ரெட் பட்டனை தட்டிய GTA 6.. 13 வருஷம் வெயிடிங் 'வொர்த்து வர்மா'.. மொத்த வர்த்தக சந்தையும் கொண்டாட்டம்..!!

உலகம் முழுவதும் இருக்கும் கேமிங் பிரியர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ள GTA 6 அறிமுகம் வெறுமனே கேமிங் துறையை மட்டும் அல்லாமல் பல துறைகளுக்கு புதிய வர்த்தகத்தையும் டிமாண்டையும் உருவாகியுள்ளது.

மறுபக்கம் GTA 6 கேமிற்காக 13 வருடம் காத்திருந்த மக்கள் 'வொர்த்து வர்மா' என கொண்டாடி வருகின்றனர். கேமின் ஒவ்வொரு பகுதியையும், அவை வடிவமைக்கப்பட்டு உள்ள நுட்பத்தைக் குறித்து இணையத்தில் சிலாகித்து வருகின்றனர்.

 ரெட் பட்டனை தட்டிய GTA 6.. 13 வருஷம் வெயிடிங் 'வொர்த்து வர்மா'.. மொத்த வர்த்தக சந்தையும் கொண்டாட்டம்..!!

இன்னும் சொல்லப்போனால் GTA 6 கேம் விளையாடுவதற்காகவே அமெரிக்காவில் பல லட்சம் பேர் லீவ் போட்டு உள்ளனர். இந்தியாவில் சில ஸ்டார்ட்அப்-கள் அலுவலகம் விடுமுறையே விட்டு உள்ளது.

வெறும் 5,999 ரூபாய் கேம் ஒட்டுமொத்த வர்த்தக சந்தைக்கும் வர பிரசாதமாக மாறியுள்ளது என கூறப்படுகிறது. மேலும் Rockstar Games நிறுவனம் அறிமுகம் செய்த GTA 6 தான் உலகின் மிகப்பெரிய கேமிங் வெளியீடுகளில் ஒன்றாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.

சரி GTA 6 அறிமுகம் எப்படி ஒட்டுமொத்த வர்த்தக சந்தைக்கும் ஜாக்பாட் ஆக மாறியுள்ளது.

முதலில் GTA 6 கேமிங்-ன் முழு திறனை அனுபவிக்க வேண்டும் என்றால் கட்டாயம் கேமிங் கன்சோல் முக்கியம். GTA 6 கேம் 13 வருடங்களுக்கு பின்பு அறிமுகம் செய்யப்படும் காரணத்தால் இன்றைய இளம் தலைமுறையினர் மட்டும் அல்லாமல் 90ஸ் கிட்ஸ் வரையில் பெரும் ரசிகர்கள் கூட்டம் இதற்கு உள்ளது.

இதனால் கேமிங் கன்சோல் இல்லாதவர்களும் சரி, பழைய கேமிங் கன்சோல் வைத்திருப்பவர்களும் சரி புதிதாக அப்டெட்ட கேமிங் கன்சோலை வாங்க திட்டமிடுவார்கள். இதன் மூலம் Playstaion தயாரிக்கும் சோனி மற்றும் Xbox தயாரிக்கும் மைக்ரோசாப்ட் ஆகியவை இதன் மூலம் பெரியளவில் பலன் அடையும்.

இதை தாண்டி கேமிங் ஆக்சரீஸ் பெரியளவிலான வர்த்தகத்தைப் பெறும். இதன் மூலம் பல வருடங்களாக மந்தமாக இருந்த கேமிங் கன்சோல் தயாரிப்பு துறையும், நிறுவனங்களும் புதிய புத்துணர்ச்சியை அடைந்துள்ளது.

உதாரணமாக அமெரிக்காவில் GTA 6 அறிமுகத்திற்கு முன்னரே சோனி நிறுவனத்தின் ப்ளேஸ்டேஷன் 5 விற்பனை செப்டம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 22 சதவீதம் அதிகரித்துள்ளது. PS5 ஹார்டுவேர் விற்பனை வருவாய் 43% உயர்ந்துள்ளது. தற்போது கேமர்கள் GTA 6 -ஐ 'வொர்த்து வர்மா' என ரேட்டிங் கொடுத்த நிலையில் விற்பனை இன்னும் சூடுபிடிக்கும்.

இதை தாண்டி விடிய விடிய விளையாடும் கேம்மர்கள், ஸ்ட்ரீமர்கள், கேமிங் பார்ட்டி, கேமிங் வார் நடத்துபவர்கள் அதிகளவில் உணவு டெலிவரி செய்வார்கள், இதன் மூலம் இரவு முழுக்க வர்த்தகம் கிடைக்கும்.

இதோடு சமுக வலைத்தளத்தில் புதிய கன்டென்ட் உருவாக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஒரு காலத்தில் பப்ஜி பெரிய அளவிலான கண்டென்ட் அலையை உருவாக்கியது இதன் பின்பு GTA 6 உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழு வீடியோ, ஷார்ட்ஸ், ரீல்ஸ், ஸ்ட்ரீமிங் என அனைத்து பிரிவு பொழுதுபோக்கு துறையும் இதன் மூலம் பலன் பெறும்.

இப்படி கன்சோல், கேமிங், ஸ்ட்ரீமிங், அடிப்படைத் தேவைகள் என பல பிரிவுகளில் வர்த்தகம் உருவாகிறது. உதாரணமாக இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும் போது எப்படி ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் அதிக வர்த்தகத்தைப் பெறுகிறதோ, ஈகாமர்ஸ் தளத்தில் கிரிக்கெட் ஜெர்சி, கிரிக்கெட் பேட், கிரிக்கெட் ஆக்சஸரீஸ் விற்பனை அதிகரிக்கிறதோ அதேபோல் தான், GTA 6 அறிமுகம் மூலம் உலகம் முழுவதும் வர்த்தகத்திற்கான ரெட் பட்டன் அழுத்தப்பட்டு உள்ளது.

இவை அனைத்தையும் தாண்டி GTA 6 கேம்-ஐ 1.7 கோடி பேர் வாங்குவார்கள் எனக் கணிக்கப்பட்டு உள்ளது மூலம் Rockstar Games நிறுவனத்தின் தாய் நிறுவனமான Take-Two Interactive நேரடியாகப் பயனடைய உள்ளது. இதில் 75 சதவீத வர்த்தகத்தை PS5 பெறும், எக்ஸ்பாக்ஸ் 25 சதவீத வர்த்தகத்தை மட்டுமே பெறும்.

மோசமான வர்த்தக நிலையில் இருந்து சோனி PS5 பிரிவுக்கு ஜிடிஏ 6 அறிமுகம் உண்மையிலேயே டெர் பட்டன் தான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+