'GTA 6' அலப்பறைகள்: கேமிங் விடுமுறை கேட்டு மனைவி மற்றும் மகளுடன் டீல் போட்ட நபர்..!!

உலகம் முழுவதுமே கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ VI' (GTA 6) வீடியோ கேம் தான் டிரெண்டான விஷயமாக இருக்கிறது. வீடியோ கேம் பிரியர்கள் இந்த விளையாட்டுக்காக எதையும் தியாகம் செய்ய தயாராகிவிட்டனர். அப்படி ஒரு வாரத்திற்கு இந்த கேமை விளையாட இங்கே ஒரு நபர் தன்னுடைய மனைவி, மகளுடன் போட்டுள்ள ஒரு ஒப்பந்தம் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.

ஸ்காட்லாந்தின் நியூட்டன் ஸ்டீவர்ட் நகரத்தை சேர்ந்த 38 வயதான ஷான் லிட்டில் ஒரு பெயிண்டர். இவர் 'GTA 6' கேமை நிம்மதியாக விளையாடுவதற்காக அவர் தனது வேலையிலிருந்து ஒரு வார விடுப்பு எடுத்துள்ளார். வேலை என்றால் தொழில் மட்டுமல்ல ஒரு வார காலம் கணவன் மற்றும் தந்தை வேலையில் இருந்தும் விடுப்பு பெற்றுள்ளார். வேலையில் இருந்து விடுப்பு எடுத்தாலும், வீட்டில் இருக்கும்போது மனைவியும் மகளும் தன்னை நாய் வளர்ப்பு பராமரிப்பு, சமையல் அல்லது மற்ற வீட்டு வேலைகளை செய்ய சொல்லி அழைப்பார்கள் என்பதால், அவர்களுடன் ஒரு டீல் போட்டுள்ளார்.

'GTA 6' அலப்பறைகள்: கேமிங் விடுமுறை கேட்டு மனைவி மற்றும் மகளுடன் டீல் போட்ட நபர்..!!

தனது மனைவி நடாலி மற்றும் 13 வயது மகள் ஷார்லட் உடன் அவர் போட்டுள்ள ஒப்பந்தப்படி, ஒரு வாரத்திற்கு தன்னை தொந்தரவு செய்ய கூடாது., எந்த வீட்டு வேலையும் இடக்கூடாது இதற்கு ஒரு வாரத்திற்கு அவர்களுக்கு 8,500 ரூபாய் பணம் கொடுத்துள்ளார். குடும்பத்தினர் சிற்றுண்டி வாங்குவதற்காக மனைவியிடம் கூடுதல் பணத்தையும் கொடுத்துள்ளார். இந்த ஒரு வார காலத்தில் ஷான் சமைக்க மாட்டார்; மற்றவர்கள்தான் சமைக்க வேண்டும் இல்லை என்றால் கடையில் கூட வாங்கி கொள்ளலாம் அதற்கு பணம் தருகிறேன் என கூறியுள்ளார்.

Also Read

வீட்டில் பாத்திரம் கழுவும் வேலையும் தனக்கு வரக்கூடாது என்பதற்காக, முன்கூட்டியே பேப்பர் பிளேட்களை வாங்கி வைத்துள்ளார். மேலும் இந்த ஏழு நாட்களும் வீட்டின் லிவிங் ரூம் ஷானுக்கு மட்டுமே சொந்தமானது. அவர் கேம் விளையாடும்போது இடையூறு செய்ய கூடாது, நீ எவ்வளவு நேரமாக சோபாவிலேயே உட்கார்ந்து கேம் விளையாடுகிறாய், இன்னுமா அதை விளையாடி கொண்டிருக்கிறாய்? போன்ற வாக்கியங்களை பேசுவதற்கு தடை விதித்துள்ளார்.

Recommended For You

இந்த ஒரு வார விடுப்புக்காக கடந்த பல வாரங்களாக வார இறுதி நாட்களிலும், சில நாட்கள் 13 மணி நேரம் வரையிலும் கூடுதலாக உழைத்து பணம் சேமித்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதனை ஒரு கேமிங் விடுமுறை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

GTA 6 வெளியீட்டை முன்னிட்டு உலகம் முழுவதும் கேமர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பெரும் பரபரப்புக்கு மத்தியில், விடுப்பு எடுப்பது முதல் நிறுவனங்கள் சிறப்பு விடுமுறை அறிவிப்பது வரையிலான பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகளில் இந்த சம்பவமும் கவனம் ஈர்த்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+