இந்தியாவின் 2வது பெரும் பணக்காரராக இருக்கும் கெளதம் அதானி-யின் தலைமையில் இயங்கும் அதானி குழுமம், இந்தியாவின் வேகமான வளர்ச்சிக்கு குறிப்பாக உற்பத்தி துறை வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான மற்றும் அதிக டிமாண்ட் இருக்கும் துறையில் நுழைய உள்ளது. ஆனால் அதானி குழுமத்தின் என்ட்ரி ஒருவருக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
அதானி குழுமம், குஜராத்தில் உள்ள முந்த்ராவில் உலகின் மிகப்பெரிய ஒரு இடத்தில் தாமிர உற்பத்தி ஆலையை உருவாக்கி வருகிறது. அம்பானி எப்படி உலகிலேயே மிகப்பெரிய சுத்திகரிப்பு ஆலையை ஒரே இடத்தில் அதுவும் குஜராத் ஜாம்நகரில் வைத்திருக்கிறாரோ, அதேபோல் அதானி single-location அடிப்படையிலான உலகின் மிகப்பெரிய காப்பர் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க உள்ளார்.

அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனமாக விளங்கும் அதானி எண்டர்பிரைசஸ்-ன் துணை நிறுவனமாக இயங்கி வரும் கட்ச் காப்பர் லிமிடெட் (KCL) தற்போது குஜராத் முந்த்ரா நகரில் ஆண்டுக்கு 1 மில்லியன் டன் உற்பத்தி திறன் கொண்ட காப்பர் சுத்திகரிப்பு நிலையத்தை இரண்டு கட்டங்களாக உருவாக்குகிறது.
சுமார் 1.2 பில்லியன் டாலர் செலவில் அமைக்கப்பட்டு வரும் இந்தக் காப்பர் சுத்திகரிப்பு ஆலை மார்ச்-இறுதிக்குள் முதல் கட்ட செயல்பாடுகளைத் தொடங்கும், முதல் கட்டத்தில் 0.5 மில்லியன் டன் தாமிரத்தை (Copper) உற்பத்தி செய்வதை இலக்காக வைத்துள்ளது. மார்ச் 2029க்குள் அதன் முழுக் கொள்ளளவான 1 மில்லியன் டன்களை எட்டும் எனக் கணக்கிடப்படுகிறது.
கட்ச் காப்பர் நிறுவனத்தின் புதிய தொழிற்சாலை மூலம் அதானி குழுமம் அதித்யா பிர்லா குரூப்-ன் ஹிண்டால்கோ, மத்திய அரசின் ஹிந்துஸ்தான் காப்பர், வேதாந்தா குழுமத்துடன் நேரடியாகப் போட்டிப்போட்டு வருகிறது.

இந்தியா ஒரு காலத்தில் காப்பர் ஏற்றுமதி நாடாக இருந்து தற்போது காப்பர் இறக்குமதி நாடாக உள்ளது. இந்த மாற்றத்திற்கு முக்கியமான காரணம் 2018ல் தூத்துக்குடியில் இருக்கும் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தை மூடியது தான். இந்த ஒரு தொழிற்சாலை மூலம் நாட்டின் 46 சதவீத காப்பர் உற்பத்தி தடை பெற்றது.


Click it and Unblock the Notifications