இந்தியா தற்போது செமி கண்டக்டர் துறையில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் குஜராத் மாநில அரசு செமி கண்டக்டர்களுக்கான தனிக் கொள்கையை வகுத்துள்ளது. குஜராத் மாநிலம் செமி கண்டக்டர் உற்பத்தி மையமாக மாற வேண்டும் என்ற நோக்கத்தில் அம்மாநிலரசு குஜராத் செமி கண்டக்டர் பாலிசி 2022 -2027 என்பதை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.
முதலமைச்சர் பூபேந்திர பட்டேலின் தலைமையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள இந்த கொள்கையின் அடிப்படையில் செமி கண்டக்டர் துறையில் பெருமளவிலான முதலீடுகளை ஈர்ப்பது இலக்காக கொண்டுள்ளது. தற்போது சர்வதேச அளவில் பல்வேறு நிறுவனங்களும் தங்களுடைய செமி கண்டக்டர் ஆலைகளை குஜராத் மாநிலத்தில் தான் நிறுவி இருக்கின்றன.

அண்மையில் கூட முதலமைச்சர் பூபேந்திர படேல் மைக்ரான் நிறுவனத்தின் செமி கண்டக்டர் ஒருங்கிணைப்பு ,சோதனை மற்றும் பேக்கிங் ஆலைக்கான அடிக்கல் நாட்டினார். 2500 கோடி ரூபாய் முதலீட்டில் இந்த செமி கண்டக்டர் ஆலை செயல்பட இருக்கிறது.
அதேபோல தோலரா பகுதியில் டாடா நிறுவனம் சார்பாக தைவான் நிறுவனத்தோடு இணைந்து இந்தியாவின் முதல் செமி கண்டக்டர் உற்பத்தி ஆலை நிறுவப்பட்டு வருகிறது. இது 91 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது.
அது மட்டும் இன்றி சிஜி பவர் மற்றும் ரெனிசார்ஜ் என்ற நிறுவனம் 7500 கோடி ரூபாய் முதலீட்டில் சனாந்த் பகுதியில் மற்றொரு செமி கண்டக்டர் ஆலையை நிறுவ இருக்கிறது. கேனஸ் என்ற நிறுவனம் இதே பகுதியில் ஒரு நாளைக்கு 6 மில்லியன் செமி கண்டக்டர்களை உற்பத்தி செய்யும் வகையில் 3300 கோடி முதலீடு செய்திருக்கிறது.
இந்தியாவில் தற்போது செமி கண்டக்டர் ஆலைகள் அதிக எண்ணிக்கையில் நிறுவப்பட்டுள்ள மாநிலமாக குஜராத் மாநிலமே இருக்கிறது. அதுமட்டுமின்றி குஜராத் மாநில அரசு தங்களுடைய இந்த புதிய கொள்கை மூலம் செமி கண்டக்டர் நிறுவனங்களுக்கு அவற்றின் மூலதன செலவினத்தில் 40 சதவிகித மானியம், 100% ஸ்டாம்ப் டூட்டி திரும்ப வழங்கும் முறை என்பன உள்ளிட்ட வசதிகளை வழங்குகிறது.
அதேபோல இந்த நிறுவனங்களுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரம் தள்ளுபடி விலையில் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளத.
குஜராத்தில் இதற்காக ஒரு நகரமே உருவாக்கப்பட்டு செமி கண்டக்டர் நகரம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் செமி கண்டக்டர் நிறுவனங்களுக்கு 75% மானிய விலையில் நிலங்கள் வழங்கப்படுகின்றன. தற்போது இந்த செமி கண்டக்டர் கொள்கையின் மூலம் குஜராத் மாநில அரசு 53 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளது.
Written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!



Click it and Unblock the Notifications