சாமனியர்களுக்கு பலன் இருக்குமா.. மின்சார வாகனங்கள், கொரோனா மருந்துகளுக்கு சலுகை இருக்குமா..?

நாளை பலத்த எதிர்பார்புகளுக்கு மத்தியில் 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமானது நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் பல தரப்பினரின் எதிர்பார்ப்பாக இருக்கும், பெட்ரோல், டீசலானது ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வருவது பற்றி விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதோடு இந்த கவுன்சில் கூட்டத்தில் மின்சார வாகனங்கள், மாநில அரசுகளுக்கு செலுத்த வேண்டிய நிலுவை ,மற்றும் கொரோனா மருந்துகளுக்கு ஜிஎஸ்டி பற்றிய அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய எதிர்பார்ப்பு

முக்கிய எதிர்பார்ப்பு

மத்திய மாநில நிதியமைச்சகர்கள் அடங்கிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமானது நாளை உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு தரப்பினர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ள எரிபொருட்களை ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வருவது பற்றி ஆலோசனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற முக்கிய விவாதங்கள்

மற்ற முக்கிய விவாதங்கள்

இதுதவிர மின்சார வாகனங்கள், மாநில அரசுகளுக்கு செலுத்த வேண்டிய நிலுவை ,மற்றும் கொரோனா மருந்துகளுக்கு ஜிஎஸ்டி பற்றிய முக்கிய விவாதங்கள் மற்றும் அறிவிப்புகள் வரலாம் என்ற முக்கிய எதிர்பார்ப்பும் நிலவி வருகின்றது. குறிப்பாக கொரோனா தொற்று நோய் சிகிக்சைக்காக பயன்படுத்தப்படும் மருந்துகள் மீதான சலுகைகளை, வரி விலக்குகளை இன்னும் நீட்டிக்கலாமா? என்பது குறித்தான விவாதங்களும் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநில அரசுகளுக்கான ஜிஎஸ்டி பங்கீடு

மாநில அரசுகளுக்கான ஜிஎஸ்டி பங்கீடு

மத்திய அரசு வசூலிக்கும் ஜிஎஸ்டி வரி வசூலில், மாநில அரசுகளுக்கு ஒரு பகுதியானது பிரித்து தரப்படுகிறது. எனினும் இதனால் மாநில அரசுகளுக்கான வருவாய் குறைந்துள்ளதாக, மாநில அரசுகள் சுட்டிக் காட்டி வருகின்றன. இந்த நிலையில் மாநில அரசுகளுக்கு கிடைக்க வேண்டிய நிலுவை கிடைக்குமா? ஏற்கனவே கொரோனா காரணமாக வருவாயினை இழந்து தவிக்கும் அரசுகள், கிடைக்க வேண்டிய நிலுவையும் கிடைக்காமல் நிதி நெருக்கடியில் இருந்து வந்தன. ஆக இது பற்றிய விவாதங்களும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய அறிவிப்புகள் வரலாம்

முக்கிய அறிவிப்புகள் வரலாம்


குறிப்பாக வரவிருக்கும் விழாக்கால பருவம், சுற்றுசூழலை மேம்படுத்தும் விதமாகவும் மின்சார வாகன விற்பனையை ஊக்குவிக்கும் விதமாகவும், மின்சார வாகனங்கள் குறித்து முக்கிய அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில் நாளை நடக்கவிருக்கும் இந்த கூட்டத்தில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+