குரோஃபர்ஸ் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. யார் அந்த 4,000 அதிர்ஷ்டசாலிகள்..!

நாட்டில் நிலவி வரும் மந்த நிலையில் பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் கூட, நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. சொல்லப்போனால் அரசு நிறுவனங்களே ஆட்டம் கண்டுள்ளன.

ஆனால் இப்படி ஒரு நிலையிலும் கூட பலத்த சலுகைகளுடன் தங்களது வர்த்தகத்தை செப்பனே செய்து வருவது ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனங்கள் தான்.

அமேசான், பிளிப்கார்ட் இது போன்ற பிற நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வந்தாலும், அவர்களுக்கெல்லாம் ஈடு கொடுக்கும் நிறுவனமாகத் தான், இந்தியாவைச் சேர்ந்த ஸ்டார் அப் நிறுவனமான குரோஃபர்ஸ் நிறுவனம் உள்ளது.

அடுத்தடுத்து முதலீடு

அடுத்தடுத்து முதலீடு

இந்தியாவில் பலத்த போட்டியை சந்தித்து வந்தாலும், நஷ்டத்தினையே கண்டு வந்தாலும் அவற்றையெல்லாம் தாக்குபிடித்து, படிப்படியாக முன்னேற்ற பாதைக்கு செல்ல, குரோஃபர்ஸ் நிறுவனம் மேலும் மேலும் தொடர்ந்து வர்த்தகத்தை மேம்படுத்த முதலீடுகளை செய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது செயல்பாடுகளை அதிகரிக்க 100 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. குரோபர்ஸ் நிறுவனத்தில் சாப்ட் பேங்க், டைகர் குளோபல் போன்ற ஜாம்பவான்களும் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புதியதாக 4,000 பேர் சேர்ப்பு

புதியதாக 4,000 பேர் சேர்ப்பு

குருகிராமைச் சேர்ந்த இந்த இந்திய நிறுவனம் 3,000 க்கும் மேற்பட்ட வினியோக சேவை கூட்டாளர்களுடன் கூட்டு சேர்ந்து, தற்போது நடந்து கொண்டிருக்கும் ஒன்பது நாள் விற்பனை விழாவிற்காக சுமார் 4,000 ஊழியர்களை தற்காலிகமாக வேலைக்கு அமர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. இது தவிர மூன்று புதிய கிடங்குகளையும் சேர்த்துள்ளதாகவும் கூறியுள்ளது.

மார்கெட்டிங்கில் கவனம்

மார்கெட்டிங்கில் கவனம்

இது குறித்து குரோஃபர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாங்கள் வருடாந்திர மார்கெட்டிங் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறோம். இதன் மூலம் புதிய பயனர்களுக்கு எங்கள் மதிப்பு என்னவென்று தெரியும். அதே நேரத்தில் சப்ளையர்கள் மற்றும் உற்பத்தி கூட்டாளர்களிடமும், திரும்பிச் சென்று பேச்சு வார்த்தைகளை நடத்தி வருகிறோம் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

விரிவாக்கம்

விரிவாக்கம்

தற்போது குரோஃபர்ஸ் நிறுவனத்தில் 7,000 சேவை பார்ட்னர்களும், 5,500 கிடங்கு ஊழியர்களும் பணியாற்றி வருவதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் தற்போது 27 நகரங்களில் 45 கிடங்குகள் உள்ளதாகவும் கூறியுள்ளது. ஆக மேலும் மேலும் இந்த நிறுவனத்தை விரிவுபடுத்த தொடர்ந்து முதலீடுகளையும் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

வர்த்தகத்தை மேம்படுத்த அதிரடி நடவடிக்கை

வர்த்தகத்தை மேம்படுத்த அதிரடி நடவடிக்கை

இது தவிர வர்த்தகத்தை மேம்படுத்த தள்ளுபடிகள், சலுகைகள் தவிர, இதற்கும் மேலாக இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க கார், இரு சக்கர வாகனம், மொபைல் போன்கள் என பல வடிவில் பரிசுகளை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் தள்ளுபடிகளையும் சலுகைகளையும் மட்டுமே கொடுத்து வந்த இந்த நிறுவனம் தற்போது ஆச்சரியமான பரிசுகளையும் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+