ஜிஆர்பி லிமிடெட் நிறுவனம் போனஸ் பங்குகளை வழங்குவதற்கான ரெக்கார்ட் டேட்டினை அறிவித்துள்ளது. ஜிஆர்பி லிமிடெட் நிறுவனம் தங்களின் நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு ஒரு பங்கிற்கு மூன்று பங்கு இலவசம் என்ற அளவில் போனஸ் பங்குகள் வழங்கப்படும் என்று அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. கடந்த ஜூன் 29-ஆம் தேதி ஜிஆர்பி லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர்கள் வாரிய குழு கூட்டம் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் போனஸ் பங்குகள் வழங்குவது தொடர்பான முடிவு எட்டப்பட்டது. இதன்படி 10 ரூபாய் முக மதிப்பு கொண்ட ஒரு பங்கிற்கு பத்து ரூபாய் முக மதிப்பு கொண்டு மூன்று பங்குகள் இலவசமாக போனஸ் பங்குகளாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான ரெக்கார்ட் டேட் என்பது கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என அப்போது ஜிஆர்பி லிமிடெட் நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் போனஸ் பங்குகளை வழங்குவதற்கான ரெக்கார்ட் டேட் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆகஸ்ட் 12ஆம் தேதி ரெக்கார்ட் டேட், அதாவது இந்த தேதியில் நிறுவனத்தில் பங்குகளை வைத்திருப்பவர்களுக்கு போனஸ் பங்குகள் கிடைக்கும். ஆகஸ்ட் 9ஆம் தேதி அன்று ஜிஆர்பி லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பானது 14,355. 90 ரூபாய் என வர்த்தகமானது. இது முந்தைய நாளை விட 0.05 சதவீதம் குறைவாகும்.
ஜிஆர்பி லிமிடெட் நிறுவன பங்கினை பொருத்தவரை நீண்ட கால அடிப்படையில் முதலீட்டாளர்களுக்கு கணிசமான லாபத்தை பெற்று தந்துள்ளது. கடந்த மூன்று மாதத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 113 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆறு மாத காலத்தில் 179 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு சுமார் 300 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் இதன் பங்கு மதிப்பு 1365 சதவீதம் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு கணிசமான லாபத்தை பெற்று தந்துள்ளது. தற்போது 1 பங்குக்கு 3 பங்கு போனஸ் கிடைக்க போவதால் இதில் முதலீடு செய்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிறுவன பங்கில் 59% சில்லறை முதலீட்டாளர்களிடமே இருக்கிறது.
கடந்த 1947 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஜிஆர்பி லிமிடெட் நிறுவனம், பயன்படுத்தப்பட்ட டயர்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட நைலான் கழிவுகள் ஆகியவற்றிலிருந்து டயர்களை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது.இந்த நிறுவனம் கிட்டத்தட்ட 7 உற்பத்தி ஆலைகளை கொண்டு கொண்டிருக்கிறது. 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு டயர்களை ஏற்றுமதி செய்து வருகிறது.
Written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications