தனி நபர் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட மொத்த வரி வருவாய் 24% அதிகரித்துள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
நிகர வசூல் விகிதம் கடந்த ஆண்டினை காட்டிலும் 16% அதிகரித்து, 7.45 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது பட்ஜெட் மதிப்பீட்டில் எதிர்பார்க்கப்பட்டதில் 52 மேலாக அடைந்துள்ளது.
கடந்த ஆண்டினை காட்டிலும் அக்டோபர் 8 வரையிலான இதே காலகட்டத்தில், வரி வசூல் விகிதமானது 23.8 அதிகரித்து, 8.98 லட்சம் கோடி ரூபாயாகும்.
ரீபண்டுக்கு பிறகு வரி வருவாய்
ரீபண்டுக்கு பிறகு கிடைத்த நேரடி வரி வருவாய் விகிதம் 16.3% அதிகரித்து, 7.45 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஏப்ரல் 1 முதல் அக்டோபர் 8 வரையில் கார்ப்பரேட்கள் மூலம் கிடைத்த வரி வசூலானது 16.73% அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் தனி நபர் மூலம் கிடைத்த வருமான வரி வருவாய் 32.30% அதிகரித்துள்ளது. இது சரி செய்தல் மற்றும் ரீபண்டுக்கு பிறகு CIT வசூலில் நிகர வளர்ச்சி 16.29%மும், PITயும் 17.35%மும் அதிகரித்துள்ளது.
நேரடி வரி வருவாய் விகிதம்
நேரடி வரி வருவாய் விகிதம் 23.8% அதிகரித்து, 8.98 லட்சம் கோடி ரூபாயாக உள்ளதாக வருமான வரி துறை தெரிவித்துள்ளது. கார்ப்பரேட் மற்றும் தனி நபரிடம் வசூலிக்கப்படும் வரிகள் நேரடி வரியாகும்.
எவ்வளவு ரீபண்ட்
வரி செலுத்துபவர்களுக்கான ரீபண்ட் கடந்த ஆண்டை விட 81% அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் அக்டோபர் 8ம் தேதி வரையிலான ரீபண்ட் 1.53 லட்சம் கோடி ரூபாயாக வழங்கப்பட்டுள்ளது.
வளர்ச்சி சரியலாம்
இந்தியாவின் வளர்ச்சி விகிதமானது தொடர்ந்து குறையலாம் என இந்திய ஆய்வு நிறுவனங்கள் முதல், சர்வதேச ஆய்வு நிறுவனங்கள் வரையில் கணித்து வருகின்றன. ஆனால் இந்த காலகட்டத்தில் வரி வருவாய் விகிதமானது சீரான வளர்ச்சியினை கண்டுள்ளது, எனினும் ஆய்வுகளின் படி வீழ்ச்சி காணலாம் என்பது, இனி எதிரொலிக்கலாமோ என்ற கவலையினையும் ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் சமீபத்திய மாதங்களாகவே இந்தியாவின் ஏற்றுமதி குறைந்து, வர்த்தக பற்றாக்குறை அதிகரித்து வருகின்றது. இது மேற்கொண்டு வரி வசூல் குறைய வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications