கேமிங் துறையின் வரி வசூல் 412% அதிகரிப்பு.. 6 மாதத்தில் ரூ.7000 கோடி.. அடிதூள்..!

திங்களன்று நடந்து முடிந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்குப் பிறகு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆன்லைன் கேமிங் மீதான அதிகரிக்கப்பட்ட வரியிலிருந்து மத்திய அரசு 412% வருவாய் அதிகரிப்பைக் கண்டதாக அறிவித்தார். ஆன்லைன் கேமிங்கிலிருந்து கிடைக்கும் வருவாய் 412% அதிகரித்து கடந்த 6 மாதங்களில் ரூ.6,909 கோடிக்கு எட்டியுள்ளதாகவும், கேசினோக்களின் வருவாய் 30% அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் கேமிங் "Skill based gaming" மற்றும் "Chance based gaming" என இரு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் Skill based விளையாட்டுகள் 18% வரி விகிதத்தில் இருந்து 28% ஆக உயர்த்தப்பட்டு 2023-ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற 50-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த அதிகரிப்பு 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

 கேமிங் துறையின் வரி வசூல் 412% அதிகரிப்பு.. 6 மாதத்தில் ரூ.7000 கோடி.. அடிதூள்..!

இது தவிர, பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வென்ற பரிசுகள், பணம் அல்லது பரிசுப் பொருட்களாக இருந்தாலும், அவற்றின் மீதும் வரி விதிக்கப்படுகிறது. வருமான வரிச் சட்டத்தின்படி, இந்த வெற்றிகள் ஆன்லைன் விளையாட்டுகளில் இருந்து பெற்ற வருமானமாக கருதப்பட்டு, "'Income from other Sources" என்ற தலைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டு 30% வரி விதிக்கப்படுகிறது.

ஜிஎஸ்டி உயர்வுக்குப் பிறகு கேமிங் துறை எப்படி இருந்தது?: ஜிஎஸ்டி உயர்வுக்குப் பிறகு கேமிங் துறை மிகவும் சிரமப்பட்டு வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆன்லைன் கேம்களின் ஜிஎஸ்டி விகிதம் அதிகரித்தது இந்தத் துறையை கணிசமாக பாதித்துள்ளது. USISPF நிறுவனத்தின் ஆய்வின் படி, கேமிங் நிறுவனங்கள் GST விகிதங்கள் உயர்த்தப்பட்டதில் இருந்து நிதி திரட்டுவதில், லாபம் ஈட்டுவதில் சவால்களை எதிர்கொள்கின்றன என்பதைக் கண்டறிந்தது.

இந்த மாற்றம் ஆன்லைன் கேமிங் துறையில் செயல்படும் நிறுவனங்களுக்கு அதிகரித்த வரிச் சுமையை ஏற்படுத்தியது, அவற்றில் பெரும்பாலானவை தங்கள் செயல்பாடுகளைத் தக்கவைக்க வரி அதிகரிப்பைப் பொருட்படுத்தாமல் செயல்பட வேண்டியிருந்தது.

ஆய்வு செய்யப்பட்ட நிறுவனங்களில், ஜிஎஸ்டி உயர்வுக்குப் பின் 42 சதவீத நிறுவனங்கள் மட்டுமே வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. இந்த நிறுவனங்களின் வளர்ச்சி விகிதம் 1 முதல் 25 சதவிகிதம் வரை இருந்தது. அதே நேரத்தில் 58 சதவிகித நிறுவனங்கள் வருவாய் சரிவை எதிர்கொண்டுள்ளன. வருவாயில் 50 சதவீதம் குறைந்துள்ள இரண்டு நிறுவனங்களும் அடங்கும். இது ஆன்லைன் கேமிங் துறையில் ஜிஎஸ்டியின் தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது.

ஜிஎஸ்டி உயர்வால் கேமிங் நிறுவனங்களின் வருவாய் குறைந்து, அங்கு பணி புரியும் ஊழியர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டதோடு, பணியமர்த்தலும் முடங்கியது.

கேமிங் நிறுவனங்களுக்கு என்ன தேவை?: பெரும்பாலான நிறுவனங்கள், GST மதிப்பீட்டு முறையை GGR-க்கு மாற்றம் செய்ய பரிந்துரைத்துள்ளன. GST துறையின் கணக்கீடுகளின்படி, 71 ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் மொத்தம் ரூ. 1.12 லட்சம் கோடி செலுத்த வேண்டும் என்ற வரி அறிவிப்புகளைப் பெற்றுள்ளன.

இந்தியாவில் தற்போது 442 மில்லியன் கேமர்கள் உள்ளனர், இது சீனாவிற்கு அடுத்தபடியாக உலகில் இரண்டாவது பெரிய சந்தை. இதன் மதிப்பு $3.1 பில்லியன் மற்றும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் $8.92 பில்லியனாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+