வேலை முடிந்ததும், தூக்கியெறியப்படும் ஊழியர்கள்.. GTA6 வெளியான பின்பு இப்படியொரு சோகமா..!!

உலகமே எதிர்பார்த்துக் காத்திருந்த GTA6 கேம் அறிமுகமாகி சக்கப்போடு போட்டு வருகிறது, நவம்பர் 19ஆம் தேதி அறிமுகமாகி 24 மணிநேரத்தில் ப்ரீ ஆர்டர் வர்த்தகம் + முதல் நாள் வர்த்தகம் மூலம் சுமார் 2.36 பில்லியன் டாலர் அளவிலான வருமானத்தைத் திரட்டியுள்ளதாக சென்சார் டவர் நிறுவனத்தின் தரவுகள் கூறுகிறது.

இதேபோல் ப்ரீ ஆர்டர் + முதல் நாள் வர்த்தகத்தில் மட்டும் 2.5 கோடி பேருக்கு GTA6 கேம் விற்கப்பட்டு மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. இந்த நிலையில் GTA6 கேம்-ஐ உருவாக்கிய ராக்ஸ்டார் நிறுவனம் மிக முக்கியமான முடிவை எடுக்கப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 வேலை முடிந்ததும், தூக்கியெறியப்படும் ஊழியர்கள்.. GTA6 வெளியான பின்பு இப்படியொரு சோகமா..!!

GTA6 போன்ற பெரிய கேம்களை உருவாக்க பொதுவாகவே அதிகப்படியான காலம், ஊழியர்கள், பொருட் செலவு ஏற்படும். ஆனால் இந்த கேம் டெவலப்மென்ட் முடிந்த பின்பு, குறிப்பாக அறிமுகம் செய்யப்பட்ட பின்பு ஒரு நிறுவனத்திற்கு அதிகப்படியான ஊழியர்கள் தேவைப்படாது.

இதனால் அந்த கேம் வெற்றி அடைகிறதா அல்லது தோல்வி அடைகிறதா என்பதைத் தாண்டி ஒவ்வொரு பெரிய கேம் அறிமுகத்திற்குப் பின்பு பெரியளவிலான பணிநீக்கம் நடக்கும். தி கார்டியன் பத்திரிக்கை வெளியிட்ட தகவலின் படி ராக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டு இருக்கும் நெஸ்டர் என்ற அனிமேஷன் ப்ரோகிராமர் ஊழியர்கள் மத்தியில் தற்போது அதிகப்படியான வேலைவாய்ப்பு உத்தரவாதம் குறித்த அச்சம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் நெஸ்டர் கூறுகையில், உலகிலேயே மிகப்பெரிய கேமில் பணியாற்றினாலும் எங்களுடைய வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் இல்லை என தெரிவித்தார். சமீபத்தில் பல முன்னணி கேமிங் நிறுவனங்கள் அனைத்திலும் அதிகளவிலான பணிநீக்கம் நடந்து வருகிறது.

குறிப்பாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கீழ் இருக்கும் கேமிங் பிரிவு, எக்ஸ்பாக்ஸ் பிரிவில் அதிகப்படியான பணிநீக்கம் தொடர்ந்து நடத்து வருகிறது. கடந்த 2 வருடத்தில் கேமிங் துறையில் மட்டும் சுமார் 24,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் GTA6 டெவலப்மென்ட் பணிகள் முழுமையாக முடிந்ததிருக்கும் நிலையில் அடுத்த சில நாட்களின் பணிநீக்கம் குறித்த அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளையில் கேம் டெவலப்பர்கள் இணைந்து புதிய யூனியன் அமைக்கும் பணியில் இறங்கியுள்ளனர். இந்த வெற்றி அடைந்தால் சுமார் 1600 பேர் அடங்கிய பிரிட்டன் நாட்டின் மிகப்பெரிய video game developer union ஆக இது இருக்கும்.

இதேவேளையில் இந்த மாத துவக்கத்தில் பிரிட்டன் மற்றும் கனடாவில் 30க்கும் அதிகமான ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் விரைவில் பெரிய எண்ணிக்கையிலான பணிநீக்கம் ராக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனத்தில் நடக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+