மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் போது 2 வழிகளில் முதலீடு செய்யலாம். ஒன்று எஸ்ஐபி முதலீடுகள். இந்த திட்டங்களுக்கு மாதா மாதம் அல்லது காலாண்டுக்கு ஒரு முறை, அரையாண்டுக்கு ஒரு முறை என பிரித்து நிலையான தொகையை முதலீடு செய்யலாம். மற்றொன்று லம்சம் முதலீடு என்று சொல்லப்படுகிற மொத்த முதலீடு. இந்த திட்டத்தில் நீங்கள் மொத்தமாக குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய வேண்டும். அதற்கு வட்டி வருமானமும் வழங்கப்படும்.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் நன்மை என்னவென்றால் இதற்குக் கிடைக்கும் கூட்டு வட்டி. உங்களுடைய வட்டிக்கும் சேர்த்து வட்டி வழங்கப்படுவது தான் கூட்டு வட்டி. அப்படி இருக்கையில் மியூச்சுவல் ஃபண்ட் லம்சம் முதலீட்டில் ரூ.6 லட்ச ரூபாயை மொத்தமாக முதலீடு செய்தால் ரூ.1 கோடி வருமானம் பெற முடியும். ஆம்.. கூட்டு வட்டியில் இத்தகைய வருமானம் சாத்தியமே!

மொத்த முதலீடு: மொத்த முதலீடு என்பது சிறிது சிறிதாக பிரித்து முதலீடு செய்வதற்கு பதிலாக ஒரே நேரத்தில் முதலீடு செய்வதாகும். இந்த முறை முழுத் தொகையையும் உடனடியாக வருமானம் ஈட்ட தொடங்குவதற்கு அனுமதிக்கிறது. அதாவது எஸ்ஐபி திட்டங்களை பொறுத்தளவில் ஒரு மாதம் நீங்கள் ரூ.3,000 முதலீடு செய்கிறீர்கள்.. அதற்கு மட்டும் தான் வட்டி கிடைக்கும். ஆனால் மொத்தமாக முதலீடு செய்து விட்டால் நீங்கள் முதலீடு செய்த அடுத்த கணத்தில் இருந்து வட்டி வரத் தொடங்கும்.
ஆனால் இதில் உள்ள பிரச்சனை என்னவென்றால் முழு தொகையையும் மொத்தமாக முதலீடு செய்வதால் சந்தை அபாயங்களும் இருக்கத்தான் செய்யும். அதே நேரம் மொத்தமாக முதலீடு செய்வதால் உங்கள் வருமானம் காலப்போக்கில் அதிகரிக்கத் தொடங்கும்.
ரூ.1 கோடி வருமானம் பெறுவது எப்படி?: ரூ.6 லட்ச ரூபாயை ஆண்டுக்கு 12 சதவீத வருமானம் கிடைக்கும் ஒரு முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இதற்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்று பார்ப்போம்.
தொடர்ந்து 10 ஆண்டுகள் அந்த முதலீட்டை எடுக்காமல் வைத்திருந்தால் ஆண்டுக்கு 12 சதவீத வட்டி வருமானத்தில் உங்களுடைய முதலீடு ரூ.18.63 லட்சமாக உயர்ந்திருக்கும். அதுவே 15 ஆண்டுகள் வரை நீங்கள் உங்கள் முதலீட்டை எடுக்காமல் வைத்திருந்தால் உங்கள் ரூ.6 லட்சம் முதலீடு கூட்டு வட்டியின் மூலம் ரூ.32.84 லட்சமாக மாறி இருக்கும். அதே 20 ஆண்டுகள் முதலீட்டை எடுக்காமல் இருந்தால் மொத்தமாக ரூ.57.88 லட்சம் வரை வருமானம் பெற முடியும். மாறாக நீங்கள் 25 ஆண்டுகள் வரை உங்கள் முதலீட்டை வைத்திருக்கிறீர்கள் என்றால் ரூ.1.02 கோடிக்கு மேல் வருமானம் பெறும் வாய்ப்புள்ளது.
நேரமும் நிலையான வருமானமும் முதலீட்டுக்கு எவ்வளவு லாபத்தை பெற்று தருகிறது என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். மொத்த முதலீடு வருமானத்தை அதிகரித்தாலும் பிற விஷயங்களையும் கருத்தில் கொள்வது அவசியம். பெரிய தொகையை சந்தை உச்சத்தில் இருக்கும்போது முதலீடு செய்வது முதலீட்டை குறுகிய கால ஏற்ற இறக்கங்களுக்கு ஆட்படுத்தலாம்
இருப்பினும் நீண்ட காலத்திற்கு சந்தை நன்றாக இருந்தால் உங்களுக்கு வருமானமும் அதிகமாகக் கிடைக்கும்.
மேலே கூறப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் ரூ.6 லட்சத்தை முதலீடு செய்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதற்கான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதை வைத்து நாங்கள் உங்களை முதலீட்டு முடிவுகள் எடுக்கச் சொல்லவில்லை. மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. நீங்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு புதிது என்றால் ஒரு நிதி ஆலோசகரை அணுகி ஆலோசனை பெற்று சூய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யுங்கள்!
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!



Click it and Unblock the Notifications