உங்க சோப்பு, ஷாம்பு எல்லாம் சைவமா? அசைவமா? மத்திய அரசு போட்ட திடீர் உத்தரவு..!!

சோப்பு, ஷாம்பு,டூத் பேஸ்ட் மற்றும் பல அழகு சாதன பொருட்களை நாம் அன்றாடம் பயன்படுத்துகிறோம். இந்தியா இந்த பொருட்களை விற்பதற்கான மிகப்பெரிய ஒரு சந்தை. ஒரு ஏழை குடும்பம் தொடங்கி பெரிய பணக்கார குடும்பம் வரை அவர்களின் தேவைக்கு ஏற்பவும் விலைக்கு ஏற்பவும் வகை வகையாக சோப்பு, ஷாம்பு உள்ளிட்டவை கிடைக்கின்றன.

செடிகள் தொடங்கி விலங்குகள் வரை பல இடங்களில் இருந்து மூல பொருட்கள் திரட்டப்பட்டு தான் வகை வகையான சோப்பு, ஷாம்பு மற்றும் பல அழகு சாதன பொருட்கள் தயாராகின்றன. இனி மக்கள் ஒரு பொருளை வாங்கும் போதே அது எதில் இருநெது தயாரிக்கப்பட்டது என்பதை எளிதாக தெரிந்து கொள்ள முடியும். அதாவது சைவ பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்டதா அல்லது அசைவ பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்டதா என்பது தெரிந்துவிடும்.

உங்க சோப்பு, ஷாம்பு எல்லாம் சைவமா? அசைவமா?  மத்திய அரசு போட்ட திடீர் உத்தரவு..!!

மத்திய அரசு இதற்காக ஒரு புதிய விதிமுறையை அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் இனி சோப்பு, ஷாம்பு மற்றும் அழகு சாதன பொருட்களிலும் சைவ மற்றும் அசைவ குறியீடுகள் இடம்பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய லேபிளிங் விதியை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. உணவு பொருட்களின் பாக்கெட்டுகளில் பச்சைக் குறி இருந்தால் சைவம் என்றும், சிவப்பு/பழுப்பு நிற குறி இருந்தால் அசைவம் என்றும் தெரிந்து கொள்கிறோம். இனி அதே போன்ற லேபிளிங் சோப்பு, ஷாம்புகள் , டூத் பேஸ்ட்கள் , அழகுசாதன பொருட்கள் மற்றும் தனிநபர் பராமரிப்பு பொருட்கள் ஆகியவற்றின் பேக்கிங்கிலும் இடம்பெறுவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு இதற்காக 2011ஆம் ஆண்டின் சட்டப்பூர்வ அளவீட்டு (பாக்கெட் பொருட்கள்) விதிகளில் திருத்தங்களை செய்துள்ளது. இந்த புதிய திருத்தப்பட்ட விதிகளின்படி, இந்த உத்தரவு திங்கட்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது. எனவே இனி நாம் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கும் போது, அந்த பொருள் சைவ மூலப்பொருளா அல்லது அசைவ மூலப்பொருளா என்பதை மிக எளிதாக அடையாளம் கண்டுகொள்ளலாம். இதன் மூலம் அந்த பொருளை வாங்கலாமா வேண்டாமா என்ற முடிவை எடுத்து கொள்ளலாம்.

Also Read

தாவரங்கள் அல்லது சைவ மூலப்பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களுக்கு பச்சை நிற புள்ளி (Green Dot) கட்டாயமாக இடப்பட வேண்டும். விலங்கு சார்ந்த அல்லது அசைவ மூலப்பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களுக்கு சிவப்பு அல்லது பழுப்பு நிறப் புள்ளி (Red or Brown Dot) இடப்பட வேண்டும்.

இந்த குறியீடுகள் பேக்கேஜிங்கிங்கில் பிரதானமாக மேல் பகுதியில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் ஒரு பாக்கெட்டை எடுக்கிறார் என்றால் அவரது கண்களுக்கு பார்த்த உடனே புலப்படும் வகையில் இந்த குறியீடு இடம்பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

எனவே வாடிக்கையாளர் அந்த நிற குறியீடுகளை வைத்து ஒரு பொருளை வாங்கலாமா வேண்டாமா என்ற முடிவினை எடுக்கலாம். இது பொருட்கள் தயாரிப்பு குறித்த வெளிப்படை தன்மையை வழங்குகிறது. ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை விற்கும் நிறுவனங்கள் அது எந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும் என சில மாதங்களுக்கு முன்பு விதிமுறை கட்டாயமாக்கப்பட்டது. தற்போது அத்துடன் புதிதாக இதுவும் சேர்க்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+