தண்ணீர் தட்டுப்பாடு நிறைந்த மகாராஷ்டிரா பகுதியைச் சேர்ந்த அபிஜித் சாத்தேவுக்கு 24 மணிநேரமும் தண்ணீர் சப்ளை இருக்க வேண்டும் என்பது ஒரு கனவாக இருந்தது. தனது கனவை நனவாக்க அவர் ஜல்சேவாக் இந்தியா என்ற அமைப்பை நிறுவினார். அதன்மூலம் தண்ணீர் மறுசுழற்சியைச் செய்ய முடிவு செய்தார்.
இந்தியாவில் தினமும் 31 பில்லியன் லிட்டர் கிரே வாட்டரை உற்பத்தியாகிறது. சமையலறையில் உள்ள சிங்க்குகள், பாத்ரூம் ஷவர்கள், கழிவுநீர் அல்லாத பயன்படுத்தப்பட்ட தண்ணீர், குடிநீருக்குப் பயன்படுத்த முடியாவிட்டாலும் பாசனத்துக்குப் பயன்படும் தண்ணீர் ஆகியவைதான் கிரே வாட்டர் எனப்படுகிறது.

இந்தியக் குடும்பங்களில் மட்டும் 50 சதவீத கிரே வாட்டரைப் பயன்படுத்துகின்றனர். இதில் 5 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது.
இந்த விஷயத்தைப் புரிந்து கொண்ட அபிஜித் தனது இன்ஜினியர் வேலையை விட்டுவிட்டு மறுசுழற்சி தண்ணீர் உற்பத்திக்கு மாறினார்.
ஜல்சேவா இந்தியா அமைப்பை தொடங்கி இந்திய குடும்பங்களுக்கு உதவும்வகையில் கிரே வாட்டரை மறுசுழற்சி செய்யும் முயற்சியில் இறங்கினார்.
ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மறுசுழற்சி சிஸ்டத்தை நிறுவி கிரே வாட்டரை பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. வணிக வளாகங்களிலும் இந்த சிஸ்டம் பொருத்தப்பட்டது.
செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுதல், டாய்லெட்டில் பயன்படுத்துதல், தரைகளை கழுவுதல் போன்ற பயன்பாட்டுக்கு இந்த மறுசுழற்சி செய்யப்பட்ட தண்ணீரைப் பயன்படுத்தலாம். இந்த சிஸ்டம் மூலம் கிரே வாட்டரை மறுசுழற்சி தண்ணீரை பயன்படுத்துவதால் தூய நீரின் பயன்பாட்டில் 40 சதவீதத்தை மிச்சப்படுத்தலாம்.
நாட்டின் 12 நகரங்களில் இந்த சிஸ்டத்தை அபிஜித் சாத்தே நிறுவினார். அத்துடன் இந்த மறுசுழற்சி தண்ணீர் மற்ற வணிக முறைகளில் வாங்குவதை விட 50 சதவீதம் விலை குறைவானது என்று அபிஜித் சாத்தே கூறுகிறார்.
தினமும் அவரது நிறுவனம் 1.25 லட்சம் லிட்டர் கிரே வாட்டரை மறுசுழற்சி செய்து தண்ணீரை விற்கிறது.
பெங்களூர் போன்று கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு உள்ள நகரங்களில் இந்த கிரே வாட்டர் மறுசுழற்சி சிஸ்டம் மிகவும் பலன்தரக் கூடிய விஷயமாகும். இந்தப் புதுமையான சிஸ்டத்தை பெங்களூரு மக்கள் பயன்படுத்தினால் உண்மையிலேயே தண்ணீர் பற்றாக்குறையில் இருந்து தப்பிக்கலாம்.
Story written by: I.jayachandran


Click it and Unblock the Notifications