சென்னை: இந்தியாவில் காலம் காலமாக நிலம் ஒரு மதிப்புமிக்க சொத்தாகப் பார்க்கப்படுகிறது. இது குடியிருப்பதற்கு மற்றும் வணிக நோக்கங்களுக்கு மட்டுமில்லாமல், வங்கிகளில் அடகு வைத்து கடன் பெறவும், ஒரு சிறந்த ஆதாரமாக உள்ளது இதனை நிலக்கடன் அல்லது பிளாட் லோன் என்று கூறுவார்கள்.
நீங்கள் பிளாட் லோன் வாங்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தால், அதில் சில முக்கிய அம்சங்களை புரிந்து கொள்வது அவசியம்.

பிளாட் லோன் பெற தகுதிகள் என்னென்ன?: பிசினஸ் விரிவாக்கம் செய்ய, வீடு கட்ட மற்றும் தனிப்பட்ட செலவுகள் போன்ற பல்வேறு பணத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பிளாட் லோன்கள் வாங்கலாம். இதனை நிலம் வைத்திருப்பவர் யார் வேண்டுமானாலும் பெற முடியும்.
இந்த பிளாட் லோனுக்கு தகுதி பெற கடன் வாங்குபவர் சொந்த நிலத்தை வைத்திருக்க வேண்டும். மேலும், அது அவரது பெயரில் இருக்க வேண்டும். கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், உங்களுடைய மனையின் மதிப்பு மற்றும் கடன் செலுத்தக்கூடிய தகுதி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தான் உங்களுக்கு லோன் தர பரிசீலிக்கும்.
கடன் தொகை மற்றும் கடன் காலம்: உங்களுக்கு அனுமதிக்கப்படும் கடன் தொகை உங்களுடைய பிளாட்டின் மதிப்பு, பிளாட் இருக்கும் இடம், கடன் பெறுபவர் திருப்பி செலுத்தும் திறன் போன்ற காரணிகளைப் பொறுத்து ஒவ்வொருவருக்கும் மாறுபடும். பொதுவாக கடன் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் பிளாட்டின் சந்தை மதிப்பை கொண்டு கடன்களை வழங்குகின்றனர். கடன் காலம், ஒவ்வொருவரும் வாங்கும் கடனைப் பொறுத்து மாறுபடலாம்.
பிளாட் லோன்களுக்கு, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கும் வட்டி விகிதங்கள் சந்தை நிலவரங்களைப் பொறுத்து ஃப்ளோட்டிங் வட்டியாகவோ அல்லது பிக்சட் வட்டியாகவோ இருக்கலாம். இதனை நீங்கள் ஆன்லைன் கால்குலேட்டர்களைப் பயன்படுத்தி ஒன்றுக்கு பல நிதி நிறுவங்களின் வட்டியை தெரிந்து கொண்ட பின் லோன் வாங்கலாம்.
பிளாட் லோன் பெற தேவைப்படும் ஆவணங்கள்: நில ஆவணங்கள், பான் கார்டு, ஆதார் கார்டு, இன்கம் சர்டிபிகேட் மற்றும் பெ-ஸ்லிப் ஆகியவை பிளாட் லோன் பெற தேவைப்படும் ஆவணங்களாக உள்ளது.
அபாயங்கள்: நீங்கள் கடனை பெற்றுவிட்டு அதனை சரிவர செலுத்தாமல் இருந்தால் வங்கிகள் மூன்று மாதங்கள் முதல் ஆறு மாதங்கள் வரை உங்களுக்கு அறிவிப்புகளை வழங்கும். அதன் பிறகு உங்களது பெயரை வாராக்கடன் பட்டியலில் சேர்த்து விடும். மேலும் அதன் கடைசி முயற்சியாக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, உங்களுடைய பிளாட் ஏலம் விடப்படும். இதனை கருத்தில் கொண்டு பெறப்பட்ட கடன் தொகைக்கு சரியான நேரத்தில் EMI செலுத்தவும்.
பிளாட் லோன்களின் பலன்கள்: தங்க நகை அடமானங்கள் போல மிகவும் எளிதாக பிளாட் லோன் பெற முடியும். அதற்கு உங்களது பெயரில் ஏதேனும் இடம் இருந்தால் போதுமானது. உங்களின் கிரெடிட் ஸ்கோர் நன்றாக இருந்தால் குறைந்த வட்டி விகிதத்தில் நீங்கள் லோன்களைப் பெறலாம்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications