இந்தியாவில், பெண் குழந்தைகளுக்கென்று பல முதலீட்டு திட்டங்கள் உள்ளன. இந்த முதலீட்டு திட்டங்கள் பெற்றோர்களுக்கு, அவர்களின் பெண் குழந்தையின் எதிர்காலத் தேவைகளுக்காக கணிசமான கார்பஸை உருவாக்க உதவுகின்றன. உங்கள் பிள்ளையின் எதிர்காலத்திற்கு சரியான முதலீட்டைத் தேர்ந்தெடுப்பது சிலருக்குக் கடினமாக இருக்கலாம். இந்தக் கட்டுரையில், ஒரு முதலீட்டாளர் ஒரு மாதத்திற்கு ரூ. 1,000 முதலீடு செய்வதன் மூலம் எப்படி ரூ.14 லட்சம் கார்பஸை உருவாக்குவது என்பதைப் பார்ப்போம்.
ஒரு பெரிய தொகையை உங்கள் குழந்தைகளுக்காக உருவாக்க வேண்டுமென்றால், உங்களுக்கு பெண் குழந்தை பிறந்தவுடன் SIP முதலீட்டைத் தொடங்க வேண்டும். சந்தையுடன் இணைக்கப்பட்டிருப்பதால், SIP முதலீட்டில், உங்களுக்கு சில ஆபத்தும் இருக்கலாம். ஆனால் நீண்ட கால SIP முதலீடு, உங்களுக்கு வேறு எந்த திட்டத்திலும் இல்லாத அளவிற்கு சிறந்த வருமானத்தை அளிக்கும். SIP திட்டங்களின் ஆண்டு வருமானம் 12 சதவீதமாக உள்ளது. இருப்பினும், இது சில நேரங்களில் இதை விட அதிகமாக இருக்கலாம்.

1,000 ரூபாயில் SIP-ஐத் தொடங்குங்கள்: உங்களுக்கு குழந்தை பிறக்கும் போது 1000 ரூபாயுடன் SIP-ஐத் தொடங்கினால், 18 வயதிற்குள் நீங்கள் ரூ. 14 லட்சத்திற்கும் அதிகமான தொகையைப் பெற முடியும்.
இதற்கு, நீங்கள் ஒவ்வொரு வருடமும் SIP-இல் 10 சதவிகிதம் முதலீட்டு தொகையை அதிகரிக்க வேண்டும். இதற்கு ஸ்டெப் அப் SIP முறையைப் பயன்படுத்தலாம். நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் தற்போதைய முதலீட்டுத் தொகையை 10 சதவிகிதம் அதிகரித்து சேமித்தால் நல்ல வருமானத்தைப் பெற முடியும்.
ரூ.14 லட்சம் கார்பஸ்-ஐ உருவாக்குவது எப்படி?: உங்களுக்கு குழந்தை பிறந்து ஒரு மாதத்திற்குப் பிறகு நீங்கள் ரூ.1000 SIP-ஐ தொடங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதன்படி ஒரு வருடத்திற்கு 1,000 ரூபாய் மட்டுமே டெபாசிட் செய்வீர்கள். அடுத்த ஆண்டு நீங்கள் ரூ.1,000-த்தில், 10 சதவீதம் அதாவது 100 ரூபாயை சேர்த்து முதலீடு செய்ய வேண்டும்.
அதே போல, உங்கள் SIP முதலீட்டை அடுத்த ஆண்டு ரூ.1100 ஆக அதிகரிக்க வேண்டும். அதற்கும் அடுத்த ஆண்டு, நீங்கள் ரூ.1100-இல் 10 சதவீதத்தை அதிகரிக்க வேண்டும், அதாவது ரூ.110 அதிகமாக, முதலீடு செய்ய வேண்டும். இதேபோல், ஒவ்வொரு ஆண்டும் ஏற்கனவே இருக்கும் தொகையில் 10 சதவீதத்தை நீங்கள் சேர்க்க வேண்டும்.
18 வருடங்கள் இந்த ஃபார்முலாவைப் பயன்படுத்தி SIP முதலீடு செய்ய வேண்டும். இதன் மூலம் நீங்கள் 18 ஆண்டுகளில் மொத்தம் ரூ.5,47,190 முதலீடு செய்திருப்பீர்கள். இதற்கு 12 சதவீத வட்டி வழங்கப்பட்டால், உங்கள் வருமானம் ரூ.8,94,276 ஆக இருக்கும். 18 ஆண்டுகளுக்குப் பிறகு, நீங்கள் SIP திட்டத்திலிருந்து ரூ. 14,41,466 பெறுவீர்கள். அதை நீங்கள் குழந்தையின் செலவுகளுக்கு செலவிடலாம். அதேசமயம் வருமானம் அதிகமாக இருந்தால் அதாவது 15 சதவீதம் வரை இருந்தால், 18 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.19,44,527 கிடைக்கும்.
மேற்கண்ட விபரங்கள் உங்கள் பெண் குழந்தைக்காக எப்படி ரூ. 14 லட்சத்தை உருவாக்க வேண்டும் என்பதை எடுத்து சொல்லவே. இதை வைத்து நீங்கள் முதலீட்டு முடிவுகளை எடுக்கக்கூடாது. உங்களுடைய நிதி ஆலோசகரை அணுகி தக்க ஆலோசனை பெற்று, அதன் பிறகு சுய விருப்பத்துடன் முதலீடு செய்யுங்கள்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?



Click it and Unblock the Notifications