வால்மார்ட்டில் பணிபுரியும் ஹனேந்திர பிரதாப் சிங் என்ற தொழில்நுட்ப வல்லுநர், பிரபல குரோவ் என்ற ப்ரோகரேஜ் நிறுவனம் மற்றும் அதன் நிறுவனர்களான லலித் கேஷ்ரி, ஹர்ஷ் ஜெயின், ஈஷான் பன்சால் ஆகியோர் மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி, லிங்க்டுஇன் பதிவில் அதிர்ச்சி அளிக்கும் விஷயத்தை பதிவிட்டு உள்ளார்.
இந்த பதிவு தற்போது நீக்கப்பட்டாலும் GROWW தளத்தின் வாயிலாக முதலீடு செய்பவர்களுக்கு இந்த பதிவு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது என்றால் மிகையில்லை.

ஹனேந்திர பிரதாப் சிங் தனது பதிவு துவங்கும் போதே Groww நிறுவனர்களை "இந்த மோசடி மற்றும் ஃபிராடு செயல்களில் ஈடுபட நீங்கள் மிகவும் அசிங்கப்பட வேண்டும்." என்ற வரிகளில் தான் துவங்குகிறது. இதேபோல் இதை தொடர்ந்து என்ன நடந்தது எனவும் இந்த பதிவில் விலாவரியாக விளக்கியுள்ளார்.
"என் சகோதரி 2020 ஆம் ஆண்டு Groww ஆப் மூலம் பாராக் பாரிக் மியூச்சுவல் ஃபண்டில் சில தொகையை முதலீடு செய்துள்ளார். இதற்கான பரிவர்த்தனை வெற்றிகரமாக நடைபெற்றது, எங்களுக்கு ஒரு Folio எண்ணும் ஒதுக்கப்பட்டது. இதுவரை, அந்த Groww ஆப்-ல் பிற மியூச்சுவல் பண்ட் நிதிகளைப் போலவே தற்போதைய தொகை, வளர்ச்சி மற்றும் அனைத்து விவரங்களையும் சரியாகக் காட்டியது."
மோசடி இங்கே தொடங்குகிறது: "இப்போது நாங்கள் முதலீடு செய்த தொகையை திரும்பப் பெற முடிவு செய்தோம், ஆனால் ரீடீம் சேவை வேலை செய்யவில்லை. எனவே பராக் பாரிக் வாடிக்கையாளர் சேவைக்கு நேரடியாகச் அழைத்து செக் செய்த போது தான் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதாவது என் சகோதரி குரோவ் ஆப் மூலம் செய்த முதலீடு பாராக் பாரிக் பண்டிற்கு வரவில்லை, அதாவது தங்கள் கணக்கின் காட்டப்படும் தொகை பராக் பாரிக் பண்டில் முதலீடு செய்யப்படவில்லை, அதேபோல் எங்களுக்கு வழங்கப்பட்ட Folio எண் போலியானவை என்றும் பராக் பாரிக் வாடிக்கையாளர் சேவை தெரிவிக்கப்பட்டது.

இப்போது குரோவ் வாடிக்கையாளர் சேவையை அணுக முயற்சித்தோம், அவர்கள் முற்றிலும் திமிர்பிடித்தவர்கள், தகுதியற்ற பணியாளர்கள், பேசுவது அல்லது நடந்துகொள்வது எப்படி என்று கூட தெரியாதவர்கள். முதலில் அவர்கள் எங்களிடம் கவலைப்பட வேண்டாம், பிரச்சனை தீர்க்கப்பட்டு பணம் விரைவில் மீட்டெடுக்கப்படும் என்று கூறத் தொடங்கினர். பின்னர் பிரச்சனையை தீர்க்க உதவுவதற்காக எங்களிடம் CAMS ஷீட்-ஐ கேட்டார்கள்."
இப்போது மோசடியின் அடுத்த கட்டம்: "பணத்தை சரியான பாராக் பாரிக் பண்டிற்கு முதலீடு செய்யாததால், அவர்கள் அதை CAMS இல் புதுப்பித்து, எங்கள் டேஷ்போர்டிலிருந்து Folio விவரங்களை நீக்கி பிரச்சனை தீர்க்கப்பட்டது என்று கூறுகின்றனர். நீங்கள் வெறும் பதிவை துடைத்து பிரச்சனை தீர்க்கப்பட்டது என்று சொல்ல முடியாது." என்று ஹனேந்திர பிரதாப் சிங் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த பதிவை நான் இரவு நேரத்தில் எழுதுகிறேன், "எங்கள் அனுமதி இல்லாமல், நாங்கள் செய்வது போல் மியூச்சவல் பண்ட் போர்ட்டல்களில் இருந்து OTP களை கோருவது போன்ற முறையற்ற செயல்களில் Groww ஈடுபடுவது மட்டுமல்லாமல், முதலீடு செய்யப்பட்டு உள்ள மியூச்சுவல் ஃபண்ட் பதிவையும் முழுவதுமாக அழித்துவிட்டனர்."
உங்கள் பிளாட்ஃபார்மில் இருந்து ஒரு ஃபண்டின் முழு விவரங்களையும் அழித்துவிட்டு, வாடிக்கையாளர்கள் பயந்து, பதிலடி கொடுக்க மாட்டார்கள் என்று நினைக்க முடியாது. முதலீட்டை எளிதாக்குவது என்ற பெயரில் பட்டப்பகலில் நீங்கள் தொடங்கியுள்ள புதிய வகையான கிரிமினல் மற்றும் மோசடியா இது என்று ஹனேந்திர பிரதாப் சிங் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
என் சகோதரி ஏற்கனவே உங்களுக்கு தேவையான அனைத்து விவரங்களையும் அளித்துள்ளார், இதை சரி செய்யாமல் நீங்கள் மோசமான விஷயங்களைச் செய்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும், ஆனால் நண்பர்களே, நான் உங்கள் சராசரி வாடிக்கையாளர் அல்ல, இதை சரிசெய்ய எங்களின் சரியான பணத்தை திரும்பப் பெறவும் எல்லாவற்றையும் செய்வேன்.
செபி, நுகர்வோர் மன்றம் அல்லது குற்றவியல் மற்றும் பண மோசடி நடவடிக்கைகளுக்கான நீதிமன்றத்தை அணுகுவது வரையில் செல்ல தயங்கமாட்டேன் என தெரிவித்துள்ளார் ஹனேந்திர பிரதாப் சிங்.
சாமானியர்களிடம் இதுபோன்ற மோசடிகளை நிறுத்திவிடுங்கள். அவர்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை சாப்பிட்டுவிட்டு எதுவும் நடக்காதது போல் நடந்து கொள்கிறீர்கள்.
இறுதி தீர்வு: இதை தொடர்ந்து அடுத்த சில மணிநேரத்தில் ஹனேந்திர பிரதாப் சிங் மற்றொரு பதிவை செய்துள்ளார். அதில், "க்ரோவ் குழுவுடன் நாங்கள் பலமுறை பேச்சுவார்த்தைகள் மற்றும் விவாதங்களை நடத்தினோம் இறுதியாக அவர்கள் தாங்கள் தவறு செய்ததை ஒப்புக்கொண்டனர், மேலும் அவர்கள் தவறான என்ட்ரியை உருவாக்கியுள்ளனர் மற்றும் தவறான ஃபோலியோ உருவாக்கப்பட்டது என்று விளக்கம் கொடுத்துள்ளனர்.

இறுதித் தீர்வாக, பாராக் பாரிக் பண்டில் முதலீடு செய்யப்பட்ட தொகை மற்றும் அதன் இன்றைய மதிப்பின் இணையான தொகையை திரும்ப அளிக்க Groww முடிவு செய்துள்ளனர். எனினும் முன் நிபந்தனையாக இந்த பதிவை சமூக வலைத்தளத்தில் நீக்குமாறு கோரியுள்ளனர்.
இந்த பதிவு பலரையும் அடையவும், சரியான தீர்வு அடையவும், அனைத்து ஆதரவுக்கும் உதவிக்கும் சமுகவலைத்தள வாசிகளுக்கு நன்றி தெரிவித்தார் ஹனேந்திர பிரதாப் சிங். நான் உண்மையில் இந்த பதிவை நீக்கியிருக்க மாட்டேன், ஆனால் அந்தத் தொகை குறிப்பிடத்தக்கதாகவும் முக்கியமானதாகவும் இருப்பதால், நான் இந்த பதிவை நீக்க வேண்டியிருக்கும்" என மேற்கூறிய பதிவுக்கு கமெண்ட்-ல் விளக்கம் கொடுத்தார்.
நீங்களும் பாரக் பாரிக் பண்டில் முதலீடு செய்திருந்தால் உடனே உங்கள் முதலீட்டை செக் செய்யுங்கள், ரிடீம் ஆஃப் காட்டுகிறது, அல்லது இறுதி ரீடீம் ஆப்ஷன் வரை செல்கிறதா என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள்.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications