக்கும்.இது தொடர்பாக கிரீஸ் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்போது 5 நாட்கள் அலுவலக நாட்களாக இருக்கிறது ஜூலை 1ஆம் தேதி முதல் குறிப்பிட்ட சில துறைகளை சார்ந்தவர்கள் தங்களது பணியாளர்களை வாரத்தில் 6 நாட்களுக்கு வேலை செய்யுங்கள் என கூற முடியும் என தெரிவித்துள்ளது.
குறிப்பாக தொழிற்சாலைகள் மற்றும் உற்பத்தி ஆலைகள் மற்றும் 24 மணி நேரமும் சேவைகளை வழங்கக்கூடிய துறைகளில் இனி வாரத்தில் ஆறு நாட்கள் வேலை செய்ய வேண்டி இருக்கும் என தெரிவித்துள்ளது. இந்த புதிய அறிவிப்பில் சுற்றுலா மற்றும் உணவுத்துறை சார்ந்த நிறுவனங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கிரிஸீல் ஏற்கனவே மக்கள் தொகை குறைவு மற்றும் திறமையான பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்தது உள்ளிட்ட பிரச்சனைகள் நிலவும் நிலையில் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டும், பொருளாதாரத்தை மீட்கும் பொருட்டும், இப்படி ஒரு முடிவினை எடுத்திருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
இதன்படி இப்படி கூடுதல் நாட்கள் அதாவது ஐந்து நாட்கள் அல்லாமல் கூடுதலாக வேலை செய்யும் பணியாளர்களுக்கு 40% வரை கூடுதலாக ஊதியம் வழங்கப்படும் என்றும் கிரீஸ் அரசு கூறியுள்ளது. இதன் மூலம் தங்கள் நாட்டில் கூடுதல் நேரம் மக்கள் உழைப்பார்கள் என்றும் இது தங்கள் நாட்டின் உற்பத்தியை அதிகரித்து பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் என கிரீஸ் அரசு நம்புகிறது.
ஊழியர்களுக்கு வாரத்தில் ஆறு நாட்களுக்கு எட்டு மணி நேரங்கள் வேலை செய்வது அல்லது ஐந்து நாட்களில் கூடுதலாக ஒவ்வொரு நாளும் இரண்டு மணி நேரங்கள் வேலை செய்வது என இரண்டு வாய்ப்புகளை நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்ற அறிவிப்பையும் கிரீஸ் அரசு வெளியிட்டுள்ளது. இருந்தாலும் கிரீஸ் அரசின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தொழிலாளர் யூனியன்களும் எதிர்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தற்போதைய சூழலில் ஐரோப்பிய நாடுகளிலேயே கிரீஸ் நாட்டில் தான் அதிக வேலை நேரம் இருப்பதாக சொல்லப்படுகிறது. கிரீஸ் நாட்டு மக்கள் ஒரு வாரத்திற்கு 40 மணி நேரங்கள் ஏற்கனவே வேலை செய்கின்றனர். இந்த நிலையில் கூடுதலாக ஒரு நாள் வேலை செய்ய வேண்டும் என கூறுவது தொழிலாளர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Story Written by: Devika
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications