இந்தியாவில் உணவு பொருட்கள் மட்டும் அல்லாமல் சிலிண்டர் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ள நிலையில், சாமானிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
நடுத்தரக் குடும்பத்தில் பெட்ரோல், சிலிண்டர், உணவு பொருட்களுக்கு மட்டுமே மாத வருமானத்தில் பெரும் பகுதியை செலவிட வேண்டிய கட்டாயம் உள்ளது.
இந்த நிலையில் ஒவ்வொரு குடும்பத்திற்கு வருடம் 2 சிலிண்டர்களை இலவசமாக அளிப்பதாகக் குஜராத் அரசு தெரிவித்துள்ளது.
குஜராத் அரசு
குஜராத் அரசு திங்கட்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடம் 2 எல்பிஜி சிலிண்டர்களை இலவசமாக அளிக்கப்படும் என அறிவித்துள்ளது. இதன் மூலம் வருடம் 2000 ரூபாய்க்கு மேல் பணத்தை மிச்சப்படுத்த முடியும் என்பதால் மக்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
2 சிலிண்டர் இலவசம்
இந்த அறிவிப்பை வெளியிட்ட குஜராத் கல்வித்துறை அமைச்சரான ஜிது வகானி கூறுகையில், மாநில அரசு 18 லட்சம் குடும்பத் தலைவிகளை மனதில் வைத்துக்கொண்டு, அவர்களின் சுமை மற்றும் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பதற்காக வருடம் 2 சிலிண்டர் இலவசம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதிப்பு கூட்டு வரிக் குறைப்பு
குஜராத் மாநிலத்தில் சட்டசபை சேர்தல் நடக்க உள்ள நிலையில் ஆளும் கட்சியான பிஜேபி மக்களைக் கவர வேண்டும் என்பதற்காக வருடம் 2 சிலிண்டர் ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவசம் என்று அறிவிப்பதற்கு முன்பு CNG மற்றும் PNG மீது 10 சதவீத மதிப்புக் கூட்டு வரியை குறைத்தது.
650 கோடி ரூபாய் சுமை
வருடம் 2 சிலிண்டர் இலவச திட்டம் மூலம் மாநில அரசுக்கு 650 கோடி ரூபாய் அளவிலான கூடுதல் சுமை ஏற்பட்டாலும், மக்களின் கைகளுக்கு 1700 ரூபாய் வரையில் கிடைக்கும். மேலும் குஜராத் மாநிலத்தின் தேர்தல் நாள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
பிஜேபி அரசு
ஒருபக்கம் மத்தியில் இருக்கும் பிஜேபி அரசு இலவசங்கள் அளிப்பது குறித்துக் கடுமையான விமர்சனம் செய்து வரும் நிலையில், பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா-வின் சொந்த மாநிலமான குஜராத்தில் சிலிண்டர் இலவசமாக அளிப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications