கைடென்ஸ் தமிழ்நாடு அதிகாரிகளுக்கு வலைவீசும் ஆந்திரா, உத்தர பிரதேச அரசு.. டார்கெட் சென்னை!

பொதுவாகத் தென்னிந்திய மாநிலங்கள் மத்தியில் முதலீட்டை ஈர்ப்பதில் காலம் காலமாகப் போட்டி இருந்தது, ஆனால் தற்போது நாட்டின் அனைத்து மாநிலங்களும் முதலீட்டையும், வேலைவாய்ப்பை எப்படியாவது உருவாக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. இதனால் மாநிலங்களுக்கு மத்தியிலான போட்டி தற்போது மோசமான நிலைக்குச் சென்றுள்ளது.

ஒவ்வொரு மாநிலமும் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி தமிழ்நாட்டைக் காட்டிலும் பல மடங்கு அதிக முதலீட்டு விருப்பங்களைப் பெற்றுள்ளதாகக் கடந்த 10 வருடங்களாகக் கணக்குக் காட்டி வந்தது, ஆனால் இந்த முதலீட்டு விருப்பங்கள் உண்மையான முதலீடாக மாறி அது வேலைவாய்ப்பாக மாறும்போது தான் அதன் வெற்றி உள்ளது. இதில் தமிழ்நாடு எப்போதும் கிங்மேக்கராகவே இருந்து வருகிறது.

கைடென்ஸ் தமிழ்நாடு அதிகாரிகளுக்கு வலைவீசும் ஆந்திரா, உத்தர பிரதேச அரசு.. டார்கெட் சென்னை!

இதேபோல் ஒவ்வொரு மாநிலத்திலும் அடுத்த தலைமுறைக்கான வளர்ச்சியின் அடிப்படையை புரிந்துகொண்டு அதன் மூலம் வளர்ச்சி திட்டங்களை வகுத்து அதற்கான முதலீட்டையும், நிறுவனங்களையும் ஈர்க்க வேண்டும். இந்த மகத்தான பணியைத் தமிழ்நாடு அரசின் கைடென்ஸ் தமிழ்நாடு அமைப்பு மிகவும் சிறப்பாக செய்து வருகிறது.

சுமார் 34 வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு ஒரு தொழிற்துறையை எப்படி அணுக வேண்டும், எப்படி முதலீட்டை ஈர்க்க வேண்டும் என்பதில் பெரும் அனுபவத்தையும், கற்றலையும் கொண்டு தமிழ்நாட்டின் வர்த்தக துறையைப் பெரிய அளவில் மாற்றியதற்கு இந்த அமைப்புக்குப் பங்கு உண்டு.

பொதுவாக இத்தகைய பணிகளைச் செய்ய மற்ற மாநிலங்கள் KPMG, EY, BCG போன்ற வெளிநாட்டு அமைப்புகளின் உதவியை நாடும். ஆனால் தமிழ்நாடு அரசு சொந்தமாக உருவாக்கி வெற்றிக்கண்டது. கைடென்ஸ் தமிழ்நாடு அமைப்பு எப்படி இயங்குகிறது என்பதை அறிந்துகொள்ளப் பல மாநில அரசுகள் தமிழ்நாட்டுக்கு வந்து ஆய்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய விரும்பும் நிறுவனங்களை தங்கள் மாநிலங்களுக்குக் கொண்டு செல்லவும், Guidance Tamil Nadu-வில் பயிற்சி பெற்ற நிபுணர்களை தங்கள் பக்கம் ஈர்ப்பதற்காகவும் பிற மாநிலங்கள் சென்னையில் அலுவலகங்களைத் திறக்கத் தொடங்கியுள்ளது. இது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பை நீண்ட கால அடிப்படையில் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைப்பான Invest UP ஏற்கனவே சென்னையில் தனது அலுவலகத்தைத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைப்பான Andhra Pradesh Economic Development Board, சென்னையில் அலுவலகம் அமைப்பது குறித்துப் பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியானது. இதேபோல் ஹரியானாவும் சென்னையில் அலுவலகம் அமைக்க வாய்ப்புள்ளதாகத் தமிழக தொழில்துறைத் துறை வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

மேலும் அனைத்து மாநிலத்தின் முதலீட்டு அமைப்புகளும் கைடென்ஸ் தமிழ்நாடு அமைப்பில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வலைவீசி வருகிறார்கள். தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பின்பு சிஇஓ இருந்த டாரெஸ் அகமது மாற்றப்பட்டு இப்பதவியில் தீபக் ஜேக்கப் வந்தார். இதேபோல் தமிழ்நாட்டின் மற்றொரு முக்கிய அமைப்பான ஸ்டார்ட்அப்TN அமைப்பின் தலைவராகச் சிங்கை ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் கைடென்ஸ் தமிழ்நாடு நிர்வாகம் ஊழியர்களைத் தக்க வைத்துக்கொள்ள, இந்த அமைப்பில் பணியாற்றும் ஊழியர்களுக்கான சம்பளத்தை உயர்த்துவது, பிற மாநில முதலீட்டு ஈர்ப்பு அமைப்புகளில் சேராமல் இருக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கடந்த வாரம் ஆலோசனை செய்யப்பட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிட்டு உள்ளது.

பிற மாநில நிறுவனங்களையும், அதிகாரிகளையும் ஈர்ப்பது குறித்து உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில் இது மாநிலங்களுக்கு மத்தியில் நடக்கும் ஒரு blood sport என தெரிவித்துள்ளார் என இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+