இந்தியாவில் கொரோனா தொற்றுக் காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுன் காலத்தில் மக்கள் வீட்டிலேயே முடங்கியிருக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்ட காரணத்தால், அடிப்படை சேவைகளைப் பெற மக்கள் ஆன்லைன் சேவைகளை நாட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.
இதனால் குறுகிய காலகட்டத்தில் மிகப்பெரிய அளவிலான வர்த்தக வளர்ச்சியை ஆன்லைன் சேவை நிறுவனங்கள் பெற்றது. இதன் காரணமாகப் பல முன்னணி நிறுவனங்கள் தனது சேவை தளத்தை விரிவாக்கம் செய்தது மட்டும் அல்லாமல் சேவை அளிக்கும் பிரிவுகளையும் விரிவாக்கம் செய்தது.
இதன் உச்சத்தைத் தான் தற்போது க்ரோபர்ஸ் அடைந்துள்ளது.
க்ரோபர்ஸ் நிறுவனம்
நாட்டின் 10 முக்கிய நகரங்களில் மக்கள் ஆர்டர் செய்யும் பொருட்கள் வெறும் 10 நிமிடத்தில் ஹோம் டெலிவரி செய்யும் சேவையை க்ரோபர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பல முன்னணி நிறுவனங்களுக்கு அதிர்ச்சி அளிப்பது மட்டுமல்லாமல் வியப்பு அளிக்கும் வகையிலும் உள்ளது.
மளிகை மற்றும் உணவு பொருட்கள் டெலிவரி
க்ரோபர்ஸ் இந்தியாவின் முன்னணி ஆன்லைன் மளிகை மற்றும் உணவு பொருட்கள் டெலிவரி சேவை நிறுவனமாகும். இந்நிறுவனத்தில் மக்களுக்குத் தேவையான அனைத்து உணவு பொருட்களும், மளிகை பொருட்களும் பட்டியலிடப்பட்டு இருக்கும் தேவையானவற்றைத் தேர்வு செய்து ஆர்டர் செய்தால் போதும் க்ரோபர்ஸ் டெலிவரி பார்ட்னர்கள் பொருட்களை ஹோம் டெலிவரி செய்து விடுவார்கள்.
முன்னணி நிறுவனங்கள்
இது கிட்டத்தட்ட ஒரு ஈகாமர்ஸ், உணவு டெலிவரி சேவையைப் போலத் தான், ஆனால் சில கட்டமைப்புகள் மட்டும் இதில் மாறுபடும். இதே பிரிவில் தான் ரிலையன்ஸ் ஜியோ மார்ட், பிக் பேஸ்கட், டிமார்ட், ஸ்டார் பஜார், மோர் சூப்பர் மார்ட் ஆகியவை இயங்கி வருகிறது.
சோமேட்டோ உடன் இணைப்பு
ஏற்கனவே இத்துறையில் கடுமையான போட்டி இருக்கும் வேளையில் க்ரோபஸ் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு முன்னணி நிறுவனங்களுக்கு நெருக்கடியை உருவாக்கியுள்ளது. சமீபத்தில் க்ரோபர்ஸ் நிறுவன பங்குகளைச் சோமேட்டோ கைப்பற்றியுள்ள நிலையில் சோமேட்டோ தளத்திலும் இனி க்ரோபர்ஸ் சேவை இணைக்கப்படும்.
10 நகரங்களில் 10 நிமிடத்தில் டெலிவரி
க்ரோபர்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்தியாவில் டெல்லி, மும்பை, பெங்களூர், ஜெய்ப்பூர் உட்பட 10 நகரங்களில் வாடிக்கையாளர்கள் பொருட்களை ஆர்டர் செய்த 10 நிமிடத்தில் டெலிவரி செய்யப்படும் என அறிவித்துள்ளது.
புதிய இலக்கு
தற்போது க்ரோபர்ஸ் நிறுவனத்தில் சராசரியாக 15 நிமிடத்தில் அனைத்து ஆர்டர்களையும் டெலிவரி செய்து வரும் நிலையில், 10 நிமிட டெலிவரியை புதிய இலக்காக எடுத்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளது.
ஜப்பான் சாப்ட்பேங்க்
ஜப்பான் சாப்ட்பேங்க் நிறுவன முதலீட்டில் இயங்கும் க்ரோபர்ஸ் நிறுவனம் தொடர்ந்து தனது நெட்வொர்க் மற்றும் டெலிவரி பார்ட்னர்கள் எண்ணிக்கையை முக்கியமான வர்த்தகப் பகுதிகளில் அதிகரித்து வருகிறது.
45 நாட்களில் இலக்கு
இப்புதிய 10 நிமிட டெலிவரி சேவையை 10 நகரங்களில் மட்டும் துவங்கியுள்ளது க்ரோபர்ஸ். மேலும் அடுத்த 45 நாட்களில் க்ரோபர்ஸ் தளத்தில் இருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இந்த 10 நிமிட டெலிவரி சேவையை கொடுக்க முடியும் என நம்புகிறது.
7000 பொருட்கள் டெலிவரி
க்ரோபர்ஸ் தளத்தில் இந்த 10 நிமிட டெலிவரி சேவையின் கீழ் தினசரி பயன்பாட்டுக்குத் தேவைப்படும் சுமார் 7000 பொருட்களை டெல்லி, குருகிராம், மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, ஜெய்ப்பூர், காசியாபாத், நொய்டா மற்றும் லக்னோ வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்த 10 நிமிடத்தில் பெற முடியும்.
க்ரோபர்ஸ் நிறுவனத்தின் சிஇஓ
இதுகுறித்து க்ரோபர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ அல்பிந்தர் திண்டசா கூறுகையில் அடுத்த 45 நாட்களில் பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு 10 நிமிட டெலிவரி சேவையைச் சாத்தியமாக்கும் திட்டத்தைக் இந்நிறுவனம் கையில் எடுத்துள்ளது. க்ரோபர்ஸ் உங்கள் பகுதியில் இல்லையெனில் கூடிய விரைவில் எங்களின் சேவை உங்களைத் தேடி வரும் எனத் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications