குஜராத் அரசின் ராஜதந்திரம் 'மொத்தமும் எங்களுக்கு தான்'.. தென்னிந்திய மாநிலங்கள் பெரும் ஏமாற்றம்..?

இந்தியாவின் அடுத்த கட்ட வளர்ச்சி என்பது எலக்ட்ரிக் வாகனம், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி ஆகியவற்றில் தான் என நம்பப்படும் வேளையில் இதற்கு அடித்தளமாக இருக்கும் செமிகண்டக்டர் சிப் தயாரிப்பை இந்தியாவில் விரிவாக்கம் செய்வதன் மூலம் இந்திய தயாரிப்பை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து சீனாவுக்கு இணையாக வர முடியும் என கணிக்கப்பட்டு உள்ளது.

இதற்காகவே செமிகண்டக்டர் துறையில் பல சலுகைகள் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் நடைப்பெற்ற SEMICON INDIA 2023 கூட்டத்தில் செமிகண்டக்டர் துறையில் இருக்கும் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கும் பட்சத்தில் அவர்களுக்கு 50 சதவீத நிதியியல் உதவி வழங்க உள்ளதாக அறிவித்தார்.

குஜராத் அரசின் ராஜதந்திரம் 'மொத்தமும் எங்களுக்கு தான்'.. தென்னிந்திய மாநிலங்கள் பெரும் ஏமாற்றம்..?

இந்த அறிவிப்பு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பப்படும் வேளையில் குஜராத் மாநில அரசு பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக செமிகண்டக்டர் பிரிவு வர்த்தகத்தை மொத்தமாக ஈர்த்து இந்தியாவின் செமிகண்டக்டர் ஹப் ஆக மாற வேண்டும் என இலக்கு நிர்யணம் செய்துள்ளது. இதற்காக செமிகண்டக்டர் உற்பத்தி மற்றும் அதை சார்ந்த சேவை, வர்த்தக பிரிவில் முதலீடுகளை ஈர்க்க உலகளவில் 100 நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

இதுகுறித்து குஜராத் மாநில உயர் அதிகாரி கூறுகையில் குறைந்தது 6 நிறுவனங்களிடம் செமிகண்டக்டர் வேஃபர் ஃப்ரிகேஷன், டிஸ்ப்ளே ஃப்ரிகேஷன், OSAT நிறுவனங்கள் மற்றும் இத்துறை சார்ந்த சப்ளையர்களிடம் முக்கிய கட்ட பேச்சுவார்த்தையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் இனி ஒவ்வொரு 3 மாதத்திற்கும் செமிகண்டக்டர் துறையில் மெகா முதலீட்டு திட்டங்களின் அறிவிப்பு வெளியாகும், ஒவ்வொன்றும் பில்லியன் டாலர் மதிப்பீட்டில் தான் இருக்கும், இதேபோல் ஒவ்வொரு மாதமும் 1000 முதல் 2000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்ட அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புகள் உள்ளது.

இந்திய அரசு உலக நாடுகளில் இருக்கும் செமிகண்டக்டர் துறை நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி, சிப், டெஸ்டிங், பேகேஜ் தளத்தை அமைக்க ஊக்குவிக்கும் வகையில் சுமார் 10 பில்லியன் டாலர் மதிப்பிலான நிதி சலுகையை அளிக்க நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

குஜராத் அரசின் ராஜதந்திரம் 'மொத்தமும் எங்களுக்கு தான்'.. தென்னிந்திய மாநிலங்கள் பெரும் ஏமாற்றம்..?

இது ஒருபக்கம் இருக்க குஜராத் மாநில அரசு தனிப்பட்ட முறையில் செமிகண்டக்டர் துறை நிறுவனங்கள் செய்யும் முதலீட்டில் 25 சதவீத மானியம், இதுபோக மானிய விலையில் நிலம், மின்சாரம் மற்றும் இதர சேவைகளையும் வழங்க உள்ளது. இது அனைத்து வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஜாக்பாட் ஆக உள்ளது.

100 நிறுவனங்கள் உடன் பேச்சுவார்த்தை, மாநில அரசு சார்பில் முதலீட்டில் 25 சதவீத மானியம், மானிய விலையில் நிலம், மானிய விலையில் மின்சாரம் என சலுகைகள் அள்ளி வீசப்பட்டு வரும் வேளையில் மொத்த செமிகண்டக்டர் நிறுவனமும் குஜராத்-க்கு தான் போகும்.. மற்ற மாநிலங்களுக்கு செமிகண்டக்டர் துறையில் பெரும் வாய்ப்பை இழக்கிறதா..?

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+