ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற 55-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு பொருட்களின் ஜிஎஸ்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டது, சில பொருட்களின் விகிதங்கள் குறைக்கப்பட்டது. இந்த பதிவில் விலை உயரும் பொருட்கள், விலை குறையும் பொருட்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
எந்தெந்த பொருட்கள் விலை உயர்கிறது?:
பயன்படுத்தப்பட்ட கார்கள்:
பயன்படுத்தப்பட்ட மின்சார வாகனங்களுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் வரி விகிதத்தை 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தியுள்ளது. ஆனால் இந்த புதிய விதி வணிகங்களால் பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு மட்டுமே பொருந்தும். தனிநபர்கள் எந்தவித ஜிஎஸ்டியும் இல்லாமல் பயன்படுத்திய கார்களை விற்பனை செய்யலாம்.

கேரமல் பாப்கார்ன்:
தொடர்ந்து கேரமல் பாப்கார்ன்களுக்கு தொடர்ந்து 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. உப்பு மற்றும் மசாலா பொருட்கள் கலந்த "ரெடி டூ ஈட் பாப்கார்ன்கள்" பேக்கேஜ் செய்யப்படாமல் இருந்தால் 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. ஒரு வேலை பேக்கிங் செய்யப்பட்டு லேபிள் ஒட்டப்பட்டு இருந்தால் அதற்கு 12 சதவீத ஜிஎஸ்டி பொருந்தும்.
மலிவாகும் விஷயங்கள்:
மரபணு சிகிச்சை:
ஜிஎஸ்டி கவுன்சில் அனைத்து மரபணு சிகிச்சைக்கும் முற்றிலுமாக ஜிஎஸ்டி விலக்கு வழங்கியுள்ளது. இதன் மூலம் நோயாளிகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.
அரிசி:
பொது விநியோகத்திற்காக வழங்கப்படும் அரிசிக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது.
AAC பிளாக்குகள்:
50 சதவீதம் வரை சாம்பல் கலந்த AAC பிளாக்குகளுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படவுள்ளது.
மிளகு:
விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்யும் கருப்பு மிளகு, காய்ந்த உலர் திராட்சை போன்றவற்றுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்ட்டுள்ளது.
வங்கி அபராதம்:
கடன் விதிமுறைகளுக்கு இணங்காததற்காக கடன் பெறுநர்கள் மீது வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் விதிக்கும் அபராதக் கட்டணங்களுக்கு எந்த வித ஜிஎஸ்டியும் விதிக்கப்படாது.
காம்பன்சேஷன் செஸ் கட்டணம்:
வணிக ஏற்றுமதியாளர்களுக்கு விற்பனை செய்யும் போது விதிக்கப்படும் காம்பன்சேஷன் செஸ் கட்டண விகிதம் 0.1% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
ஒத்திவைக்கப்பட்ட முடிவுகள்:
ஏவியேசன் டர்பைன் ஃப்யூயல்:
விமானங்களில் பயன்படுத்தப்படும் ஏவியேசன் டர்பைன் ஃப்யூயல் என்று சொல்லப்படும் விமான எரிபொருள் ஜெட் எரிபொருள் என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்த எரிபொருளை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர பல மாநிலங்களும் ஒப்புக்கொள்ளவில்லை. எனவே தற்போதைக்கு இதற்கு ஜிஎஸ்டி எதுவும் விதிக்கப்படவில்லை.
இயற்கைப் பேரிடர் வரி:
இயற்கைப் பேரிடர்களுக்குப் பிறகு நிதி நெருக்கடியை சமாளிக்க மாநிலங்கள் ஜிஎஸ்டி கீழ் கட்டணம் விதிக்க அனுமதிப்பது குறித்து ஆராய்வதற்காக அமைச்சர்கள் குழு ஒன்றை அமைக்க ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications