சென்னை: இந்தியாவும், இந்தியப் பொருளாதாரமும் மாற்றும் எரிபொருள் நோக்கி ஓடிக்கொண்டு இருக்கும் வேளையில் சோலார், காற்றாலை, முதல் கிரீன் ஹைட்ரஜென் வரையில் பல புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாட்டின் தென்மாவட்டமான தூத்துக்குடி இந்தியாவின் ஹைட்ரஜென் ஹைப் ஆக மாறி வருகிறது.
இந்த நிலையில் தூத்துக்குடி-க்கு போட்டியாக குஜராத் மாநில அரசும் ஹைட்ரஜென் உற்பத்தியில் அதிகப்படியான கவனத்தைச் செலுத்தி தற்போது லட்டு மாதிரி ரூ.30,000 கோடி முதலீட்டைப் பெற்றுள்ளது.

தூத்துக்குடியில் கிரீன் ஹைட்ரஜன் தயாரிக்க ACME நிறுவனம் 52,000 கோடி ரூபாயும், Petronas நிறுவனம் 34,000 கோடி ரூபாயும், Sembicorp நிறுவனம் 36,238 கோடி ரூபாயும், Leap Green Energy நிறுவனம் 22,842 கோடி ரூபாயும், NTPC கிரீன் ஹைட்ரஜன்-க்காக மாபெரும் கட்டமைப்பை உருவாக்கி வருகிறது.
தூத்துக்குடிக்குப் போட்டியாக உலோகங்கள் முதல் உட்கட்டமைப்பு வரை பல்வேறு துறைகளில் செயல்பட்டு வரும் எஸ்ஸார் குரூப், கிளீன் எனர்ஜி துறையில் தனது வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்கான முக்கிய தூணாக இருக்க வேண்டும் என்பதற்காக கிரீன் ஹைட்ரஜன் தயாரிப்பு துறையைச் தேர்வு செய்துள்ளது.
இதற்காக குஜராத்தில் உள்ள ஜாம்நகரில் ரூ.30,000 கோடி மதிப்பில் கிரீன் ஹைட்ரஜன் ஆலை அமைக்கத் திட்டமிட்டுள்ளது எஸ்ஸார் குரூப்.
எஸ்ஸார் ஃப்யூச்சர் எனர்ஜி நிறுவனம், அடுத்த நான்கு ஆண்டுகளில் ஜாம்நகரில் 1 கிகாவாட் திறன் கொண்ட ஹைட்ரஜன் உற்பத்தி ஆலை மற்றும் அதனுடன் இணைந்த green molecules ஆலை (1 மில்லியன் டன் ஆண்டு திறன்) அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
ஜாம்நகரில் அமைக்கப்படும் பசுமை ஹைட்ரஜன் ஆலை திட்டத்தில் சுமார் ரூ.30,000 கோடி முதலீட்டில் செய்ய உள்ளதாக எஸ்ஸார் குழுமத்தின் முதலீட்டுப் பணிகளை நிர்வகிக்கும் எஸ்ஸார் கேப்பிட்டல் இயக்குநர் பிரசாந்த் ருயா கூறினார்.
வெறும் தண்ணீரை அடிப்படையாக வைத்துத் தயாரிக்கப்படுகிறது ஹைட்ரஜன் எரிவாயு. இதன் அடிப்படையில் தண்ணீரைப் பிரித்து ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய, எஸ்ஸார் குழுமத்தின் இணை நிறுவனமான எஸ்ஸார் ரெனிவபிள்ஸ்-ன் 4.5 கிகாவாட் மின்சாரத்தைப் பயன்படுத்தும். இதன் மூலம் கிரீன் ஹைட்ரஜன் உருவாக்கப்பட உள்ளது.
பிரசாந்த் ருயா சமீபத்தில் அளித்த பேட்டியில், "எஸ்ஸார் குழுமம், பிரிட்டன் நாட்டில் உள்ள தங்கள் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை டீகார்பன்ஸ் செய்யவும், சவுதி அரேபியாவில் கிரீன் ஸ்டீல் தொழிற்சாலை கட்டமைக்கவும், நீண்ட தூரம் பயணம் செய்யும் கனரக வாகனங்களில் கார்பன் வெளியேற்றத்தை குறைக்க LNG மற்றும் எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டு சூழலை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது. மேலும், மின்சார வாகன பேட்டரிகள், சோலார் பேனல்கள் மற்றும் காற்றாலை டர்பைனில் அதிகம் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய கனிமங்களின் சுரங்க துறையில் நுழைவதையும் பரிசீலித்து வருகிறது" என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications